For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா?

நமக்கே தெரியாமல் நமது உடல் தன்னை பாதுகாத்து கொள்கிறது. நாம் தினசரி செய்யும் சில சாதாரண நிகழ்வுகள் நமது உடலை பாதுகாக்கிறது.

|

இந்த உலகின் அதிக ஆச்சரியங்கள் நிறைந்த பொருள் என்றால் அது நமது உடல்தான். மருத்துவ வளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை நமது உடலை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் வருகிறது. மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதே கிடையாது.

Your Body Does These Things To Save Your Life

நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது நேரத்தையும், பணத்தையும் நாம் அதிகம் செலவிடுகிறோம். ஆனால் நமக்கே தெரியாமல் நமது உடல் தன்னை பாதுகாத்து கொள்கிறது. நாம் தினசரி செய்யும் சில சாதாரண நிகழ்வுகள் நமது உடலை பாதுகாக்கிறது. அப்படி நம் உடலை பாதுகாக்கும் சில நம்முடைய அன்றாட செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொட்டாவி விடுதல்

கொட்டாவி விடுதல்

கொட்டாவி விடுவது உங்கள் மூளைக்கு அமைதியை கொடுக்கும். வெப்பமான சூழ்நிலையில் வசிப்பவர்கள் அதிக கொட்டாவி விடுவார்கள். வெப்பமான சூழ்நிலையால் உங்கள் மூளை வெப்பமடையாமல் இருக்க அதன் வெப்பநிலையை குறைக்க செய்யப்படும் ஒரு பரிமாண தந்திரம்தான் கொட்டாவி விடுவதாகும்.

தும்மல்

தும்மல்

தும்மல் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை விரட்டுகிறது. பெரிய சத்தத்துடன் வரும் தும்மல் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வேடிக்கையான ஒலியை எழுப்ப உங்கள் உடல் உங்களை தூண்ட காரணம் உங்களின் ஆரோக்கியம்தான். அது நாசித்துளையில் இருக்கும் எரிச்சலூட்டும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது.

MOST READ: அனுமன் ஏன் வேண்டுமென்றே தன் சகோதரன் பீமனிடம் வம்புக்கு சென்றார் தெரியுமா?

நெளிவு எடுப்பது

நெளிவு எடுப்பது

அடிக்கடி நெளிவு எடுப்பது நம் உடலை வெப்பமாகவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. கடுமையான சோர்வில் இருக்கும்போது நாம் எழுந்து நமது உடலை வளைத்து நெளிவு எடுக்கிறோம். இதற்கு காரணம் நமது இரத்த ஓட்டம் சீராக உடல் முழுவதும் பரவி நம்மை சுறுசுறுப்பாக்குகிறது.

விக்கல்

விக்கல்

விக்கல் நம்மை மூச்சு திணறலில் இருந்து பாதுகாக்கிறது. விக்கல் வருவதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் கூறுவார்கள். ஆனால் அதன் உண்மையான காரணம் நாம் வேகமாக சாப்பிடுவதை தடுத்து நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்கவே விக்கல் வருகிறது. குறிப்பாக மெதுவாக சாப்பிடுவது நமது செரிமானத்தை அதிகரிக்கும்.

ஈரப்பதமான கைகள்

ஈரப்பதமான கைகள்

ஈரப்பதம் அதிகமிருக்கும் கைகள் நமக்கு நல்ல பிடிமானத்தை வழங்குகிறது. நமது கையில் அதிக ஈரப்பதம் இருப்பது நமக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். கைகள் ஈரமாக இருக்கும் போது ஏற்படும் சுருக்கங்கள் நமக்கு வலிமையான பிடிமானத்தை வழங்குகிறது. இது நமக்கு அசௌகரியமாக தோன்றலாம் ஆனால் டஇது நமது உடல் நமக்கு செய்யும் உதவியாகும்.

MOST READ: எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா? அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...!

கண்ணீர்

கண்ணீர்

நமது கண்கள் வரும் கண்ணீர் நமது உடல் நம்முடைய கண்ணை பாதுகாக்க செய்து வைத்திருக்கும் பாதுகாப்பு முறையாகும். கண்ணீர் நமது கண்களில் இருக்கும் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது நமக்குள் இருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை வெளியேற்றுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: body habits eye கண்கள்
English summary

Every Day, Your Body Does These Things To Save Your Life

These every day ordinary things your body does save your life.
Story first published: Tuesday, July 9, 2019, 12:52 [IST]
Desktop Bottom Promotion