Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்..
Sun Venus Transit In July 2026: ஜூலை மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் தங்களின் ராசியை மாற்றவுள்ளன. அதில் முதலாவதாக ஜூலை 04 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த இரண்டு கிரகங்களின் ராசி மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இவ்விரு கிரகங்களின் பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கப் போகிறது. அதுவும் அந்த ராசிக்காரர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும், வருமானத்தில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது ஜூலை மாதத்தில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஜூலை மாதத்தில் மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரனும், 3 ஆவது வீட்டிற்குள் சூரியனும் நுழைவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் புத்திசாலித்தனத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். போட்டி தேர்வுகளை எழுதியிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படுவதோடு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
ஜூலை மாதத்தில் சிம்ம ராசியின் முதல் வீட்டில் சுக்கிரனும், 12 ஆவது வீட்டில் சூரியனும் நுழையவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் சந்திக்கும் பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் அல்லது வெளிநாட்டில் தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் பெறுவார்கள். சுக்கிரன் சிறப்பான நிலையில் இருப்பதால் கலைத் துறையில் எதிர்பாராத வெற்றியைப் பெறக்கூடும். மொத்தத்தில் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
ஜூலை மாதத்தில் கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரனும், 11 ஆவது வீட்டில் சூரியனும் இருப்பர். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிதாக தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
ஜூலை மாதத்தில் விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரனும், 9 ஆவது வீட்டில் சூரியனும் இருப்பர். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

