For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய உளவியல் பிரச்சினைகள்

  |

  பொதுவாகவே சர்க்கரைவியாதி, புற்றுநோய், எடைஅதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் உளவியல் சிக்கல்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. முக்கியமாக இந்தியாவில் உளவியல் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. மனரீதியாக உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினை உங்களை உடல்ரீதியாகவும் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  Health

  மனநோயின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத்தொடங்கிவிட்டாலே அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் பாதியாய் குறைந்துவிடும். வருடம்தோறும் இந்தியாவில் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இங்கு நாம் அறிந்திராத அதேசமயம் அலட்சியப்படுத்தக்கூடாத மனநோய்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மனச்சோர்வு

  மனச்சோர்வு

  மனச்சோர்வு உலகளவில் முதல் இடத்தில இருக்கும் மண்நோயாகும், ஏனெனில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90 சதவீதத்தினர் மனசோர்வால் பாதிக்கப்ட்டவர்களாகவே இருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலியே மருத்துவர்களின் கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 1,35,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

  சைக்ளோதிமியா

  சைக்ளோதிமியா

  சைக்ளோதிமியா என்பது ஒரு வகையான நீண்டகால மனநிலை கோளாறு ஆகும், அடிப்படையில் இது பைபோலார் டிஸார்டரின் ஆரம்ப நிலையாகும். இதனை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும், இது மரபணுக்களின் மூலம் பரவுவதாக கருதப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு சோகம் அல்லது அதிகளவு சந்தோஷத்தால் அவதிப்படுவார்கள். இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே ஏற்படக்கூடியது.

  கிளெப்டோமேனியா

  கிளெப்டோமேனியா

  கிளெப்டோமேனியா அதிகம் தூண்டப்படும் ஒரு மனநோயாகும், இதனை பற்றிய போதிய விழிப்புணர்வு பெரும்பாலோனோருக்கு இல்லை என்பதே உண்மை. இந்த நோய் உள்ளவர்கள் பணத்திற்காகவோ அல்லது இலாபத்திற்காகவோ திருடமாட்டார்கள். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருடுவதற்கு முன்னரும், திருடிய பிறகும் அதிகளவு மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.

  பைரோமேனியா

  பைரோமேனியா

  இது மற்றொரு தூண்டப்படும் மனநோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் திருடாமல் இருக்க இயலாது, திருடினால் தான் மனஅமைதி கிடைக்கும் என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். இது அவர்களின் தனிப்பட்ட இலாபங்களுக்காக பெரும்பாலும் செய்யப்படுவதாகும். குழந்தைகளும், இளைஞர்களுமே பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

  தூக்கத்தில் முடக்கம்

  தூக்கத்தில் முடக்கம்

  நாம் சிறுவயது முதலே பயந்தபடி வளர்ந்த ஒரு மனநோய் என்றால் அது தூக்க முடக்கம் மட்டும்தான். இது திடீரென தாக்கும்போது நாம் விழித்திருந்தாலும் சரி உறங்கினாலும் சரி நம்மால் உடலை அசைக்க முடியாது. இது பயங்கரமான நரம்பு நோய்களான நார்கோலெப்ஸியுடன் தொடர்புடையது.

  ட்ரைகோட்டில்மேனியா

  ட்ரைகோட்டில்மேனியா

  முக்கியமான உளவியல் கோளாறுகளில் ஒன்றான இது முடி இழுக்கும் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது. தூண்டப்படும் மனநோயான இது நோயாளிகளை தங்கள் முடியை தாங்களே இழுத்துக்கொள்ளும்படி செய்யக்கூடியது, சிலர் அதனை உண்ணக்கூட செய்வார்கள். இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது சற்று கடினமானது, பெரும்பாலும் மனஅழுத்தம் அல்லது PTSD ஆல் இது தூண்டப்படலாம்.

  பேக்டியஸ் கோளாறு

  பேக்டியஸ் கோளாறு

  பெரும்பாலான மக்கள் இது பற்றி தெரியாது, ஆனால் இது மிகவும் மோசமான உளவியல் நோயாகும். உங்களின் நண்பர்கள் சிலர் அலுவலகத்திற்கு வராமல் இருக்க சில காரணங்களை கூறுவார்கள், ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல்நிலை சரியில்லை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள். சிலர் தாங்களாவே கையை வெட்டிக்கொள்ளுதல் போன்ற முட்டாள்தனங்களில் ஈடுபடுவார்கள்.

  போதைப்பொருட்களை சார்ந்திருத்தல்

  போதைப்பொருட்களை சார்ந்திருத்தல்

  ஆய்வுகளின் படி கஞ்சா போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பவர்களில் 9 சதவீதத்தினர் அதற்கு அடிமையாகின்றனர், தினமும் உபயோகிப்பவர்களில் இந்த எண்ணிக்கை 10 முதல் 12 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு மருத்துவரீதியாக பெரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நரம்புத்தளர்ச்சி, மனச்சோர்வு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

  அஃப்ரோபோபியா

  அஃப்ரோபோபியா

  அஃப்ரோபோபியா மக்களால் அதிகம் கவனம் செலுத்தப்படாத உளவியல் நோயாகும். இதனால் பாதிப்பட்டவர்கள் சில சூழல்களை கண்டு பயப்பட தொடங்குவார்கள், அது இருட்டாகவோ, கூட்டமாகவோ அல்லது தனிமையான சூழலாக கூட இருக்கலாம். இது போன்ற சூழல்களை தவிர்க்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் வீட்டை விட்டே வெளியே வர பயப்படுவார்கள்.

  டீரியாலிசேசன்

  டீரியாலிசேசன்

  டெரியாலிசேசன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியுலகத்தை உண்மையென நம்பவே தயங்குவார்கள். அவர்கள் மற்றவர்களிடம் உண்மையில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். இது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு உளவியல் பிரச்சினையாகும், ஆனால் அவர்கள் இதனை உணரமாட்டார்கள். வாதம், அல்லது தலையில் ஏற்பட்ட காயம் போன்றவை இந்த பிரச்சினை ஏற்பட காரணமாகும். தூக்கம் தொடர்பான பிரச்சினைகளே இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  10 unknown psychological disorders which affect mental health

  It is not uncommon to see psychological disorders not getting the importance and seriousness they deserve. Because people are not aware of the importance of mental health. Here are some most underrated psychological disorders that affect victims across the world.
  Story first published: Tuesday, August 7, 2018, 17:10 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more