For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையில் நினைச்சத அடைய ஜென் தத்துவம் கூறும் 3 முக்கிய வழிகள் இதோ!

|

இந்த உலகில் பலவித தத்துவங்கள் இருந்தாலும் ஒரு சில தத்துவங்கள் மட்டுமே எல்லா காலத்து மக்களும் ஏற்று கொள்ளும் படி இருக்கும். பல மகான்கள் கூறிய தத்துவங்கள் என்றுமே நம்மை நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். சாணக்கியரின் தத்துவங்கள், கிருஷ்ணர் கூறிய உபதேசங்கள் போன்றே உலகம் முழுக்க பிரபலமான தத்துவம் ஒன்று உள்ளது. அது தான் "ஜென்" தத்துவம்.

வாழ்க்கையில் நினைச்சத அடைய ஜென் தத்துவம் கூறும் 3 முக்கிய வழிகள் இதோ..!

பலர் இந்த தத்துவத்தை தனது வாழ்வில் பின்பற்றி வெற்றி கண்டதும் உண்டு. மிகவும் பழமையான ஜென் தத்துவம் இன்றைய கால கட்டத்திலும் மக்களின் வாழ்விற்கு ஏற்றாற்போல இருந்து வருகிறது. இதன் வரலாறே மற்ற தத்துவங்களை விட பலமடங்கு உயர்ந்துள்ளது என்றே கூறலாம். இது புத்த மதத்தை அடிப்படையாக கொண்டது.

இதன் பழமை தன்மை தான் இன்றளவும் இந்த தத்துவ கருத்துக்களை போற்றுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. என்றுமே சந்தோஷமாக இருக்க 8 வழிகளை பின்பற்றினாலே போதும் என ஜென் தத்துவம் கூறுகிறது. அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழமை வாய்ந்தது..!

பழமை வாய்ந்தது..!

ஜென் தத்துவம் 12-ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக தொடங்கியது. இது புத்த மதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு முக்கிய தத்துவமாக உலக மக்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

டொஜென் ஜென்ஜி என்ற ஜப்பானிய தத்துவவியலாளர் தான் இதை வடிவமைத்தார். முதன்முதலில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தான் இது மிகவும் பிரபலமானது.

மனம்

மனம்

நம் உடல் நாம் சொல்வதை கேட்க வேண்டுமென்றால் அதற்கு நம் மனம் தயாராக இருத்தல் வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால், மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைய பட்டுள்ளது. ஒன்றை தவிர்த்து இன்னொன்றை நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியாது என ஜென் தத்துவம் கூறுகிறது.

நிறைவு

நிறைவு

வாழ்க்கை, நிரம்பிய குடம் போல நிறைவாக இருக்க வேண்டுமென்றால் அதுவும் நம் கையில் தான் உள்ளது. மாற்றத்தை எதிர் கொள்ள கற்று கொண்டாலே இதை மிக சுலபமாக நம்மால் அடைந்து விட முடியும் என ஜென் தத்துவம் விளக்குகிறது.

MOST READ: ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு மூலிகை.! எப்படி பயன்படுத்தணும்?

சமாளிப்பு

சமாளிப்பு

மனித உடலை ஆட்டி படைக்க கூடிய திறன் ஹார்மோன்களுக்கு உள்ளது. ஹார்மோன்கள் தான் நமது மனநிலை மற்றும் உடல் நிலையை நிர்ணயிக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆற்றலுடன் செயல்பட ஹார்மோன்கள் சீரான அளவு இருக்க வேண்டும்.

அடிமை

அடிமை

இன்று நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் அன்றே ஜென் தத்துவத்தில் கூறியுள்ளனர். அதாவது, நாம் ஒரு விஷயத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விட்டோம் என்றால் அதை நிச்சயம் தவிர்த்து விட வேண்டும். உதாரணத்திற்கு ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி சீரியல், புகை பழக்கம், மது பழக்கம் போன்றவற்றை கூறலாம்.

உணவு பழக்கம்

உணவு பழக்கம்

நிம்மதியான வாழ்வை அடைய ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். அதற்கு உணவு இன்றியமையாத ஒன்றாகும். 3 வேலையும் ஆரோக்கியமான சத்தான உணவை சாப்பிட்டு வந்தால் நீங்கள் சிறப்பான வாழ்வை அடையலாம். பசியுடன் இருப்பதை தவிர்த்து விடுங்கள் என ஜென் தத்துவம் கூறுகிறது.

தனிமை

தனிமை

ஜென் தத்துவத்தின் படி தனிமை நிலை சிறந்தது தான். என்றாலும் அது நாம் கையாளும் முறையில் தான் உள்ளது. தனிமையை எண்ணி மன அழுத்தத்தை அதிகரித்து கொண்டால் நிச்சயம் நம் உடலும் மனமும் பலவீனமாக மாறும். தனிமை நிலையை கையாள தெரியவில்லை என்றால் அது நமக்கே ஆபத்தாக மாறிவிடும்.

MOST READ: இந்த நோய்கள் இருப்பவர்களுக்கு எய்ட்ஸ் நோயும் கூடவே இருக்கிறது என்று அர்த்தமாம்! #ஜாக்கிரதை

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

திடமான எண்ணங்களை உருவாக்குவதற்கு உடற்பயிற்சி அவசியம். அன்றாடம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை தவறாது செய்து வந்தால் மனமும் உடலும் ஆரோக்கியம் பெறும். மேலும், சின்ன சின்ன விளையாட்டுகளை கற்று கொண்டால் அது உங்களுக்கு அதிக பலத்தை தர கூடும்.

குறைத்து கொள்ளுங்கள்

குறைத்து கொள்ளுங்கள்

ஜென் தத்துவத்தை கடைபிடிப்போர் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதற்கு சீனர்களும், ஜப்பானியர்களுமே சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

உப்பு, கொழுப்புசத்து ஆகியவை அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்து வந்தாலே ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தானாக உங்களை தேடி வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zen Thoughts on Healthy Living

This article talks about Zen of Healthy Living.
Desktop Bottom Promotion