For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விறைப்பு தன்மைக்காக பயன்படுத்தும் வயாகரா எத்தகைய ஆபத்தானதுனு தெரியுமா...?

|

இப்போதெல்லாம் நமக்கு பொறுமை என்பதே மிகவும் குறைந்த அளவிலே உள்ளது. எந்த ஒரு செயலுக்காகவும் சிறிது நேரம் காத்திருந்தாலே அது பெரிய ஆச்சரியமாக மாறி விட்டது. மக்களின் எண்ணமும் அதற்கு தகுந்தாற் போல மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இதே தான் குழந்தையை பெற முயற்சிக்கும் தாம்பத்திய வாழ்விலும் நடக்கிறது. பலர் இந்த இல்லற வாழ்வில் இனிமையை இழந்து, உறவில் மிக பெரிய விரிசலை அடைந்து வருகின்றனர்.

இதனை தடுக்க எண்ணற்ற மாத்திரைகளை சாப்பிட்டுகின்றனர். இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது "வயாகரா" தான். பெரும்பாலன ஆண்கள் இதனை தொடர்ந்து சாப்பிடுகின்றனர். இது மிக ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் தரும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதன்மை பிரச்சினை எது..?

முதன்மை பிரச்சினை எது..?

ஆண்களின் முதன்மையான பிரச்சினையாக பல கருதப்படுகிறது. அவற்றில் மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு, ஆண்மை குறைபாடு போன்றவை ஒரு புறம் இருக்க, மறு புறத்தில் விறைப்பு தன்மை அவர்களை வாட்டி கொண்டிருக்கிறது. பல ஆண்கள் இதனால் அவர்களின் இல்லற வாழ்வில் நிம்மதியில்லாமல் இருக்கின்றனர் என ஆய்வுகள் சொல்கிறது.

தீர்வுக்காக வயாகராவா..?

தீர்வுக்காக வயாகராவா..?

விறைப்பு தன்மை பிரச்சினையை குணப்படுத்த பெரும்பான்மையான ஆண்கள் இந்த வயாகராவை எடுத்து கொள்கின்றனர். இந்த பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் இதனை தொடர்ந்து உண்கின்றனர். ஒரு புறத்தில் இதற்கு தீர்வை போன்ற மாயையை தந்து விட்டு, பிறகு பெரிய விளைவுகளை தருகிறது.

வயாகரா எப்படி..?

வயாகரா எப்படி..?

இந்த வயாகரா மாத்திரைகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது. இதில் sildenafil என்கிற மூல பொருள் உள்ளது. இதுதான் உடலில் வேதி வினைகளை ஏற்படுத்தி, பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைக்கிறது. அத்துடன் சீரான ரத்த ஓட்டத்தையும் இது தருகிறது.

வயாகராவும் தாம்பத்தியமும்..!

வயாகராவும் தாம்பத்தியமும்..!

இல்லற வாழ்வு முக்கியமான ஒன்றுதான். என்றாலும் அதனை வேறு முறையில் நாம் கையாள்வதுதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இது போன்ற மாத்திரைகளை நாம் உட்கொள்வதால் ஆரம்பத்தில் இனிமையை தந்து போக போக பல்வேறு தீங்கை ஏற்படுத்தும். இது ஒரு வித உணர்வை நேரடியாக தூண்டாமல் மனதில் மாய உணர்வை ஏற்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட செய்யும்.

MOST READ: புகைப்பழக்கம் இருந்தாலும் உங்களின் நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ளும் எளிய வழிகள்..!

நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம்

வயகரா உட்கொள்வதால் பின்னாளில் பெரிய ஆபத்துகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை உட்கொள்வதால் நேரடியாக நரம்பு மண்டலத்தில் தாம்பத்திய உணர்வை அதிகம் தூண்ட செய்யும். இதனால், ஆண்களுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, தொடர்ந்து எடுத்து கொள்ள செய்யும். இது நரம்பு மண்டலத்தையே முற்றலிலுமாக சிதைத்து விடும்.

மாரடைப்பு

மாரடைப்பு

வயாகராவை தொடர்ந்து எடுத்து கொண்டு வந்தால் ரத்த ஓட்ட பாதையில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம். இது மாரடைப்பு, பக்க வாதம், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றை ஏற்படுத்தும். இதயம் பலவீனம் உள்ளவர்கள் வயாகராவை எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

இனப்பெருக்க மண்டலம்

இனப்பெருக்க மண்டலம்

வயாகரா உண்மையில் ஆண்களின் பிரச்சினையான விறைப்பு தன்மையை போக்குவதில்லை. மாறாக சிறிது நேர தாம்பத்திய உறவை மேம்படுத்த செய்கிறது. இது முற்றிலுமாக இந்த பிரச்சினைக்கு தீர்வை தராது. மேலும், இதன் தாக்கம் அதிக நேரம் இருந்தால் பிறப்புறுப்பில் ஒரு வித வலியை இது தருமாம்.

தலைவலி

தலைவலி

வயகராவை எடுத்து கொள்வோருக்கு அதிக தலைவலி ஏற்படும். குறிப்பாக இது மூளை பகுதிக்கு செல்வதால் இதன் தாக்கம் அதிகரிக்க கூடும். அத்துடன் நரம்பு மண்டலத்தை பாதித்து, தலைவலியை தரும். இதே பிரச்சினை நீடித்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

MOST READ: 2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க!

பார்வை குறைபாடு

பார்வை குறைபாடு

ஆண்கள் தங்களின் ஒரு சில மணிநேர இன்பத்திற்காக இந்த வயாகராவை எடுத்து கொண்டு வாழ்நாள் முழுவதும் பலவித கோளாறுகளை அனுபவிக்க நேரிடும். அதில் பார்வை குறைபாடும் அடங்கும். இது நரம்பு மண்டலத்தை பாதிக்க செய்வதால் நேரடியாக கண் பார்வையை தாக்கும்.

செரிமான கோளாறுகள்

செரிமான கோளாறுகள்

வயாகரா உட்கொள்வதால் உணவு மண்டலத்தில் கோளாறுகள் ஏற்படும் என ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக வாந்தி, குமட்டல், அஜீரண கோளாறுகள் இந்த வயாகரா தருமாம். மேலும், ஒரு வித சோர்வை உடலுக்கு தந்து உடல் நலனை முற்றிலுமாக பாதித்து விடும்.

யாரெல்லாம் சாப்பிட கூடாது..?

யாரெல்லாம் சாப்பிட கூடாது..?

வயகரா மாத்திரைகளை கட்டாயம் ஒரு சிலர் சாப்பிட கூடாது. குறிப்பாக...

- இதய நோயாளிகள்

- கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள்

- சிறுநீரக கோளாறு உள்ளவர்கள்

- குறைந்த ரத்த அழுத்தமுள்ளவர்கள்

- நரம்பு தளர்ச்சி கொண்டோர்

இவற்கலெல்லாம் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள விரும்பினால் மருத்துவரின் ஆலோசனை அவசியமானது.

எவ்வளவு உட்கொள்ளலாம்..?

எவ்வளவு உட்கொள்ளலாம்..?

இந்த மாத்திரையானது 25, 50, அல்லது 100 mg அளவுகளில் கிடைக்கிறது. விறைப்பு தன்மைக்காக 24 மணி நேரத்தில் 1 மாத்திரை எடுத்து கொள்வது உகந்தது. அளவுக்கு மீறி இதனை உட்கொண்டால் மேற்கொண்ட பிரச்சினைகள் கட்டாயம் ஏற்பட கூடும். மேலும், இதனை தொடர்ந்து எடுத்து கொண்டாலும் பல பிரச்சினை வரும்.

மாற்று வழி உள்ளதா..?

மாற்று வழி உள்ளதா..?

வயாகராவிற்கு மாறாக நாம் உண்ணும் உணவுதான் மருந்தாக இருக்கிறது. அவகேடோ, தர்பூசணி, அத்திப்பழம், பாதாம், பூண்டி, இஞ்சி, பூசணி விதைகள் நல்ல பலனை தரும். மேலும், இனிமையான வாழ்வை மேற்கொள்ள இந்த உணவுகள் அற்புதமாக உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Viagra And Its Side-Effects

Erection is a physiological phenomenon in which the penis becomes firm, engorged, and enlarged. Also it affects men's sexual life.