Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
Angarak Yog On 30 June 2026: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு எப்போதும் வக்ர கதியில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். கிரகங்களில் ராகுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ராகு ஜூன் 30 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.

ராகு செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் அங்காரக யோகமானது சக்தி வாய்ந்த மற்றும் உக்கிரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் மன அழுத்தம், முடிவெடுக்கும் திறன் குறைதல் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த யோகமானது டிசம்பர் 02 ஆம் தேதி வரை நீடித்திருக்கவுள்ளது. இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவாகும் அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
அங்காரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முதலீடுகளை செய்வதற்கு முன்பும் பலமுறை யோசித்து பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் நிதி தொடர்பான விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அங்காரக யோகத்தால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். வணிகர்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதிக செலவுகளால் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எதிலும் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசரப்பட்டு எதிலும் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையை செய்தாலும் அதில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க நேரிடலாம்.
தனுசு
அங்காரக யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான எந்த ஒரு விஷயங்களிலும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் பேச்சு பல பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் தலைத்தூக்கும். இதனால் மன அமைதி பாழாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



