Latest Updates
-
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Jupiter Conjunction 2026: ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. ஜோதிட ரீதியாக இந்த ஜூலை மாதமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, இரண்டு முக்கியமான கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவான குரு பகவானும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இந்த சேர்க்கையானது கடக ராசியில் ஜூலை 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சுமார் 1 மாத காலம் நீடித்திருக்கும். வேத ஜோதிடத்தில், சூரியன் தன்னம்பிக்கை, பதவி, தலைமைத்துவம், கௌரவம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கான காரணியாகக் கருதப்படுகிறார். அதே சமயம் குரு பகவான் அதிர்ஷ்டம், கல்வி, செல்வம், அறிவு, திருமணம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார்.
ஜோதிடத்தில் சூரியனும், குரு பகவானும் நட்பு கிரகங்களாகும். அதுவும் குரு பகவானின் உச்ச ராசியில் இந்த சேர்க்கை நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசியில் ஒன்றிணையும் குரு-சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும். தொழில் மற்றும் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். மேலும் இக்காலத்தில் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதோடு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கணிசமான நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதன் மூலம் டபுள் ஜாக்பாட் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். செல்வம் பெருகும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, தைரியம், அறிவு மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிவடைவதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




