For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளி எத்தகைய ஆபத்தானது தெரியுமா...?

எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமலே நம்மில் பலர் பலவற்றை செய்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதால் எண்ணற்ற நோய்கள் உடலுக்கு ஏற்படுமாம

|

இன்றைய நவநாகரீக வாழ்க்கை முறையில் நாம் பல செயல்களை முற்றிலும் தவறுதலாக செய்து வருகின்றோம். இது எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. உணவு முறையில் மாற்றம், உறக்கத்தில் மாற்றம், செயல்களில் மாற்றம் இப்படி பல மாற்றங்கள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்றங்கள் நல்ல முறையில் இருந்தால் நிச்சயம் வரவேற்க்க தக்கதே. ஆனால் அவை நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்தால் அதை நிறுத்தி கொண்டே ஆகவேண்டும்.

why shouldn tomatoes be refrigerated

அப்படிப்பட்ட ஒரு பழக்கம்தான் எல்லா வகையான பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பது. இது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமலே நம்மில் பலர் இதை செய்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதால் எண்ணற்ற நோய்கள் உடலுக்கு ஏற்படுமாம். அவ்வாறு தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிட்டால் என்ன விளைவுகள் வரும் என்பதை இந்த பதிவில் அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வி.ஐ.பி தக்காளி..!

வி.ஐ.பி தக்காளி..!

தக்காளி பற்றி தெரியும்... அது என்ன வி.ஐ.பி தக்காளி..? உண்மைதாங்க, தக்காளியின் விலை ஒரு சில மாதத்திற்கு முன்பு கிடுகிடுவென ஏறியது. அப்போது சிலர் தக்காளியை திருடியதால், அதற்கு வி.ஐ.பி அந்தஸ்து ஏற்பட்டு "வி.ஐ.பி தக்காளி" என்றே வைரல் ஆக தொடங்கியது. விலை உயர்வின் காரணமாக ஃப்ரிட்ஜில் தக்காளியை பல நாட்களுக்கு பதப்படுத்தி வைக்க தொடங்கினர். இது மட்டுமில்லைங்க, தக்காளியில் அதிக ஊட்டசத்துக்கள் உள்ளது. உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் இது நிறைய நன்மைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நன்மைகளை முற்றிலுமாக குறைக்கவல்லது ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளி.

இத்தனை ஊட்டச்சத்துக்களா..?

இத்தனை ஊட்டச்சத்துக்களா..?

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தக்காளி பல வகைகளிலும் உதவுகிறது.

கலோரிகள் - 18 Kcal

கால்சியம் - 10 mg

பொட்டாசியம் - 237 mg

மெக்னீசியம் - 11 mg

பாஸ்பரஸ் - 24 mg

சோடியம் - 5 mg

வைட்டமின் எ - 28%

வைட்டமின் சி - 21.5%

வைட்டமின் கே - 6.5%

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்..!

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்..!

ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டும். எல்லா வகையான உணவுகளையும் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும். ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும். மேலும் இவற்றின் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும்.

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதன் தன்மை முற்றிலும் மாறி சக்கைக்கு ஈடாகி விடும். சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி வினை புரிந்து மாற்றி விடுகிறது. அத்துடன் இதில் உள்ள 65 % ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது. ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியில் சுவை குறைந்து, மணம் இல்லாதவாறு மாறிவிடும். அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியை சமைத்து சாப்பிட்டால் சில சமயங்களில் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட வரலாம்.

தக்காளிக்கு மட்டும்தானா இது..?

தக்காளிக்கு மட்டும்தானா இது..?

பொதுவாக ஃப்ரிட்ஜில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்துக்களின் தன்மையை குறைத்து விடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகி விடும். இவற்றின் சுவை மற்றும் அமிலத்தில் மாற்றம் பெரும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நன்மையற்ற பொருளுக்கு சமமாக கருதப்படும். தக்காளியை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்றில்லை, இதை போன்றே பல்வேறு உணவு வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதவை...

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதவை...

மூலிகைகள் போன்றவற்றை கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் அவற்றின் மருத்துவ தன்மை மாறக்கூடும். மேலும் சில சமயங்களில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அவகேடோ, வாழைப்பழம், எலுமிச்சை, ஆப்பிள், பெரிஸ் போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க தவிர்க்க வேண்டும். வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு, பூண்டு, மிளகு, வாசனை பொருட்கள், ஜாம், ஊறுகாய், பிரட் ஆகியவற்றையும் பதப்படுத்த கூடாது.

ஃப்ரிட்ஜில் தட்பவெப்பம்...

ஃப்ரிட்ஜில் தட்பவெப்பம்...

எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவே அதன் தட்பவெப்பம் இருத்தல் வேண்டும். அதிக படியான தட்பவெப்பம் உணவு பொருட்களின் தன்மையை மாற்றி விடும். உணவுகள் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு அதன் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென்று சில கால அளவு இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு உணவிற்கும் தனி தனி தட்பவெப்பமும் உள்ளது. அதற்கேற்றாற் போல ஃப்ரிட்ஜின் தட்ப வெப்பத்தை வைத்தல் சிறந்தது.

எது சிறந்தது...?

எது சிறந்தது...?

எப்போதும் சுத்தமான ஃபிரெஷ் உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. காய்கறிகள் என்றாலும் பழங்கள் என்றாலும் அதன் தன்மை அவற்றின் கால அளவு மற்றும் பதப்படுத்தும் முறையை பொருத்தே தீர்மானிக்க படும். எப்போது உணவு உண்டாலும் அது பதப்படுத்தாத உணவா ..? என்பதை அறிந்து உண்ணவும். அத்துடன் வெளியில் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Never Refrigerate Tomatoes

The fridge may seem practical to keep fruit and veg from spoiling, but there’s one variety that should stay firmly on the kitchen bench.
Desktop Bottom Promotion