Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை அனுஷ்கா - அது என்ன நோய்?
அனுஷ்கா ஷெட்டி பாதிக்கப்பட்டுள்ள அந்த நோயின் பெயர் என்ன, அதன் அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் யாருக்கெல்லாம் இந்நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.
Actress Anushka Shetty Suffering From A Rare Disease: கடந்த சில மாதங்களாக இந்திய நடிகைகள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதில் நடிகை சமந்தா அரிய வகை தசை நோயான மயோசிடிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ் நிறமிழப்பு பிரச்சனையை சந்திப்பதாக தெரிவித்தார். அதேப் போல் ஸ்ருதிஹாசனும் தான் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில் மிகவும் பிரபலமான, பலரது கனவு கன்னியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்டர்வியூ ஒன்றில், தான் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நோய் தாக்கத்தால் இவர் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 20 நிமிடம் சிரிப்பாராம். இதை அவரால் கட்டுப்படுத்த முடியாதாம். என்ன ஒரு கொடுமையான நோய் என்று பாருங்கள். சரி, அனுஷ்கா ஷெட்டி பாதிக்கப்பட்டுள்ள அந்த நோயின் பெயர் என்ன, அதன் அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் யாருக்கெல்லாம் இந்நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.

சூடோபுல்பார் (Pseudobulbar)
நடிகை அனுஷ்கா பாதிக்கப்பட்டுள்ள நோயின் பெயர் தான் சூடோபுல்பார். இந்நிலையில் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு அல்லது அழுகை ஏற்படும். பொதுவாக இந்த சூடோபுல்பார் நிலையானது நரம்பியல் பிரச்சனைகள் அல்லது நரம்பியல் காயங்களைக் கொண்டவர்களுக்கு ஏற்படும். இந்நிலையானது மூளை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் பாதிக்கிறது.
சூடோபுல்பார் பிரச்சனையைக் கொண்டவர்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமான உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் தங்களின் உணர்ச்சிகளை அளவுக்கு அதிகமாக அல்லது வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக அன்றாட வாழ்க்கையில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள்
சூடோபுல்பாரின் பொதுவான அறிகுறி என்றால், அது கட்டுப்படுத்த முடியாத, அடிக்கடி அழுகை மற்றும் சிரிப்பு வருவதாகும். மேலும் இந்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமாகத் தான் இருப்பார்கள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இந்த அழுக்கை அல்லது சிரிப்பு ஏற்படும். பெரும்பாலும் இந்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் சிரிப்பை விட அழுகையையே அதிகம் சந்திப்பார்கள். மேலும் சூடோபுல்பார் பாதிப்பு உள்ளவர்களிடையே மனச்சோர்வு இருக்கும்.

யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புள்ளது?
பெரும்பாலும் சூடோபுல்பார் பிரச்சனையானது நரம்பியல் பிரச்சனை அல்லது நரம்பியல் காயங்களைக் கொண்டவர்களுக்கு ஏற்படும். அந்த நரம்பியல் பிரச்சனைகள் பின்வருமாறு:
* பக்கவாதம்
* அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS)
* மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (MS)
* மூளையில் கடுமையான காயம்
* அல்சைமர் நோய்
* பர்கின்சன் நோய்

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?
உங்களுக்கு சூடோபுல்பார் இருப்பதை உணர்ந்தால், உடனே மருத்துவரிடம் தங்களின் நிலை குறித்து கூற வேண்டும். அதுவும் உங்களுக்கு ஏற்கனவே நரம்பியல் பிரச்சனைகள் இருந்து, சூடோபுல்பாரின் அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் மருத்துவரிடமே இதுக்குறித்து பேசலாம். பெரும்பாலும் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நரம்பியல் உளவியலாளர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை அணுக வேண்டும்.

சிக்கல்கள்
சூடோபுல்பார் பாதிப்பின் அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், அது அந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மிகுந்த சங்கடத்தையும், மனக்கவலை, மனச்சோர்வு மற்றும் சமூகத்தில் இருந்து தனித்து இருப்பது போன்ற உணர்வு எழும். முக்கியமாக இந்த பாதிப்பானது ஒருவரது தினசரி வேலையை கூட செய்யவிடாமல் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் ஏற்கனவே நரம்பியல் பிரச்சனையைக் கொண்டிருந்தவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் இன்னும் சிரமமாக இருக்கும்.
நிறைய பேருக்கு இம்மாதிரியான ஓர் பிரச்சனை இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் இம்மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு இதுக்குறித்து தெரியப்படுத்தி, மருத்துவரை அணுக சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications
