Latest Updates
-
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா?
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Rava Coconut Dosa With Thakkali Chutney Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் ஒரு காலை உணவு செய்து கொடுக்க வேண்டுமா? அப்படியானால் வீட்டில் ரவையும், தேங்காயும் இருந்தால், அவற்றைக் கொண்டு ரவா தேங்காய் தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ உண்மையிலேயே பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த ரவா தேங்காய் தோசை மற்றும் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா தேங்காய் தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சின்ன வெங்காயம் 6
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தக்காளி சட்னிக்கு...
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 2 பல்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 3/4 கப் துருவிய தேங்காய்,
சின்ன வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து விடலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு,
வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து 4-5 நிமிடம் தக்காளி
மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்ப்லை, நறுக்கிய பூண்டு
பற்களை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் வேக
வைத்து இறக்கினால், தக்காளி சட்னி தயார்.
* பின்னர் ஊற வைத்த மாவை திறந்து, அதில் தோசை மாவு பதத்திற்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக சுட்டு எடுத்தால், ரவா தேங்காய் தோசை
தயார்.



Click it and Unblock the Notifications