For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போ வாட்சப்பில் டி.பி -யாக வைக்குற இந்த கருப்பு ரிப்பனுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

|

எதற்கெடுத்தாலும் ஸ்டேட்ஸ் போடும் மனநிலை நம்மில் பலருக்கும் உருவாகி உள்ளது. இதையே பொழப்பாக வைத்து கொண்டே பலர் திரிகின்றனர். சிலருக்கு ஸ்டேட்டஸ் போடவில்லை என்றால் தூக்கம் வருவதில்லை. தற்போது ட்ரெண்டாக உள்ள ஒரு செய்தி என்னவென்றால் இந்திய பாகிஸ்தான் பிரச்சினை தான். பல்வேறு விதமான வாக்குவாதங்கள், கருத்துக்கள், விவாதங்கள் போன்றவை சமூக ஊடங்களில் பரவி வருகிறது.

இப்போ வாட்சப்பில் டி.பி -யாக வைக்குற இந்த கருப்பு ரிப்பனுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியும்?

ஆனால், இவற்றில் மக்களாகிய நாம் செய்யும் மிக பெரிய தவறே எதையும் ஆராயாமல் பகிர்வதே. ஸ்டேட்டஸில் தகவலாக பகிர்வது போன்றே சில புகைப்படத்தையும், அந்த சூழலில் வதந்திகளாக பரவ கூடியவற்றையும் வைக்கின்றனர். இது எவ்வளவு பெரிய அபாயத்தை உண்டாக்கும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டான ஒரு ப்ரொபைல் பிக்ச்சர் தான் கருப்பு ரிப்பன் டி.பி. இதை எதுக்கு வைக்கிறோம், ஏன் வைக்கிறோம், இதற்கு உண்மையான அர்த்தம் போன்றவற்றை தெரிந்து கொள்லாமலே நாம் வைத்து விடுகிறோம். இதற்கான முழு விடையை தருவதே இந்த பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வண்ணங்கள் 1000!

வண்ணங்கள் 1000!

நிறங்களில் அடிப்படையான 3 நிறங்கள் தான் உள்ளது. சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறத்தை அடிப்படையாக கொண்டு தான் மற்ற நிறங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. அதே போன்று கருப்பு முதல் வெள்ளை வரை உள்ள கலர் ரிப்பன்களுக்கும் தனித்துவமான அர்த்தம் உள்ளது.

பச்சை நிறம்

பச்சை நிறம்

வெற்றியை குறிக்கும் நிறமாக இது பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிறத்தை ரிப்பனில் போட்டிருந்தால் அதற்கென்று வேறு அர்த்தம் உள்ளது. இது கல்லீரல் பிரச்சினைகளை குறிக்கும் நிறமாக கருதப்படுகிறது. அதே போன்று கல்லீரல் புற்றுநோயிற்கான நிறமாகவும் இது பார்க்கப்படுகிறது.

சிவப்பு நிறம்

சிவப்பு நிறம்

இந்த சிவப்பு நிற ரிப்பனை பற்றி நம் எல்லோருக்கும் பெரும்பாலும் நன்கு தெரிந்து இருக்கும். இது எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை தெரியப்படுத்தும் நிறமாக பல ஆண்டுகளாக உள்ளது.

எய்ட்ஸ் நோயை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை தான் இந்த நோயிற்கு பல ஆயிரம் மக்களை பலியாக மாற்றி விடுகிறது என்பதை உணர்த்த தான் இந்நிறம் இதில் இடம் பெற்றுள்ளது.

அடர் நீலம்

அடர் நீலம்

குழந்தைகள் வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கவும், அதை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு முதல் கட்டமாக கொண்டு செல்லவே இந்த நிறத்தை வைத்துள்ளனர். மேலும், குடல் சார்ந்த நோய்களை பற்றிய புரிதலை தரவும் இந்த நிறம் உதவுகிறது.

MOST READ:வாழ்க்கையில் நினைச்சத அடைய ஜென் தத்துவம் கூறும் 3 முக்கிய வழிகள் இதோ..!

மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறத்தில் ரிப்பன் நிறம் இருந்தால் அது ஒரு வகையான புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக சிறுநீர்ப்பை புற்றுநோயை குறிக்கும் நிறமாகவே இது கருதப்படுகிறது. பலர் இந்த வகை புற்றுநோய் இருப்பது கூட தெரியாமல் இறந்தும் விடுகின்றனர்.

தங்க நிறம்

தங்க நிறம்

தங்க நிறத்தில் உள்ள ரிப்பன் குழந்தைகளுக்கு சிறு வயதிலே உண்டாக கூடிய புற்றுநோயை குறிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுமா என்கிற சந்தேகத்தை உடைக்கத்தான் இந்த நிறம்.

குழந்தைகளுக்கு உருவாகின்ற இது போன்ற புற்றுநோயை தடுக்கவும், அதை பற்றிய தெளிவை மக்கள் மத்தியில் வைக்கவும் இந்த நிறம் உதவுகிறது.

கருப்பு+பிங்க் நிறம்

கருப்பு+பிங்க் நிறம்

இந்த பிங்க் நிற ரிப்பன் சற்று சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் பற்றிய புரிதலை கொண்டு வரவே இந்த நிற ரிப்பன் உள்ளது. மேலும், பிங்க் மற்றும் கருப்பு நிறம் கலந்த ரிப்பன் தனது அன்பான தோழியை இழந்ததற்கு நினைவாக வைக்கப்படுகிறது.

கருப்பு நிறம்

கருப்பு நிறம்

கருப்பு நிறம் என்றாலே மிக மோசமான நிறம் என்றும், தீவிர வாதத்தை குறிக்கிற நிறமாகவும், துக்கம் அனுசரிக்கப்படுகின்ற நிறமாகவும் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், எல்லா நேரங்களிலும் இதே அர்த்தம் இருப்பதில்லை.

நாம் தற்போது இந்த கருப்பு ரிப்பனை ப்ரொபைல் பிக்ச்சராக வைப்பது வெறும் ட்ரெண்ட் என்கிற முறையை நாமே நமக்கு உருவாக்கி கொள்வது மட்டுமே. இது எந்த விதத்தில் மாற்றத்தை கொண்டுவர போவதில்லை என்பதே உண்மை.

MOST READ:சைக்கோ குணத்தின் உச்சம் எதுவென்று தெரியுமா? இது உங்கள் காதலன்(அ) காதலிக்கு கூட ஏற்படலாம்..!

சாம்பல் நிறம்

சாம்பல் நிறம்

மூளையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் சாம்பல் நிறத்தில் ஒரு திரவம் நிரப்பப்பட்டு இருக்கும். இதை ஆங்கிலத்தில் "கிரே மேட்டர்" என்று கூறுவார்கள். மூலையில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதை குறிக்கும் விதமாக இந்த இந்த சாம்பல் நிற ரிப்பன் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What All Those Cancer Ribbon Colors Mean

What All Those Cancer Ribbon Colors Mean
Desktop Bottom Promotion