Latest Updates
-
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
நீங்க இதுல எப்படி 'i' எழுதுவீங்கன்னு சொல்லுங்க... உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
மனிதனின் கையெழுத்திற்கும் அவரது குணத்திற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளதாம். எனவே உங்க தலையெழுத்தை மாற்ற நீங்க உங்க கையெழுத்தை மாற்றினாலே போதுமாம்.
கோபம் என்பது மனிதனுக்கு கூடவே பிறந்த ஒரு குணம். தன்னுடைய ஆற்றாமையை எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் கோபமாக வெளிப்படுத்துவோம். இந்த கோபத்தால் ஏற்படும் விளைவுகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்பார்கள். சரியான டென்ஷன் பேர் வழியாக இருக்கிறார்கள் என்று நாம் பலரை சொல்வதும் உண்டு.
நாம் வெளிக்காட்டும் கோபத்தால் ஒரு காரியமும் நடக்காது என்கிறது உளவியல். காரணம் கோபம் நம் உறவுகளை எளிதாக முறித்து விடும். கோபப்பட்டால் சிலருக்கு இரத்த அழுத்தம் கூடி இதய நோய்கள் வர வாய்ப்புள்ளதாம். எனவே தான் மனிதன் இந்த கோபத்தை குறைக்க தியானம், யோகா, 1-லிருந்து 50 வரை எண்றது, மூச்சுப் பயிற்சி, தண்ணீர் குடிப்பது, சிரிப்பு என்று எதையாவது கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த முயலுகிறோம். ஆனால் இந்த கைவந்த கலைகள் எல்லாம் கோபத்தை கட்டுப்படுத்த எல்லா சமயங்களிலும் உதவியது கிடையாது.
சிலருக்கு எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கு என்று கோபம் வரும். இதை அவரது குணமாக பார்த்தால் கூட சில பெரியவங்க சொல்வாங்க அது அவனோட தலையெழுத்து என்று. உண்மையில் சொல்லப்போனால் அதான் உண்மை என்கிறது கிராபாலஜி. மனிதனின் கையெழுத்திற்கும் அவரது குணத்திற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளதாம். எனவே உங்க தலையெழுத்தை மாற்ற நீங்க உங்க கையெழுத்தை மாற்றினாலே போதுமாம். அதெப்படி என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

கிராபாலஜி
நமது கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு கிராபாலஜி என்று பெயராம். இது அன்றைய காலத்தில் பின்பற்றிய ஒரு கலை. இந்த கலையின் மூலம் ஒருவரின் கையெழுத்தை படித்தே அவரது குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்கிறார்கள் கையெழுத்து வல்லுநர்கள். கிட்டத்தட்ட நம் கைரேகை ஜோதிடம் மாதிரி தான் நண்பர்களே.
நம் ஆழ்மனதில் எழும் கோபத்தை ஆற்ற நம் எழுத்து வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்கிறார் கிராபாலஜி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் திரு வினித் பன்சோட் அவர்கள். எனவே கிராபாலஜி மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்த அவர் நமக்கு 5 விதமான வழிகளை இங்கே கூறியுள்ளார்.

டி கிராஸ்பார் (t crossbar)
நாம் போடும் t என்ற எழுத்தை வைத்தே நாம் கோபமான நபரா இல்லையா என்பதை கண்டறியலாம் என்கிறது கிராபாலாஜி. நீங்கள் போடும் t யின் நடுவே உள்ள கோடு வலதுபுறத்தில் அமைந்து இருந்தால் அவருக்கு கோபம் அதிகமாக வருமாம். எனவே உங்க கோபத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் t யை சரியான முறையில் போட பயிற்சி செய்யலாம். இதன் மூலம் உங்க கோபத்தை குறைக்க முடியும் என்கிறது எழுத்து ஆய்வுகள்.

எழுத்துகளில் பயன்படுத்தும் கொக்கிகள்
அதே மாதிரி ஒரு எழுத்துக்களை எழுதுவதற்கு முன்பாக அதில் போடப்படும் கொக்கிகளும் ஒருவருக்கு ஆழ்மன கோபங்களை காட்டுகிறது. எனவே எழுதும் போது பழக்கமான இந்த கொக்கிகளை சரி செய்வதன் மூலம் உங்க கோபங்களை கட்டுப்படுத்தலாம்.

i மற்றும் j யில் வைக்கப்படும் புள்ளிகள்
அதே மாதிரி ஒருவர் i மற்றும் j யில் வைக்கப்படும் புள்ளிகள் அழுத்தமாகவும் கனமாகவும் இருந்தால் அவர் கோபப்படும் நபராக இருப்பாராம். எனவே அப்படி அழுத்தமாக வைப்பதை தவிர்த்து ஒரு எளிய லேசான புள்ளியை வைக்க பழகுவதன் மூலம் உங்க கோபத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறது கிராபாலாஜி.

கையெழுத்து போடும் போது முழுப்பெயரையும் இடுவது
முழுமையான பெயரை எழுதுவது, குடும்ப பெயருடன் முழுப்பெயரையும் எழுதுவது, இன்ஷியல் தெளிவாக தெரியும் படி எழுதுவது நம் ஆழ்மன பண்புகளை திட்டமிட உதவுகிறது. இதன் மூலம் தலைமை பண்புகளையும் வெளிப்புற பண்புகளையும் வளர்த்துக் கொள்ள முடியுமாம்.

அடிப்படை கையொப்பம்
கையொப்பம் இடும் போது எழுத்துகள் ஏறு முகமாக இருக்க வேண்டுமாம். மேலும் போடுகின்ற கையெழுத்து தெளிவாகவும் இருக்க வேண்டுமாம். இதன் மூலம் ஆழ்மன திட்டமிடல் தெளிவாகவும் துல்லியமாகவும் அமையுமாம். இதன் மூலம் உங்களுக்கு கோபம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

கோபத்தால் ஏற்படும் விளைவுகள்
கோபம் என்பது அனைவருக்கும் வரும் தீவிர உள்ளார்ந்த உணர்ச்சி. ஆனால் இதை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறோம். அடிக்கடி கோபப்படுபவர்களை யாருக்கும் பிடிக்காது, உங்களுடன் உறவில் இருக்க எல்லாரும் யோசிப்பார்கள். எனவே உங்க கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு உங்கள் கையெழுத்து உதவுகிறது என்றால் தேவைப்படும் மாற்றங்களை செய்யுங்கள். உங்க கோபமும் குறையும் உறவும் கூடி வரும்.



Click it and Unblock the Notifications