Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்!
Fertility Treatments In Tamil: தற்போதைய பரபரப்பான அவசர உலகில் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற மோசமான பழக்கவழக்கங்கள் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இளம் வயதிலேயே பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக திருமணமான பல தம்பதிகள் குழந்தை பெற்றெடுப்பதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இப்படி குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருவதால், பல தம்பதிகள் கருத்தரிப்பு சிகிச்சைகளை (fertility treatments) நாடுகின்றனர். ஆனால் அதற்கு முன்பாக பெண்களிடம் பல பயங்களும் குழப்பங்களும் உருவாகின்றன. இந்த பயங்களில் பெரும்பாலானவை தவறான தகவல்கள் மற்றும் மனஅழுத்தத்தால் உருவாகின்றன என்று டாக்டர்.விவீதா சிவபாதம் கூறுகிறார். மேலும் கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்தும், உண்மைகள் குறித்தும் டாக்டர்.விவீதா சிவபாதம் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
பயம் #1
முதல் பயம், "கருத்தரிப்பு சிகிச்சைகள் மிகவும் ஆபத்தானவை அல்லது வலியுடனானவை" என்பதாகும்.
உண்மையில், பெரும்பாலான சிகிச்சைகள் (ovulation tablets, injections, IUI) எளிதாக கண்காணிக்கப்பட்டு செய்யப்படுகின்றன. IVF போன்ற சிகிச்சைகளிலும் நவீன மயக்கமருந்துகள் பயன்படுத்தப்படுவதால் வலி குறைவாகவே இருக்கும்.
பயம் #2
இரண்டாவது பயம், "மருந்துகள் உடலுக்கு தீங்கு செய்யும்" என்பதாகும்.
உண்மையில், இந்த மருந்துகள் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தரப்படுவதால் பொதுவாக பாதுகாப்பானவை. சில நேரங்களில் சிறிய பக்க விளைவுகள் இருக்கலாம், ஆனால் அவை தற்காலிகமானவை.
பயம் #3
மூன்றாவது பயம், "சிகிச்சை எப்போதும் தோல்வி ஆகும்" என்பதாகும்.
இது உண்மை அல்ல. வெற்றி வயது, முட்டை மற்றும் விந்தணு தரம், கருப்பை நிலை போன்றவற்றைப் பொறுத்தது. சிலருக்கு இயற்கையாகவே கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்; சிலருக்கு சிகிச்சை தேவைப்படலாம்.
இயற்கையாக கருத்தரிக்க பின்பற்ற வேண்டியவைகள்
"இயற்கையான கர்ப்பத்திற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிகவும் முக்கியம். தினமும் சீரான உணவு, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நல்ல புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய், ஜங்க் உணவு, புகை மற்றும் மது பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
மேலும் தினசரி நடைப்பயிற்சி, யோகா, மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தும். போதிய உறக்கம் மற்றும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் கருத்தரிப்பை மேம்படுத்த உதவும்.
சில நேரங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே இயற்கையாக கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம். ஆனால் தேவையான சமயத்தில் மருத்துவ உதவி பெறுவதை தாமதிக்கக் கூடாது" என்று டாக்டர் கூறினார்.
எனவே கருத்தரிப்பு சிகிச்சைகள் பயப்பட வேண்டியவை அல்ல. சரியான மருத்துவ ஆலோசனை, நல்ல வாழ்க்கை முறை மற்றும் மனஅமைதி இருந்தால், வெற்றிகரமாக கர்ப்பம் அடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
