Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமா
பூரிக்கு வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமா செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமைகளில் பலரது வீடுகளில் காலை உணவாக பூரி செய்யும் வழக்கம் இருக்கும். நீங்களும் அப்படி பூரி செய்வீர்களா? அந்த பூரிக்கு வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமா செய்யுங்கள். இந்த வெஜிடேபிள் குருமா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பூரிக்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷலே அதன் மசாலா தான்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் - 1 கப் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* பச்சை மிளகாய் - 2
* கசகசா - 1 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/2
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 2 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் காய்கறிகளை நீரில் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் ஒரு கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான கர்நாடக ஸ்டைல் வெஜிடேபிள் குருமா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications

