For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாடி அதிகம் இருந்தால் கொரோனா சீக்கிரம் வந்துடும் என்பது உண்மையா? அப்ப எந்த மாதிரியான தாடி வெக்கலாம்?

பெரிய, புதர் போன்ற, அடர்த்தியான தாடி மற்றும் மீசை முகத்தில் இருந்தால், மாஸ்க்கை சரியான முறையில் அணிய இடையூறு விளைவிப்பதாகவும், கொரோனா தொற்றுக்கு ஒரு பெரிய பாதையை அமைத்துத் தருவதாகவும் கூறப்படுகிறது.

|

கொரோனா வைரஸ் மக்களிடையே தனி மனித சுகாதாரத்தைக் கற்றுக் கொடுத்துள்ளதோடு, மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. தினந்தோறும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை அபாயகரமான எண்ணிக்கையில் அதிகரித்தவாறு உள்ளன. கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அது சிலருக்கு அறிகுறிகளைக் காட்டுவதோடு, பலருக்கு எந்த ஒரு அறிகுறியையும் காட்டாமல் இருப்பதால், மேலும் அச்சம் எழுகிறது.

A Grown Beard Can Increase Risk Of COVID-19 Transmission

தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நெருங்கிய தொடர்பு கொண்டால் பரவும் என்பதால், சலூன் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி செல்லும் பெண்கள் சற்று கஷ்டப்பட்டாலும், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு தங்கள் அழகைப் பராமரித்துக் கொள்கிறார்கள்.

MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

ஆனால் ஆண்களோ சற்று சோம்பேறித்தனம் கொண்டவர்கள். சலூன் கடைகள் மூடி இருந்தால், திறக்கும் போது போகலாம் என்று நினைப்பவர்கள். இதன் விளைவாக தற்போது பல ஆண்கள் தாடியுடன் தேவதாஸ் போன்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

MOST READ: ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களுக்கு தாடி அழகு

ஆண்களுக்கு தாடி அழகு

பொதுவாக ஆண்களுக்கு தாடி இருந்தால் தான் அழகு. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தாடி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. எவ்வளவு தாடி வைத்துள்ளார்களோ, அவ்வளவு அழுக்கு, கிருமிகள் அந்த தாடியில் இருக்கும். அப்படியென்றால் நீளமான தாடி வைத்திருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளதா என்று நீங்கள் கேட்கலாம்.

வைராலஜிஸ்ட் கூற்று

வைராலஜிஸ்ட் கூற்று

கொடிய வைரஸ்களைப் பற்றி படிக்கும் ஒரு வைராலஜிஸ்ட், பெரிய, புதர் போன்ற, அடர்த்தியான தாடி மற்றும் மீசை முகத்தில் இருந்தால், அது மாஸ்க்கை சரியான முறையில் அணிய இடையூறு விளைவிப்பதாகவும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஒரு பெரிய பாதையை அமைத்துத் தருவதாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.

மாஸ்க்கின் செயல்திறனை பாதிக்கும்

மாஸ்க்கின் செயல்திறனை பாதிக்கும்

குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்களைப் பற்றி படித்த குயின்ஸ்லாந்தின் கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நைகல் மக்மில்லன், ஹிப்ஸ்டர் தாடி, டிசைனர் ஸ்டப்புள் மற்றும் சர்ஜிகல் கிரேட்ஸ் போன்ற பிரபலமான தாடிகள், பாதுகாப்பிற்காக அணியும் மாஸ்க்கின் செயல்திறனான வாய், மூக்கு போன்ற பகுதியை மறைக்க சவால் நிறைந்ததாக இருப்பதாக டெய்லி மெயில் ஆஸ்திரேலியாவிடம் கூறினார்.

தாடி மற்றும் மாஸ்க்

தாடி மற்றும் மாஸ்க்

கொரோனா வைரஸ் பரவ முக்கிய காரணிகளாக இருக்கும் காற்றில் உள்ள நீர்த்துளிகள், உடலுக்குள் நுழைய முகம், வாய் மற்றும் மூக்கு பகுதியை பயன்படுத்துவதால், அப்பகுதியை மறைப்பதற்கு மாஸ்க்குகள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொற்றுநோய்களின் போது, முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் டெலிவரி வேலைகளைப் புரிபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அதற்கு அவர்கள் தினந்தோறும் ஷேவிங் செய்ய வேண்டும். மேலும் கொரோனா வைரஸிடம் இருந்து முழுமையான பாதுகாப்பிற்காக அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் எந்த மாதிரியான தாடி மற்றும் மீசை ஸ்டைலை மேற்கொள்ளலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கான விடையைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

எந்த மாதிரியான தாடி மற்றும் மீசை ஸ்டைலை மேற்கொள்ளலாம்?

எந்த மாதிரியான தாடி மற்றும் மீசை ஸ்டைலை மேற்கொள்ளலாம்?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) படி, எப்போது முகத்தில் முடி எதுவும் இல்லாமலோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கிறதோ, அப்போது முகத்திற்கு அணியும் மாஸ்க் நன்கு வேலை செய்யும். அதாவது மூக்கு, வாய் போன்ற பகுதிகள் இடைவெளியின்றி நன்கு மூடி பாதுகாப்பாக இருக்கும்.

ஆனால் பெரிய மற்றும் புதர் போன்ற தாடி இருந்தால், அப்போது மாஸ்க் அணியும் போது அது இடைவெளியை உண்டாக்கி, வைரஸ் எளிதில் உட்புகுந்து தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தாடி, மீசை பெரிதாக இருந்தால், அவற்றை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவ் செய்துவிடுங்கள். மேலும் படத்தில் கொட்டப்பட்டுள்ளவாறு 12 தாடி ஸ்டைல்களை மேற்கொள்வது பாதுகாப்பானது என்று சிடிசி பரிந்துரைக்கிறது. அதோடு தினமும் ஷாம்பு பயன்படுத்தி தாடியை கழுவவும் அறிவுறுத்தப்படுகிறது. இதனால் கொரோனா தொற்றுக்களின் அபாயம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Grown Beard Can Increase Risk Of COVID-19 Transmission

Basic hygiene is a must when it comes to keeping safe from the novel coronavirus. Know how beard health can make a difference.
Story first published: Wednesday, July 15, 2020, 13:25 [IST]
Desktop Bottom Promotion