Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!
Egg Benefits In Tamil: நாம் உண்ணும் உணவுகளில் முட்டை ஒரு உயர்தர புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை நிறைந்த ஒரு சத்தான உணவாகும். இதில் உள்ள புரோட்டீனானது தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதோடு நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கவும் செய்கிறது. அதுமட்டுமின்றி, முட்டையை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. ஆயினும், தினமும் முட்டையை சாப்பிடலாமா என்ற கேள்வி பலரது மனதில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.

இந்நிலையில் இத்தகையவர்களுக்காகவே எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 நாட்களுக்கு தொடர்ந்து ஒருவர் முட்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது பின்வருமாறு:
மூளைக்கு நல்லது
"முட்டையில் கோலின் உள்ளது. இது அசிடைல்கொலின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்தாகும். இந்த அசிடைல்கொலின் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். இது நினைவகம் மற்றும் கவனத்திற்கு முக்கியமானது" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
நல்ல கொலஸ்ட்ரால் மேம்படும்
தினமும் முட்டை சாப்பிட நிறைய பேர் யோசிப்பதற்கு காரணம், அதை சாப்பிட்டால் எங்கு உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடுமோ என்பது தான். ஆனால் "முட்டைகளை தினமும் சாப்பிட்டால், உண்மையில் அது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவைத் தான் மேம்படுத்தும்" என்று டாக்டர் சேத்தி கூறினார். எனவே இனிமேல் முட்டை சாப்பிட தவிர்க்காதீர்கள்.
கண்களுக்கு நல்லது
முட்டைகளை தினமும் தவறாமல உட்கொள்ளும் போது கண்களுக்கு பாதுகாப்பு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. டாக்டர் சேத்தியின் கூற்றுப்படி, முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளன. இவை உயர் ஆற்றல் நீல ஒளியை வடிகட்டவும், கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாகும்.
சரும ஆரோக்கியம் மேம்படும்
"முட்டையில் சல்பர் நிறைந்த அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி, தோல் மற்றும் நகங்களுக்கு இன்றியமையாத ஒரு வகை புரதமான கெரட்டின் உற்பத்தி செய்ய இது உடலுக்கு உதவுகிறது" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
"ஒருவேளை நீங்கள் சைவ உணவாளராக இருந்தால், முட்டைக்கு பதிலாக சோயா வகை உணவுகளான டோஃபு, டெம்பே மற்றும் எடமாமே போன்ற தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளலாம்" என்று டாக்டர் கூறினார்.
முட்டையின் முழு சத்தை பெற எப்படி சாப்பிட வேண்டும்?
தினசரி உணவில் முட்டைகளை சேர்க்கும் பலர் வெள்ளைக்கருவை மட்டும் உட்கொண்டு, மஞ்சள் கருவை தூக்கி எறிந்துவிடுவார்கள். இதற்கு முட்டையின் மஞ்சள் கருவையில் உள்ள கொழுப்பு தான் காரணம். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு மோசமானது என்று எந்த ஒரு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை. இதுக்குறித்து 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது, "முட்டைகள் மிகவும் சத்துமிக்க மற்றும் பலவிதமான பயன்பாடுகளைக் கொண்ட உணவுகளில் ஒன்றாகும். இருப்பினும், அவை பெரும்பாலும் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் காரணமாக இப்படியாக விமர்சிக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் முட்டையின் பெரும்பாலான சத்துக்கள் அதன் மஞ்சள் கருவின் தான் உள்ளன. சொல்லப்போனால் முட்டையின் வெள்ளைப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மிக அதிக அளவில் காணப்படுகின்றன.
கொலஸ்ட்ரால் குறித்து பலரும் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். சொல்லப்போனால் இது செல்களின் கட்டமைப்பு, ஹார்மோன் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றிற்கு இன்றியமையாதது.
உண்மையில் சொல்லப்போனால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் சுமார் 85% நாம் உண்ணும் உணவுகளில் இருந்து பெறப்படாமல், நமது கல்லீரலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த கொலஸ்ட்ரால் நமது உடலில் சுமார் 16 விதமான முக்கிய பணிகளை செய்கிறது. இப்படியிருக்க எப்படி கொலஸ்ட்ரால் ஆபத்தானதாக இருக்கும்" என்று கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
