Latest Updates
-
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது!
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்..
Personality Test: நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு குணாதிசயங்களுடன் வேறுபட்டிருப்போம். இந்த குணாதிசயங்களை பல சுவாரஸ்யமான ஆளுமை சோதனைகளின் மூலம் அறியலாம். இப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் பல்வேறு ஆளுமை சோதனை படங்கள் இணையத்தில் ஏராளமாக உலா வருகின்றன. அப்படி ஒருவரது மறைந்திருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு போட்டோ தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு அழகான நீல நிற கடற்கரையில் 4 விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் எந்த மாதிரியான நபர் என்பதை கூறுங்கள். முக்கியமாக ஆழமாக யோசிக்காமல், பார்த்ததும் உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டது என்பதன் அடிப்படையில் நொடியில் தேர்ந்தெடுக்க வேண்டும். அது உங்களின் மறைந்திருக்கும் ஆளுமையைப் பற்றி தெரியப்படுத்தும்.
இது ஒரு அறிவியல் பூர்வமான மதிப்பீடு அல்ல என்றாலும், இது உங்கள் ஆளுமையை அறிய உதவும் ஒரு வேடிக்கையான ஆழ்மனச் சோதனையாகும். இதன் மூலம், நீங்கள் புதிய அனுபவங்கள், உணர்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை இயல்பாக எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தக்கூடும்.
1. அலைகளை நோக்கி ஓடுவது
நீங்கள் கடற்கரைக்கு சென்றதும், அலையை நோக்கி ஓடுபவரானால், நீங்கள் புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு, செயலில் இறங்குவதன் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு நபர் என்று இந்த ஆழ்மன சோதனை ஆளுமை சுட்டிக்காட்டுகிறது. என்ன நடக்கிறது என்று நீங்கள் சிந்திக்கவோ அல்லது அது அர்த்தமுள்ளதா என்று கேள்வி எழுப்பவோ இல்லை. நீங்கள் வாழ்க்கையை ஆர்வத்துடனும் தைரியத்துடனும் அணுக முனைகிறீர்கள். மேலும், எல்லா பதில்களும் உங்களுக்குக் கிடைப்பதற்கு முன்பே, ஒரு விஷயத்தை செய்ய நீங்கள் பெரும்பாலும் தயாராக இருப்பீர்கள்.
2. அசையாமல் நீரில் நின்று கொண்டிருப்பது
நீங்கள் நீரில் அசையாமல் நின்று கொள்ள விரும்புபவரானால், நீங்கள் யதார்த்தமானவர், ஆழ்ந்து சிந்திப்பவர், மேலும் வாழ்க்கையை அதன் போக்கில் செல்வதை இயல்பாக ஏற்றுக் கொள்பவர். மேலும் நீங்கள் நிகழ்காலத்தில் அக்கறை கொண்டவராக இருப்பீர்கள். மற்றவர்கள் அவசரமாக முன்னேறிச் செல்லும் போது தவறவிடும் விஷயங்களை நீங்கள் காண்பீர்கள். உங்கள் அசைவின்மை என்பது தயக்கம் அல்ல; அது விழிப்புணர்வு.
3. உட்கார்ந்து நீரில் விளையாடுதல்
நீங்கள் கடற்கரை நீரில் உட்கார்ந்து விளையாட விரும்புபவரானால், நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராகவும் , உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவராகவும் இருப்பீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை அனுபவிக்கும்போது, உங்கள் சொந்தக் கண்ணோட்டத்தையும் அதில் சேர்க்காமல் இருப்பது அரிது. அனுபவங்களுக்குப் பொருள் காணும் ஒரு தனித்திறமை உங்களிடம் உள்ளது. நீங்கள் வாழ்க்கையை ஒரு செயலற்ற அனுபவமாகப் பார்க்காமல், ஒரு கூட்டு முயற்சியாகப் பார்க்கிறீர்கள்.
4. கரையில் அமர்ந்து அலைகளை பார்ப்பது
நீங்கள் கடற்கரையில் அமர்ந்து அலைகளை பார்ப்பதை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் சிந்தனைமிக்கவர், பொறுமையானவர், மேலும் உங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி மிகுந்த விழிப்புணர்வு கொண்டவர். நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்புகிறீர்கள், தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளிப்பீர்கள். ஒவ்வொரு விஷயத்திற்கும் உடனடிப் பதில் தேவையில்லை என்பதையும் புரிந்து நடப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
