Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
நீங்கள் ஆரோக்கியமென நினைக்கும் இந்த உணவுகள் உண்மையில் அவ்வளவு ஆரோக்கியமானவை அல்ல.!
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
நம் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவது மட்டுமின்றி நமது உடலை நோய்களிடம் இருந்து பாதுகாப்பதும் நாம் சாப்பிடும் உணவுகள்தான். ஏனெனில் அவைதான் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் அதற்காக நாம் சாப்பிடும் உணவுகளில் பல உணவுகளில் உண்மையில் அந்த சக்தி இல்லை.

ஆரோக்கிய உணவை பற்றிய கட்டுக்கதையும், மூடநம்பிக்கையும் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே நம்மிடம் பரவலாக நிலவி வருகிறது. சில உணவுகளை நாம் அதிக ஆரோக்கியமும், சத்துக்களும் நிறைந்த உணவுகள் என்று எண்ணி அடிக்கடி சாப்பிடுவோம். ஆனால் உண்மையில் அவற்றில் அப்படி எந்த சத்துக்களும் இருக்காது.அதேபோல நாம் ஆரோக்கியத்திற்கு கேடு என நினைத்து சாப்பிடாமல் இருக்கும் உணவுகளில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும். இந்த பதிவில் நீங்கள் ஆரோக்கியமென் நினைக்கும் எந்தெந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது என்று பார்க்கலாம்.

ஆப்பிள்
காலம் காலமாக நம்மிடையே இருக்கும் ஒரு நம்பிக்கை தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்பது. ஆனால் உண்மை அதுவல்ல. ஆப்பிளில் சில உங்கள் ஆரோக்கியத்தையும், சருமத்தையும் பாதுகாக்கும் சில ஊட்டச்சத்துக்களும், பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில சத்துக்களும் உள்ளது. ஆப்பிள் ஒரு ஆரோக்கியமான பழம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். மேலும் தற்போது இருக்கும் ஆப்பிள்களில் பெரும்பாலானவை நிறைய பூச்சிக்கொல்லிகள் கொண்டே உருவாக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

வைட்டமின் டி
இந்த வைட்டமின் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், மேலும் தசைப்பிடிப்பு மற்றும் தலைவலி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் இது எந்த வகையிலும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது. ஆனால் இதனை சரியான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை அதிகளவில் எடுத்து கொள்ளும்போது அது உங்கள் இரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இது பல பிரச்சினைகளை உண்டாக்கும்.

தேன்
தேன் நமக்கு இயற்கை தந்துள்ள ஒரு மிகவும் பயனுள்ள ஒரு இயற்கை மருந்தாகும். இது இயற்கையாகவே பல மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் பல நோய்களை இது குணப்படுத்தக்கூடும். ஆனால் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை. சொல்லப்போனால் இதன் இனிப்பு சுவை உங்கள் நோயெர்திப்பு சக்தியை குறைக்கக்கூடும். குறிப்பாக ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு ஒருபோதும் தேனை கொடுக்கக்கூடாது.

க்ரீன் டீ
நாம் நினைக்கும் அளவிற்கு இதனால் நமக்கு நன்மைகள் கிடைப்பதில்லை என்பதே உண்மை. பொதுவாக டீ சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. க்ரீன் டீயும் அதைப்போலத்தான். ஆனால் அதைத்தவிர இதில் சிறப்புகள் எதுவுமில்லை. இன்றைய உலகின் வியாபார தந்திரமே க்ரீன் டீயை இவ்வளவு பிரபலமடைய வைத்திருக்கிறதே தவிர அதன் நன்மைகளால் அல்ல. க்ரீன் டீ குடிப்பதை விட தண்ணீர் குடிப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது.

ப்ரோபியாட்டிக்ஸ்
ப்ரோபியாட்டிக்ஸ் என்பது உங்களுக்கு நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும். இது யோகர்ட் மற்றும் ஓட்ஸ் போன்ற பொருட்களில் அதிகம் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்திற்கும், சரும பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் இது நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்குமா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான்.

எக்கினேசியா
எக்கினேசியா என்பது ஊதாநிற கான்பூக்களின் காய்ந்த வேர் மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். இது சளி மற்றும் இருமலுக்கும் மிகவிரைவில் நிவாரணத்தை வழங்கும். இது சளி மற்றும் மலச்சிக்கலுக்கு நிவாரணத்தை வழங்குமே தவிர நாம் நினைக்கும்படி நோயெதிர்ப்பு சக்தியை எந்த வகையிலும் அதிகரிக்காது.

சிக்கன் சூப்
நமது பாட்டி காலத்தில் இருந்தே நிலவி வரும் ஒரு கருத்து சிக்கன் சூப் குடிப்பது உடலுக்கு கவசத்தை போன்று செயல்படக்கூடும் என்பது. ஆனால் உண்மையில் சிக்கன் சூப் சளியை குணப்படுத்துமே தவிர உங்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்காது. இதன் கொழுப்பு மற்றும் தோல்களில் இருக்கும் சத்துக்கள் வேண்டுமென்றால் உங்களை வைரஸ் தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை ஒன்றும் கடினமான காரியம் அல்ல. போதுமான அளவு தூங்குங்கள். அதிகாலையில் சூரிய ஒளி உங்கள் மீது விழும்படி செய்யுங்கள். உங்கள் கையை எப்பொழுதும் சூடான நீரால் சுத்தம் செய்யுங்கள். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவும் அவசியம். இவை உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதுடன் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications