Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்த ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி ராகு அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ராகு டிசம்பர் வரை இருப்பார். இதனால் ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ராகு பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
முக்கியமாக தொழில், நிதி, வியாபாரம், கல்வி போன்றவற்றில் தாக்கம் நன்கு தெரியும். அதுவும் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்கார்களுக்கு மோசமாகவும், சிலருக்கு மிகவும் சிறப்பாகவும் இருக்கலாம். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் செல்வம் பெருகும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதன் மூலம் செய்யும் வேலையில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனநிலை சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.
துலாம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் நீண்ட தூர பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைக் காண்பார்கள். மொத்தத்தில் இக்காலத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



