For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த தானம் செய்வதால் என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரியுமா..?

|

நம் உடலின் இயக்கம் சரி வர நடக்க துணை புரிவது இரத்தம்தான். உடலில் ரத்தம் இல்லையென்றால் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய இயலாது. ஒரு உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்புக்கு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள இந்த இரத்தம் தான் உற்ற நண்பனாக வழி செய்கிறது. இத்தகைய ரத்தத்தின் அளவு உடலில் குறைந்தால் பல்வேறு பாதிப்புகளும் நோய்களும் வர தொடங்கும். உடலில் குறைவான அளவு ரத்தம் இருக்கும்போதோ அல்லது யாருக்கேனும் தேவைப்படும் போது நாம் இரத்தத்தை தானம் செய்வது வழக்கமே.

இந்த மகத்துவமான தானத்தில் உள்ள நன்மைகளையும், இதனால் ஏற்படும் சில பக்க விளைவுகளையும், ரத்த தானத்தின் போது ஏற்படும் பக்க விளைவுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக அறிந்து கொள்வோம் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தானத்தில் சிறந்த தானம்..!

தானத்தில் சிறந்த தானம்..!

பொதுவாக தானத்தில் சிறந்தது எதுவென கேட்டால், இரண்டு தானத்தை கூறுவார்கள். ஒன்று கண் தானம், மற்றொன்று இரத்த தானம். ஒருவருக்கு நாம் இரத்தத்தை தானமாக வழங்குவதன் மூலம் அவரின் உயிரையே நாம் காப்பாற்றி விடுகின்றோம். அற்புத மகத்துவம் பெற்றது இந்த இரத்த தானம்.

பக்க விளைவு #1

பக்க விளைவு #1

ஒருவருக்கு நாம் உதவுவது தவறில்லை. ஆனால், அதில் உள்ள பக்க விளைவுகளையும் அறிந்து கொண்டு,அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்த தானம் செய்தால் முதன்முதலில் ஏற்படும் பக்க விளைவு "சீராய்புண்" தான். ரத்தத்தை தானம் செய்யும் போது, அவற்றை ஊசியின் மூலம் எடுத்து கொள்வர். இது ஒரு சில சீராய்வுகளை நரம்புகளில் ஏற்படுத்தி வலியை தரும்.

பக்க விளைவு #2

பக்க விளைவு #2

இரண்டாவதாக, முக்கியமான ஒன்றாக கருதப்படுவது இரத்தம் வந்து கொண்டே இருத்தல். ரத்த தானம் செய்த பிறகு ரத்தப்போக்கு ஏற்பட கூடும். இதனை நிறுத்தவே மருத்துவர்கள் பஞ்சை கொண்டு அழுத்தி அந்த இடத்தில பிடித்து கொள்ள சொல்வார்கள். இதனை செய்ய தவறினால் ரத்த அதிகம் வெளியேற தொடங்கும்.

பக்க விளைவு #3

பக்க விளைவு #3

பெரும்பாலான ரத்த தானம் செய்வோர்க்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தானம் செய்த 20 நிமிடம் வரை எங்கேயும் நகராமல் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டும். மேலும், ஏதேனும் பழ சாற்றை குடித்தால் இந்த மயக்க நிலை சற்று மாறும்.

MOST READ: முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதை தடுக்கும் முன்னோர்களின் எளிய முறைகள்..!

பக்க விளைவு #4

பக்க விளைவு #4

ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்த பிறகு எந்த உணவையும் சாப்பிட தோன்றாத அளவிற்கு குமட்டலாக இருக்கும். எனினும் அந்த குமட்டலையும் தாண்டி சத்தான உணவை சாப்பிட வேண்டும். இல்லையேல் கட்டாயம் உடல் உபாதைகள் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பக்க விளைவு #5

பக்க விளைவு #5

இரத்த தானம் என்பது வலியின்றி நடக்கும் விஷயம் இல்லை. தானத்தின் போது அதிக வலி இருக்கதான் செய்யும். ஆனால், மருத்துவர்கள் இந்த வலியை சிறிது நேரம் உணராதவாறு வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்தவும் செய்வர். எனவே, வலி அதிகம் இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

பக்க விளைவுகளை தவிர்க்க கூடியவை..!

பக்க விளைவுகளை தவிர்க்க கூடியவை..!

மேற்சொன்ன பக்க விளைவுகளை தவிர்க்க வேண்டுமென்றால் ஒரு சில முக்கிய வழி முறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். இரத்த தானம் செய்தவர்கள், செய்த உடன் தங்களது வேலையை பார்க்க ஆயத்தம் ஆக கூடாது. கட்டாயம் சிறிது நேரம் ஓய்வு அவர்களுக்கு தேவை.

இரும்பு சத்து உணவுகள்

இரும்பு சத்து உணவுகள்

இரத்த திசுக்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்ல இரும்பு சத்துதான் உதவுகிறது. இரும்புசத்து இல்லையேல், இரத்தமானது சீரான சிவப்பு அணுக்களை கொண்டிருக்காது. எனவே, இரத்த தானம் செய்த உடன் முளைக்கீரை, பீன்ஸ், உலர் திராட்சைகள், ப்ரோக்கோலி, இறைச்சியின் கல்லீரல் பகுதி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

MOST READ: முதுகெலும்பை சிதைக்கக்கூடிய தினசரி பழக்கவழக்கங்கள்

வைட்டமின் சி

வைட்டமின் சி

இரும்பு சத்தை உடலில் அதிகம் எடுத்து கொள்ள வைட்டமின் சி உதவுகிறது. எனவே, வைட்டமின் சி அதிகம் கொண்ட உணவு வகைகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்ச் போன்றவற்றை ரத்த தானத்திற்கு பிறகு சாப்பிட்டால் இரும்பு சத்தை விரைவிலே உடல் எடுத்து கொள்ளும்.

திரவ நிலை உணவுகள்

திரவ நிலை உணவுகள்

இரத்த தானம் செய்த அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை கட்டாயம் அதிக படியான திரவ உணவுகளை எடுத்த கொள்ள வேண்டும். நன்றாக நீரை அருந்த வேண்டும். மேலும், பழ சாறுகளை அதிகம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலை மாறும்.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6

இரத்த தானம் செய்த பிறகு வாழை பழம், உருளை கிழங்கு, கொட்டை வகைகள், முட்டை, இறைச்சி போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள அதிக படியான புரதம் உடைந்து, அவை எண்ணற்ற ஊட்டசத்துக்ளை உடலுக்கு தர கூடுமாம். எனவே உடலின் சோர்வு, மயக்கம் போன்றவை எளிதாக தவிர்க்க முடியும்.

நன்மைகள் #1 #2

நன்மைகள் #1 #2

இரத்த தானம் செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக இதயம் சார்ந்த நோய்களை இரத்த தானம் செய்வதன் மூலம் தவிர்க்க முடியும். அத்துடன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரத்த தானம் பெரிதும் உதவுகிறது. அத்துடன், கல்லீரல் பாதிப்படைவதையும் இது தடுக்கிறது.

MOST READ: ஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்..!

நன்மைகள் #3 #4

நன்மைகள் #3 #4

புற்றுநோய் உருவாக கூடிய சாத்திய கூறுகளை இரத்த தானம் குறைக்கிறது. புதிய சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி சுறுசுறுப்பாக வைக்கிறது. குறிப்பாக இரத்த தானம் செய்வதால் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

நன்மைகள் #5 #6

நன்மைகள் #5 #6

இரத்தின் அளவு உடலில் சம நிலையில் வைக்க இந்த இரத்த தானம் உதவுகிறது. சுமார் 650 கலோரிகளை 450 ml இரத்த தானத்தின் மூலம் குறைக்க முடியுமாம். அத்துடன், சுத்தமான இரத்தத்தை இதனால் பெற முடியும். மாரடைப்பு போன்றவை இரத்த தானம் செய்வதன் மூலம் தவிர்க்க படுகிறது.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What are the Advantages and Disadvantages of Blood Donation

While a blood donation can be vital for some people, what are the effects on those who donate the blood? In this article, we take a look at the advantages and disadvantages of giving blood.