Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?
ஒருவருக்கு பைல்ஸ் பிரச்சனை இருந்தால், மலப்புழையில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படும் மற்றும் உட்காரும் பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.
பைல்ஸ் என்னும் நிலை மலப்புழையின் உட்பகுதியில் உள்ள நரம்புகளின் வீக்கத்தால் ஏற்படுவதாகும். இதனை மூல நோய் என்றும் அழைப்பர். பெரும்பாலும் இந்த பிரச்சனையால் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு பைல்ஸ் பிரச்சனை இருந்தால், மலப்புழையில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படும் மற்றும் உட்காரும் பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். மற்ற நோய்களைப் போன்று, பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சித்தால், பெரும் சங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம்.

பைல்ஸ் பிரச்சனையின் முக்கிய அறிகுறியே இரத்தப்போக்கு தான். ஒருவேளை இரத்தப்போக்கு வலிமிகுந்ததாக இல்லை என்றாலும், இந்த நோய் குடல் கட்டுப்பாடு இழப்பு, இரத்த சோகை மற்றும் குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பைல்ஸ் ஒருவருக்கு குறிப்பிட்ட சில அன்றாட பழக்கவழக்கங்களால் உருவாகிறது. இப்போது அந்த பழக்கவழக்கங்கள் எவையென்று காண்போம்.

பைல்ஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள்
* மலப்புழையில் இரத்தக்கசிவு
* மலம் கழிக்கும் போது வலி
* மலச்சிக்கல்
* மலத்தில் சளி
* ஆசனவாயின் வெளிப்புற விளிம்பில் உள்ள நரம்புகளில் கட்டிகள்
இப்போது பைல்ஸ் பிரச்சனைக்கு காரணமான அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம்.

நீண்ட நேரம் கழிவறையில் இருப்பது
நீங்கள் கழிவறையில் மொபைலைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் இருப்பவராயின், உடனே அப்பழக்கத்தை மாற்றுங்கள். ஏனெனில் இப்பழக்கம் இருப்பவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கழிவறையில் நீண்ட நேரம் அதிக அழுத்தத்துடன் மலத்தைக் கழிக்கும் போது ஆசனவாயில் உள்ள நரம்புகளில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக பைல்ஸ் உண்டாக்கிறது.

நார்ச்சத்து குறைவான உணவை உண்பது
வழக்கமான மற்றும் சௌகரியமான குடல் இயக்கங்களுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். யார் ஒருவர் குறைவான அளவில் நார்ச்சத்தை எடுக்கிறாரோ, அவர்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். மலச்சிக்கலின் போது மலத்தைக் கழிக்க மலக்குடல் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஆசனவாய் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, மூலநோயை ஏற்படுத்தும்.

மலத்தைக் கட்டுப்படுத்துவது
நம்மில் பலர் வெளியே சென்றால் பொது கழிவறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வீட்டிற்கு வரும் வரை மலத்தைக் கட்டுப்படுத்துகிறோம். ஆய்வுகளில் இப்படி மலத்தை நீண்ட நேரம் கட்டுப்படுத்துவதால், ஆவனவாய் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, மூல நோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. உங்களுக்கு மலத்தைக் கட்டுப்பத்தும் பழக்கம் இருப்பின், உடனே அதை மாற்றுங்கள்.

உடல் வறட்சி
ஆய்வுகளில் ஒருவரது உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால், மலச்சிக்கலை உண்டாக்குவதோடு, இதர நோய்களையும் உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. போதுமான நீர்ச்சத்து இல்லாமை வலிமிக்க மலச்சிக்கலை உண்டாக்கும். அதோடு டீ, காபி அல்லது கார்போனேட்டட் பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்த்து, நீரை அதிகம் குடித்தால் தான் குடலியக்கம் சிறப்பாக இருக்கும்.

உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், நமது பல வேலைகளை கம்ப்யூட்டர் மௌஸின் ஒரு கிளிக்கில் செய்து முடிக்கிறோம். இது நமக்கு வசதியானதாக இருக்கலாம். ஆனால் இதனால் நமது உடல் தசைகள் வலிமையாவதற்கு பதிலாக பலவீனமாகிறது. மேலும் இதன் விளைவாக உடல் பருமன் அதிகரித்து பைல்ஸ் பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது. ஆகவே பைல்ஸ் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஒழுங்கற்ற டயட் பழக்கங்கள்
அதிகப்படியான ஜங்க் உணவுகள் அல்லது காரமான உணவுகளை உண்ணும் போது, மலக்குடல் தசைகளில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, பைல்ஸிற்கு வழிவகுக்கும். மேலும் முறையற்ற உணவு பழக்கங்கள் வயிற்றுப்போக்கையும் உண்டாக்கி, மலக்குடல் நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதோடு, வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

ஒழுங்கற்ற உடல் உறவுகள்
மகளிர் மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் ஆசனவாய் போன்ற ஒழுங்கற்ற உடலுறவுக்கு எதிராக ஆலோசனையைக் கூறுகிறார்கள். ஏனெனில் இது பைல்ஸிற்கும், பிற நோய்களுக்கும் வழிவகுக்கும். மேலும், மலக்குடலில் எந்த ஒரு பொருட்களை செருகினாலும், ஆசனவாய் உள்ளேயும், அதைச் சுற்றியும் இருக்கும் மென்மையான நரம்புகளுக்கு சேதம் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications