Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இதுல நீங்க எப்படி கையை கட்டி நிப்பீங்க-ன்னு சொல்லுங்க.. உங்களோட ஸ்பெஷல் என்ன-ன்னு சொல்றோம்..
Personality Test: ஒவ்வொருவருக்கும் தங்களின் ஆளுமை குணத்தை மற்றவர்கள் கணித்து கூறும் போது, அதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். பொதுவாக ஒருவரது குணங்களை அந்நபரின் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். இது தவிர உடலின் அம்சங்களைப் பொறுத்தும், ஆளுமையை கணிக்க முடியும்.
குறிப்பாக கை, கால் விரல்களின் அளவு, வடிவம் முதல் மூக்கு, காது, புருவம், உதடுகள் மற்றும் முகத்தின் வடிவத்தைக் கொண்டும் ஆளுமையை கூற முடியும். இப்படியான ஆளுமை சோதனைகள் அறிவியல் ரீதியாக சிறந்தவை. மேலும் பல கார்பரேட் அலுவலகங்களிலும் தேர்வுகளின் போது பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு தங்களின் கைகளை மடித்து நிற்கும் விதத்தைக் கொண்டு, அந்நபரின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை தான். அதாவது வலது கை இடது கைக்கு மேல் உள்ளதா அல்லது இடது கை வலது கைக்கு மேல் உள்ளதா என்பதைக் கொண்டு அந்நபரின் உண்மையான மற்றும் சுவாரஸ்யமான குணங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
1. இடது கையின் மேல் வலது கை
நீங்கள் நிற்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும் போதோ, இடது கையின் மேல் வலது கையை போடுபவரானால், நீங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை மதிப்பீர்கள். ஆனால் அவ்வளவு எளிதில் வளைந்து கொடுக்கமாட்டீர்கள். நன்கு லாஜிக்காக யோசித்தே முடிவெடுப்பீர்கள்.
மேலும் நீங்கள் மூளையின் இடது பக்கத்தையே அதிகம் பயன்படுத்துவீர்கள். பொறுப்பு, ஒழுங்காக எதையும் செய்வது போன்றவற்றிற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் வாழ்க்கையை ஒரு முறையான அணுகுமுறையுடன் அணுக விரும்புவீர்கள். எப்போதும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காமல், எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளித்து, நன்கு யோசித்தே முடிவெடுப்பீர்கள்.
2. வலது கையின் மேல் இடது கை
நீங்கள் நிற்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும் போதோ, வலது கையின் மேல் இடது கையை போடுபவரானால், அதிகமாக உணர்ச்சிவசப்பீர்கள். வலுவான அறிவாற்றல் திறன்களைக் கொண்டிருப்பீர்கள். ஆழமான உள்ளுணர்வைக் கொண்டவர்கள்.
உங்கள் மூளையின் வலது பக்கத்தைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்வில் உணர்வுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து நடப்பீர்கள். எந்த ஒரு முடிவுகளை எடுக்கும் போதும் லாஜிக்காக யோசிக்காமல் இருக்கமாட்டீர்கள். இருப்பினும் உங்களின் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதன்படி நடக்க விரும்புவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications