Latest Updates
-
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்..
Hotel Style Potato Vellai Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லிக்கு எப்பவும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? இப்படி செய்து உங்களுக்கே போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை குருமா செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் தக்காளி குருமா, வெஜிடேபிள் குருமாவை செய்யாமல், உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா இட்லியுடன் மட்டுமின்றி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7-8
* துருவிய தேங்காய் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3 (மசித்தது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, மல்லி,
முந்திரி, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுத்து, தோலுரித்து
மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை
மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம்
வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, விட
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை
குருமா தயார்.



Click it and Unblock the Notifications