Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த நல்ல பழக்கங்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?
ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் செய்யும் சில ஆரோக்கிய செயல்கள் உண்மையில் நமக்கு ஆபத்துக்களையே ஏற்படுத்தவதாக இருக்கிறது.
ஆரோக்கியம் என்பது நம் அனைவருக்குமே மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது ஆயுளை நிர்ணயிப்பது நமது ஆரோக்கியம்தான். ஆரோக்கியம் என்னும்போது அதில் உணவுமுறைகள், உடற்பயிற்சிகள், வாழ்க்கை முறை என அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நம்முடைய வாழ்க்கை முறை நமது ஆரோக்கியத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் செய்யும் சில ஆரோக்கிய செயல்கள் உண்மையில் நமக்கு ஆபத்துக்களையே ஏற்படுத்தவதாக இருக்கிறது. இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீங்கள் பின்பற்றும் இந்த ஆரோக்கிய நடைமுறைகள் உங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

சாப்பிட்டு முடித்தவுடன் பல் துலக்குவது
ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி சாப்பிட்டு முடித்தபின் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தாவதுதான் பல் துலக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் உணவுகள் உங்களின் ஈறுகளை ஈரமாக்குவதால் பல் துலக்கும் போது அது உங்கள் பற்களின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

தண்ணீர் குடிப்பது
நமது சிறிய வயது முதலே தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அதற்கான அறிவியல்பூர்வமான சான்றுகளோ, ஆதாரமோ இல்லை. சொல்லப்போனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்கள் இரத்தத்தில் உள்ள உப்பின் அளவை குறைக்கும்.

சோப்பு
பாக்டீரியாக்களை எதிர்க்கும் சோப்புகளை பயன்படுத்தி கிருமிகளை அழிக்கலாம் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நீங்கள் உபயோகிக்கும் அந்த ஆன்டி பாக்டீரியா சோப்புகள் எந்தவிதத்திலும் உங்களை சோப்புகளில் இருந்து பாதுகாப்பதில்லை.

பிரச்சினைகளை பற்றி மற்றவர்களிடம் பேசுவது
உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது உங்கள் மனதின் பாரத்தை குறைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இப்படி எப்போதும் பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருப்பது உங்கள் மனஅழுத்தத்தை அதிகரித்தான் செய்யும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் உங்களுக்கு மனஅழுத்தம், சோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகள் எழலாம்.

தினமும் எடை தூக்குவது
தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்வது என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் அடிப்படையான ஒன்றாகும். ஆனால் ஒவ்வொரு தசைக்கும் அவை மீண்டு வர குறிப்பிட்ட காலம் தேவை. எனவே தொடர்ந்து ஒரே தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்தால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

பல சிறிய உணவுகளை சாப்பிடுவது
3 வேளை அதிக உணவுகளை சாப்பிடுவதை விட 6 வேளை சிறிய சிறிய உணவுகளாக சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றை இரவில் தாமதமாக சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியமானதாக இருக்காது. மாலை நேரங்களில் உங்கள் உடலின் செரிமானம் அடையும் சக்தியானது குறைந்துவிடும். எனவே நீங்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்பினால் நீங்கள் சாப்பிடும் நேரத்தை அதற்கேற்றாற் போல திட்டமிட்டு கொள்ளுங்கள்.

காலை நேர உடற்பயிற்சிகள்
அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது என்பது நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிகாலையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துமாம். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு இது பாக்டீரிய மற்றும் வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிகாலையில் நடைப்பயிற்சி, ஓட்டம் போன்ற மிதமான பயிற்சிகளை மட்டும் செய்வது நல்லது.

அதிக நேரம் தூங்குவது
போதுமான நேரம் தூங்குவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும், அதற்காக நீங்கள் அதிக நேரம் தூங்கலாம் என்று அர்த்தமல்ல. இது உங்களை மந்தமாகவும், குழப்பமாகவும் உணரச்செய்யும். மேலும் பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். சரியான அளவில் தூங்குவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தவறான முறையில் தியானம்
தியானம் செய்வது மிகவும் நல்ல பழக்கமாகும். சரியான முறையில் இதனை செய்வதே உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பதிலாக அதிலிருந்து தப்பிக்க தியானத்தை கையிலெடுத்தால் அது உங்களுக்கு முழுமையான பலனை அளிக்காது. இது உங்களுக்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். தியானம் செய்யும் இடமும் அதன் பலனில் முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications