For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடம்புக்குள்ள இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்ற இதை குடிச்சா போதும் தெரியுமா?

உங்கள் உடலை தூய்மைப்படுத்த மிகவும் சிறந்த மற்றும் எளிதான வழி உங்கள் உடலில் நீர்சத்துக்கள் குறையாமல் பார்த்து கொள்வதுதான்.

|

இன்று நாம் சுற்றுசூழல் முற்றிலும் மாசடைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது சுற்றுசூழலில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கால் நமது உடலின் ஒட்டுமொத்த இயக்கங்களையும் சிதைக்கக்கூடும். ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கும், உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்கும் சுத்திகரிப்பி முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Cucumber Lemon Detox Water Recipe for Weight Loss

உங்கள் உடலை தூய்மைப்படுத்த மிகவும் சிறந்த மற்றும் எளிதான வழி உங்கள் உடலில் நீர்சத்துக்கள் குறையாமல் பார்த்து கொள்வதுதான். முடிந்தளவு நீர் குடிப்பதே உங்கள் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றிவிடும். வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைசாறு உங்கள் உடலை சுத்தப்படுத்துவதோடு பல பலன்களையும் தரும். இதன் செய்முறை மற்றும் பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை

செய்முறை

இத்தனியா செய்வதற்கு தேவையான பொருட்கள் இரண்டு வெள்ளரிக்காய், ஒரு எலுமிச்சைப்பழம், ஒரு பாட்டில் தண்ணீர், சில ஐஸ்கட்டிகள் மற்றும் சில புதினா இலைகள். வெள்ளரிக்காயை சுத்தமாக கழுவி தோல் சீவிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். எலுமிச்சையையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

செய்முறை

செய்முறை

இதனுடன் சில புதினா இலைகளையும் சேர்த்து நீங்கள் தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் இவை அனைத்தையும் போட்டு விடுங்கள். இதில் தண்ணீரை நிரப்பி ஐஸ்கட்டிகள் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து விடவும். சிறிது நேரம் கழித்து இதனை எடுத்து நன்கு குலுக்குவிட்டு குடிக்கவும். இதற்கு கண்ணாடி பாட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வயிறு ஆரோக்கியம்

வயிறு ஆரோக்கியம்

இந்த நீரை குடிப்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். இது உங்கள் வயிறை சுத்தப்படுத்துவதுடன் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது. செரிமானத்தை தூண்டும் பல ஆரோக்கியமான என்சைம்கள் வெள்ளரிக்காயில் உள்ளது. காலையில் காபிக்கு பதிலாக இதனை குடித்து உங்கள் நாளை தொடங்குவது நல்லது.

MOST READ: இராவணனின் மனைவி ஆஞ்சநேயருக்கு அளித்த சாபம் என்ன? அதனால் அனுமனுக்கு என்ன நடந்தது தெரியுமா?

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இரண்டுமே சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். சுவையான இந்த தண்ணீரை குடிப்பது உங்களுக்கு பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை வழங்கும். இந்த இரண்டு பொருட்களிலும் இருக்கும் என்சைம்கள் உங்களுக்கு பருக்கள் இல்லாத முகத்தை வழங்கக்கூடும்.

கோடைகாலத்திற்கு ஏற்றது

கோடைகாலத்திற்கு ஏற்றது

இது உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்துக்கள் வெளியேறாமல் நாள் முழுவதும் பாதுகாக்கும். குறிப்பாக கோடை காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை குடிப்பது இழந்த ஆற்றலை உங்களுக்கு பெற்றுத்தரும்.

உப்பு

உப்பு

இது உங்கள் உடலில் இருக்கும் எலெக்ட்ரோலைட்டுகளின் அளவை சமநிலையில் வைப்பதன் மூலம் நீங்கள் சோர்வால் முடங்கிவிடாமல் பாதுகாக்கும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து குடிப்பது அதிக பலனை அளிக்கும். இது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலையில் பராமரித்து கொண்டே இருக்கும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானம் உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கக்கூடும். மேலும் இது உங்கள் பசியை கட்டுப்படுத்தும். பசியெடுக்காத போது நீங்கள் தேவையில்லாத உணவுகளை சாப்பிட்டு எடையை அதிகரித்து கொள்ள மாட்டிர்கள். எடை குறைப்பிற்கும் இந்த பானம் மிகவும் உதவியாக இருக்கும்.

MOST READ: பால் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சினை என்ன தெரியுமா?

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை தக்கவைப்பதுடன் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களுடன் சண்டையிடுவதுடன் இதயத்தையும் ஆரோக்யமாக பராமரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cucumber Lemon Detox Water Recipe for Weight Loss

Cucumber lemon detox water is a classic recipe that is very easy to prepare and it healps to lose weight.
Story first published: Tuesday, May 7, 2019, 15:56 [IST]
Desktop Bottom Promotion