Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிடுங்க...அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!
1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..?
முட்டை சைவமா..? அசைவமா..? முட்டையில் இருந்து கோழி வந்ததா..? கோழியில் இருந்து முட்டை வந்ததா..? இப்படி முட்டை பற்றிய கேள்விகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். சிலருக்கு இன்னும் சில கேள்விகளும் இருக்க கூடும். அதாவது முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் நல்லதா..? வேக வைத்து சாப்பிட்டால் நல்லதா..? இல்லை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நல்லதா..? போன்ற கேள்விகளும் கூடவே இருக்கும்.

முட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகுமாம். வேக வைத்த முட்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வேக வைத்த முட்டையை வெறும் 1 வாரத்திற்கு சாப்பிட்ட பிறகு உங்களின் உடலில் என்ன விதமான மாற்றங்கள் உண்டாகிறது என்பதை நீங்களே கண் கூடாக பார்ப்பீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் ஆகும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

கல்லீரல்
உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்பட்டால் மரணம் மிக சீக்கிரத்தில் நம் வீட்டு கதவை தட்டும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்றினாலே கல்லீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
வேக வைத்த முட்டையை தினமும் காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

தாம்பத்திய வாழ்வு
வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கருத்தரிக்க இயலும். இதில் உள்ள வைட்டமின் பி9 செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்து சிறப்பான தாம்பத்தியத்தை தரும். இதனால் எளிதிலே கருத்தரிக்க முடியும்.

எடை குறைய
எவ்வளவு பாடுபட்டாலும் எடை குறையவே மாட்டுதா..? உங்களின் இந்த வேதனையை தீர்க்க வேக முட்டை உள்ளது. காலை உணவில் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக உடல் எடை குறையுமாம்.

மார்பக புற்றுநோய்
வேக வைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க இயலும். காரணம் இதிலுள்ள Choline என்கிற முக்கிய மூலப் பொருள் தான்.
வேக வைத்த முட்டையை சாப்பிடுவோருக்கு 18 சதவீதம் மார்பக புற்றுநோயிற்கான பாதிப்பு குறையுமாம்.

மூளை செல்கள்
மூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளது என்பதை அறிய இவற்றின் தொடர்பு கொள்ளும் தன்மை தான் உதவும். ஒரு வாரத்திற்கு வேக வைத்தமுட்டையை காலையில் சாப்பிட்டு வந்தால் மூளையின் திறன் படு வேகமாக இருக்கும். அத்துடன் ஞாபக சக்தியையும் இது கூட்டும்.

இதய நோய்கள்
இரத்தத்தில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொலெஸ்ட்ராலை குறைக்க வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வாங்க.
இதனால் இதய நோய்களின் பாதிப்பும் உங்களுக்கு உண்டாகாது. காரணம் இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான்.

வயிற்று உப்பசம்
வயிறு உப்பி போயிருந்தால் இதை தடுக்க அது தொப்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது போன்று பலருக்கும் ஏற்படும்.
இந்த பிரச்சினைக்கும் வேக வைத்த முட்டை வைத்தியம் தீர்வு தருகிறது. உங்களின் வயிற்று உப்பசத்தை குறைக்க வேக வைத்த முட்டை போதும்.

எலும்புகளுக்கு
வேக வைத்த முட்டையை சாப்பிடுவதால் எலும்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிக ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளலாம். இவற்றில் உள்ள வைட்டமின் டி எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

முக அழகிற்கு
தற்போதைய ஆராய்ச்சி வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் நம் சரும பாதுகாப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளது. மேலும், ஆண்களின் முகத்தில் உண்டாகும் பருக்களை இது தடுக்கிறதாம். கூடவே கரும்புள்ளிகளையும் இது போக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எத்தனை முட்டை
1 வாரத்திற்கு தினமும் தொடர்ந்து 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன பலனை அடைய முடியும். மறக்காமல் காலை உணவாக இதை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள் நண்பர்களே.



Click it and Unblock the Notifications