தண்ணீர் சத்து குறைந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்! அவசியம் தெரிஞ்சுக்கங்க

Posted By:
Subscribe to Boldsky

எலக்ட்ரோலைட்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எதோ கரண்ட் தொடர்பான விஷயமாக இருக்கிறதோ என்று நினைத்தீர்களானால் அது தவறு, எலக்ரோலைட்ஸ் உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உடலில் இருக்கக்கூடிய செல்கள் குறிப்பாக தசைகள் இயங்க எலக்ட்ரோலைட்ஸ் தேவைப்படுகிறது.சோடியம்,க்ளோரைடு, பொட்டாசியம், கால்சியம்,மக்னீசியம், போன்றவை தண்ணீரில் கலந்து ஐயன்ஸ் என்று அழைக்கப்படும். இவை தான் நரம்புகள்,தசைகளில் ஊடுருவிச் செல்கிறது.

Why We Need Electrolytes?

இதன் மூலமாகத்தான் நாம் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். நடப்பது,பார்ப்பது,இதயம் துடிப்பது,யோசிப்பது போன்ற நம்முடைய ஆக்‌ஷன்களுக்கு எலக்ட்ரோலைட்ஸ் அவசியமானதாய் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன செய்கிறது எலக்ட்ரோலைட்ஸ் :

என்ன செய்கிறது எலக்ட்ரோலைட்ஸ் :

இந்த எலக்ட்ரோலைட்ஸ் மினரல்ஸ் எல்லாம் எலக்ட்ரிக் தன்மை கொண்டது, சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,பை கார்பனேட்,மக்னீசியம் என உணவின் மூலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மினரல்ஸ்களில் மிகச் சிறிய அளவிலான எல்க்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.

இந்த எலக்ட்ரோலைட்ஸ் நம்முடைய செல்கள்,திசுக்கள் போன்றவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிடும். இதனால் உடலுக்குள் உறுப்புகளுக்கிடையே தொடர்புகள் கொள்ள முடிகிறது.

யாருக்கெல்லாம் வாய்ப்பு :

யாருக்கெல்லாம் வாய்ப்பு :

எலக்ட்ரோலைட்ஸ் குறைய குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் குறையக்கூடும் என்று சொல்லமுடியாது, யாருக்கு வேண்டுமானாலும் இது ஏற்படலாம். குறிப்பாக, அதிக உடற்பயிற்சி செய்பவர்கள்,வெயிலில் பணியாற்றுபவர்கள்,சத்துக்குறைபாடு கொண்டவர்கள்,முதியவர்கள் ஆகியோருக்கு எலக்ட்ரோலைட்ஸ் குறைந்திட வாய்ப்புண்டு.

சோடியம் :

சோடியம் :

நம் உடலில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவினை கட்டுப்படுத்துவது சோடியம் தான். குறிப்பாக இந்த சோடியம் நம்முடைய ரத்தம்,ப்ளாஸ்மா மற்றும் லிம்ப் ஆகிய திரவங்களில் இருக்கக்கூடும்.

ஒரு செல்லுக்கு வெளியில் சோடியம் பராமரிக்கும்,செல்லுக்கு உள்ளே பொட்டாசியம் பராமரித்திடும். ஆக, செல்களின் துரித செயல்பாட்டிற்கு இவை இரண்டுமே முக்கியம்.

பை கார்பனேட் :

பை கார்பனேட் :

இது தான் செரிமானத்திற்கு உதவுகிறது. அதோடு நம் உடலின் பிஎச் அளவையும் நிலையாக வைத்திருக்க உதவிடும். உடலில் அதிகப்படியாக அமிலம் சேர்ந்தால் அவற்றை சரி செய்ய பை கார்பனேட் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.

பொட்டாசியம் :

பொட்டாசியம் :

ரத்தத்தில் பொட்டாசியம் அளவை சரிவர பாதுகாக்க உடல், செல்களில் சேமித்து வைத்த பொட்டாசியத்தை பயன்படுத்துகிறது.உணவு பானங்களில் இருந்து கிடைக்கும் பொட்டாசியம் அதிகமானால் சிறுநீர், வியர்வை, ஜீரண மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

உடலில் பொட்டாசிய அளவு குறைந்தால் தசைகள் பலமிழக்கும். பக்கவாதம் ஏற்படலாம். மலட்டுத் தன்மை, எலும்புகள் பலவீனம், இதயக் கோளாறுகள் ஏற்படலாம்.பொட்டாசியம் மற்றும் சோடியம் இரண்டும் வியர்வை வழியாக வெளியேறக்கூடியது.

கால்சியம் :

கால்சியம் :

இதுவரையில் கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது என்றே பார்த்து வந்திருப்போம், ஆனால் கால்சியமும் ஒரு வகை எலக்ட்ரோலைட் என்பது உங்களுக்கு தெரியுமா?

நரம்புகளின் செயல்பாடுகள்,தசைகள் மற்றும் ரத்த உறைவு பிரச்சனைக்கு இது தீர்வாக அமைந்திடும்.

எலும்புகளிலிருந்து :

எலும்புகளிலிருந்து :

எலும்புக்கு மட்டுமல்ல திசுக்கள் மற்றும் செல்களின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது, அதன் கால்சியம் அளவு குறையும் போது அவை எலும்புகளிலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்திடும்.

தொடர்ந்து இது நீடிக்கும் போது எலும்புத்தேய்மானம் ஆகியவை உண்டாகும்.

மக்னீசியம் :

மக்னீசியம் :

நரம்புகளின் செயல்பாடுகளுக்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான ஒன்றாகும், தசைகளின் வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கியமான உடலியல் இயக்கங்களுக்கு மக்னீசியம் தேவைப்படுகிறது.

இவை ரத்த அழுத்தத்தையும் நம் உடலில் சர்க்கரை அளவினையும் சீராக வைத்துக் கொள்ள உதவிடுகிறது.

உப்பு :

உப்பு :

இதனை சோடியம் க்ளோரைடு அல்லது என் ஏ சி எல் என்று அழைப்பார்கள். நம் எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இந்த உப்பு எளிதாக தண்ணீரில் கரைந்திடும் அதோடு இது ஒரு எலக்ரோலைட் ஆகும்.

உப்பினை நாம் எடுத்துக் கொள்ளும் போது இதிலிருக்கும் ஐயன்ஸ் தண்ணீரில் கலந்து உடலை பேலன்ஸாக வைத்துக் கொள்ள உதவிடுகிறது.

இது மட்டும் போதுமா? :

இது மட்டும் போதுமா? :

சீரான உடல் நலத்திற்கு அனைத்து விதமான மினரல்ஸ்களும் உங்களுக்கு தேவைப்படும். நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய உப்பினைச் சுற்றிலும் இருக்கக்கூடிய திரவத்தில் கால்சியம்,மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் என ஏகப்பட்ட மினரல்ஸ்கள் நிறைந்திருக்கும்.

எலக்ரோலைட் உங்கள் உடலில் பேலன்ஸ்டாக இருக்க வேண்டும், இல்லையெனில் முதல் அறிகுறியாக உங்களுக்கு ஏற்படும்.

உப்பு அதிகரித்தால் :

உப்பு அதிகரித்தால் :

உங்கள் உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் அதிகப்படியான தண்ணீர் தாகம் ஏற்படும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் உடலில் அதிகப்படியான தண்ணீர் சேர்ந்தால் அவற்றை சீராக ஆக்குவதற்கு இதயம் வேகமாக துடிக்க நேரிடுகிறது.

இதைத்தாண்டி கிட்னி கற்கள்,பக்கவாதம் ஆகியவை ஏற்படக்கூடும்.

தலைவலி :

தலைவலி :

உங்கள் உடலில் இருக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து டீ ஹைட்ரேசன் ஏற்பட்டால் உங்கள் ரத்தத்தில் இருக்கக்கூடிய எலக்ட்ரோலைட்ஸ் கான்சட்ரேட்டாக மாறிடும்.

இவை உங்களது தாகத்தை அதிகரிக்கும், அதே நேரத்தில் ஏடிஎச் (antidiuretic hormone) என்ற ஹார்மோன் தூண்டப்படும். இந்த ஹார்மோன் தூண்டப்படுவதால் அதிக சிறுநீர் வெளியேற வைத்திடும், டீ ஹைட்ரேசன் ஏற்பட்டாலும் சிலருக்கு தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதால் விரைவிலேயே இயல்பினை இழப்பார்கள், டீஹைட்ரேசன் சிலருக்கு தலைவலியை கூட ஏற்படுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why We Need Electrolytes?

Why We Need Electrolytes?
Story first published: Thursday, February 22, 2018, 11:54 [IST]