For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் 2 தக்காளியை சாப்பிட்டால் அதிகபட்சமாக உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்..?

|

சிவப்பு நிறத்தில் கண்ணை கவரும் தன்மை உடைய பழம் தக்காளி. அன்றாட உணவில் தக்காளியின் பங்கு அதிகமே. இது ஒரு புறம் இருக்க அதன் மருத்துவ தன்மைக்கும் இதை நாம் உணவில் சேர்த்து வருகின்றோம் என்றே சொல்லலாம். தக்காளியில் பல்வேறு சத்துக்கள் உள்ளது. எப்படி வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் முதலியவற்றை அன்றாடம் சாப்பிட்டு வருகின்றோமோ அதே போன்று தக்காளியையும் நாம் அன்றாடம் சாப்பிட்டு வர வேண்டும்.

2 தக்காளியை தினமும் சாப்பிட்டால் அதிகபட்சமாக உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்..?

தக்காளியை உணவில் சேர்த்து சமைப்பதோடு அப்படியே சாப்பிடுவதால் உடலில் சிலபல நல்ல மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக முக்கியமாக ஆண்கள் சீக்கிரமாகவே அப்பாவாக இயலுமாம். தக்காளியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா என்பதை இனி நீங்களே உணர்வீர்கள். சரி வாங்க, தினமும் 2 தக்காளியை சாப்பிட்டு வந்தால் உடலில் உண்டாக கூடிய அதிகபட்ச மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆற்றல் மிக்கவை

ஆற்றல் மிக்கவை

தக்காளியின் முழு ஆரோக்கியத்திற்கும் அதில் உள்ள சத்துக்கள் தான் மூல காரணம். வைட்டமின் எ, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இதில் அதிக அளவில் உள்ளது. மற்றவைகளை காட்டிலும் நீர்சத்து தக்காளியில் அதிக சதவீகிதத்தில் உள்ளது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இந்தியர்கள் பலருக்கும் வர கூடிய பேராபத்தில் இதய நோய்களும் முக்கிய இடத்தில் உள்ளது. எதை சாப்பிட்டாலும் இதய பாதிப்பு, மாரடைப்பு, கொலஸ்ட்ரால் கூடுதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகுகின்றன.

இவற்றில் இருந்து உங்களை காத்து கொள்ள தினமும் 2 தக்காளியை சாப்பிட்டு வந்தால் போதும். இந்த பலனை தருவது தக்காளியில் உள்ள பொட்டாசியம் தான்.

இரத்தமும் சர்க்கரையும்..!

இரத்தமும் சர்க்கரையும்..!

லைகோபைன் என்கிற மூல பொருள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த லைகோபைன் தக்காளியில் அதிக அளவில் உள்ளதால் மிக எளிதாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கூடுதலாக இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளும்.

புற்றுநோய் அபாயமா..?

புற்றுநோய் அபாயமா..?

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கூட புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். தினமும் 2 தக்காளியை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக புற்றுநோயை தடுத்து விடுலாம்.

அத்துடன் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய அனைத்து காரணிகளையும் உடலில் இருந்து இது வெளியேற்றி விடும்.

MOST READ:தொப்பையை குறைக்க அத்தி இலையை டீ போட்டு குடித்து வந்தால் போதும்..! எப்படி தயாரிப்பது..?

மன அழுத்தம்

மன அழுத்தம்

வேலை பளுவால் எப்போதுமே மன உளைச்சலில் நீங்கள் இருந்தால், உங்களுக்கான தீர்வு இதுதான். மன உளைச்சலை தீர்க்க கூடிய அற்புத மகத்துவம் தக்காளியில் உள்ளதாம்.

ஒரு ஆய்வில் தக்காளியை தினமும் சாப்பிட்டு வருவதால் 52% மன அழுத்தம் குறைவதாக தெரிவிக்கின்றன. ஆதலால், அன்றாடம் தக்காளியை சாப்பிட்டு நலமாக வாழுங்கள்.

புகையும் தக்காளியும்.!

புகையும் தக்காளியும்.!

புகை பழக்கம் கொண்டோரை நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுக்காக்க தக்காளி உதவுகிறது. நுரையீரலுக்கு ஏற்பட கூடிய பாதிப்பை நிறுத்த தக்காளியை போதும்.

ஆதலால், புகை பழக்கம் கொண்டோரும், நுரையீரல் பிரச்சினை கொண்டோரும் தக்காளியை அன்றாடம் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.

கருத்தரிப்பு

கருத்தரிப்பு

தினமும் தக்காளியை சாப்பிட்டு வருவதால் மிக விரைவிலே கருத்தரிக்க இயலும் என ஆய்வுகள் கூறுகின்றன. காரணம் இதிலுள்ள போலிக் அமிலம் தான்.

இது கருமுட்டையின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இதனால் ஆண்கள் மிக சீக்கிரத்திலே அப்பாவாகும் வாய்ப்பை பெறுகின்றனர்.

கொலஸ்ட்ராலை குறைக்க

கொலஸ்ட்ராலை குறைக்க

உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் வழி தக்காளியில் உள்ளது. குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி நல்ல கொலெஸ்டலை அதிகரிக்க தக்காளி பயன்படுகிறது. இந்த காரணம் தக்காளியில் உள்ள லைகோபைன் தான்.

MOST READ: ஜப்பானியர்களிடம் இருந்து இந்தியர்கள் கற்று கொள்ள வேண்டிய 9 தந்திரங்கள் இதோ..!

குடலுக்கு

குடலுக்கு

தினமும் தக்காளி சாப்பிட்டு வருவதால் உடலில் சேர்ந்துள்ள நச்சு தன்மையுள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றி விடலாம். இதனால் மலச்சிக்கல், குடல் புற்றுநோய், செரிமான கோளாறுகளில் இருந்தும் நீங்கள் தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens To Your Body, if you eat two tomatoes daily

This article is about what happens to your body, if you eat two tomatoes daily.
Desktop Bottom Promotion