For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா?... இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க...

மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மஞ்சள் காமாலையை "மலேரியல் ஹெப்படைடஸ்" என்கிறார்கள். பொதுவாக மலேரியா மூளையை பாதிக்கும் போது இவ்வாறு ஆகிறது.

|

மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மஞ்சள் காமாலையை "மலேரியல் ஹெப்படைடஸ்" என்கிறார்கள். பொதுவாக மலேரியா மூளையை பாதிக்கும் போது இவ்வாறு ஆகிறது.

causes of jaundice in tamil

ஆனால் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் மிகவும் அபாயகரமான மற்றும் சிக்கலான முறையில் உடல் நிலையை பாதிக்கின்றது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

மலேரியா ஏற்படும் போது பொதுவாக ஜூரம், அடிக்கடி குளிர் நடுக்கம், இரத்த சோகை போன்ற அறிகுறிகள் இருக்கும். இரத்தில் உள்ள சிகப்பு செல்களை இந்த மலேரியா பேரசைட் எனப்படும் நுண்கிருமிகள் அழித்து விடுவதால் இதுவே மஞ்சள் காமாலைக்கும் வழி வகுத்து விடுகிறது. இது போல மேலும் சில காரணங்களால் மலேரியாவுடன் சேர்ந்து மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புள்ளது. வாருங்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மலேரியல் ஹெப்படைடஸ்

மலேரியல் ஹெப்படைடஸ்

மலேரியல் ஹெப்படைடஸ் - கல்லீரல் வீக்கம் என்று புரிந்து கொள்ளலாம், குறிப்பாக சொல்லப்போனால் செரிபரல் மலேரியா உண்டாகும் போது ஒரே நேரத்தில் மலேரியாவும், மஞ்சள் காமாலையும் ஏற்படுகிறது. இரத்தில் உள்ள பில்ருபின் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகி குளுடமேட் பைருவேட் ட்ரான்மினேஸ்-ன் இயல்பான எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகமாக்கி விடுகிறது.

ஆராய்ச்சி குழுவினரின் ஆய்வு அறிக்கையின்படி இந்த செரிபுரல் மலேரியாவால் பாதிக்கப்பட்ட 95 நோயாளிகளில் 25 பேருக்கு மலேரியல் ஹெப்படைடஸ் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி மலேரியல் ஹெப்படைடஸ் பாதிப்பட்ட நோயாளிகளுக்கு கடுமையான சிறுநீரக தொற்று நோய் உண்டாகி முடிவில் மஞ்சள் காமாலையில் கொண்டு போய் விட்டுவிடுகிறது.

உணவுக்கட்டுப்பாடுதான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து

இரத்த நாளங்களில் இரத்த ஒழுக்கு

இரத்த நாளங்களில் இரத்த ஒழுக்கு

ம்லேரியா பாதிப்பால் இரத்த நாளங்களின் இரத்த ஒழுக்கு அதிகமாவதும் மஞ்சள்காமாலை நோய்க்கு காரணமாகிறது. இது இரத்தில் பில்ருபின் அளவு அதிகமாகும் அபாயத்திற்கும் காரணமாகிறது.

இரத்த நாளங்களில் பரவலாக இரத்தம் உறைதல்

இரத்த நாளங்களில் பரவலாக இரத்தம் உறைதல்

இரத்த நாளங்களில் பரவலாக இரத்தம் உறைதல் மலேரியாவின் கடுமையான பாதிப்புகளின் ஒருவகை எனலாம். மைக்ரோர்கானிஜியோபதிக் (மிகச்சிறிய இரத்த நாளங்கள்) என்ற பாதிப்பு பெரும்பாலும் மலேரியாவுடன் கூடிய மஞ்சள் காமாலை காரணமாகிறது.

குளூக்கோஸ்-6-பாஸ்பேட் டி ஹைட்ரோஜெனேசிஸ் குறைப்பாடு

குளூக்கோஸ்-6-பாஸ்பேட் டி ஹைட்ரோஜெனேசிஸ் குறைப்பாடு

இதை G6PD என்று குறிப்பிடப்படும் குறைப்பாடு தான் இரத்த நாளங்களின் இரத்த ஒழுக்குக்கு முக்கிய காரணமாகி மலேரியாவுடன் கூடிய மஞ்சள் காமாலை ஏற்படுத்துகிறது.

மலேரியாக்கான மருந்து

மலேரியாக்கான மருந்து

இதில் கொடுமை என்னவென்றால் மலேரியாக்கான மருந்துகளே மஞ்சள் காமாலை உண்டாக காரணமாகின்றது. உதாரணமாக மெல்லோகுயினைன் எனும் மருந்து மூளையை பாதிக்கும் மலேரியாவுக்கு சிறந்த மருந்து என்றாலும் அதன் பக்க விளைவு கல்லீரலை பாதிக்கிறது. மலேரியாவுடன் தோன்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெல்லோகுயினைன் மருந்தை கொடுக்கக்கூடாது.

இதர காரணங்கள்

இதர காரணங்கள்

மலேரியாவால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பு , இதர வைரஸால் ஏற்படும் மஞ்சள் காமாலை, மற்றும் நாள்பட்ட காமாலை நோய் உள்ளவர்களையும் அதிகம் பாதிக்கிறது.

இந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Does Malaria Cause Jaundice

In its severe form, malaria causes jaundice. Anti-malarial drugs can be the reason.
Desktop Bottom Promotion