For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொம்புச்சா டீ குடிச்சிருக்கீங்களா?... அதுபத்தி தெரியாதா?... அட என்னங்க போங்க...

கொம்புச்சா என்ற பழமைவாய்ந்த குடிநீர் பானம் பல நூற்றாண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது சீனாவில் திசின் என்னும் வம்சாவளியினரின் ஆட்சி காலத்தில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டதாகும்.

By Vathimathi S
|

கொம்புச்சா என்ற பழமைவாய்ந்த குடிநீர் பானம் பல நூற்றாண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது சீனாவில் திசின் என்னும் வம்சாவளியினரின் ஆட்சி காலத்தில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டதாகும். இதில் உள்ள அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளால் இது உயிரின் அமுதம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இ ந்த பானம் ரஷ்யா, அமெரிக்காவில் பிரபலமாகிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொம்புச்சா டீ

கொம்புச்சா டீ

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் இனிப்பான கருப்பு டீயை கொண்டு தயாரிக்கப்பட்ட குமிழ் உண்டாக்குகிற மற்றும் புளிக்கவைக்கப்பட்ட ஒரு பானமாகும். உடலை சுத்தம் செய்யவும், பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை விலகிச் ஓடச் செய்யும் வகையில் இந்த பானம் நீண்ட காலமாக உணவோடு சேர்த்து பரிமாறப்படுகிறது. இல்லை என்றால் தூங்குவதற்கு முன்பு குடிக்கும் பழக்கம் உள்ளது. இயற்கையாக புளிக்கவைக்கப்பட்ட மற்றும் கார்பனேட் கொண்ட இந்த பானம் நம் உடலுக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

நச்சுத்தன்மை

நச்சுத்தன்மை

கொம்புச்சா டீயில் அதிகளவு கரிம அமிலம் உள்ளது. இது உடல் உறுப்புகள் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும். குறிப்பாக கணையம், கிட்னி, ஈரல் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும். சூடான கொம்புச்சா டீ தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் இரவு முழுவதும் உடலில் பல்வேறு மாயாஜாலங்களை ஏற்படுத்தும். இதில் குளுக்காரிக் அமிலம் இருப்பதால் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவி செய்து புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும். மேலும் இது

நோயெதிர்ப்பு ஆற்றல்

நோயெதிர்ப்பு ஆற்றல்

இந்த கொம்புச்சா டீயில்உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும். தொடர் சிறுநீர் வெளியேற்றம் மூலம் உடல் செயல்பாடு சுத்தப்படுத்தப்படும். அதன்பின் தானாகவே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மையை நிறுத்திவிடும். உடல் உறுப்புகள் சீராக செயல்படும். அதோடு, முக்கிய செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தும். இது நோய் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து செயல்பட உடலை தயார்படுத்தும்.

வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம்

இந்த கொம்புச்சா டீ குடிப்பதன் மூலம் உடலில் உள்ள தடைகள், அடைப்புகள் சுத்தமாகும். உடல் அதிக சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யும். உடலில் வளர்சிதை மாற்றங்களை முறைப்படுத்தும். ஹார்மோன்கள் செயல்பாடு சீராகும்.

மூட்டு வலி நிவாரம்

மூட்டு வலி நிவாரம்

மூட்டு மற்றும் வலி நிவாரணிகளை வலுப்படுத்தும். கொம்புச்சா டீயில் குளுகோசமைன் என்னும் வேதி மூலக்கூறு முக்கியப் பொருளாக இடம்பெற்றுள்ளது. இது எலும்பு, மூட்டுகளை வலுப்படுத்த உதவும். மேலும் மூட்டுகளில் ஈரப்பதம், நெகிழ்வுத்தன்மை, லூஃபிரிகேஷனை ஏற்படுத்தும். மூட்டு வலி, வீக்கம், உடல் தசை வீக்கம் உள்ளவர்களுக்கு நிரந்தரமாக குணமளிக்கும் ஆற்றலைக் கொண்டது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

கொம்புச்சா டீ பல வழிகளில் உடல் எடை குறையச் செய்யும். குறிப்பாக சொல்வதென்றால் மிக ஆரோக்கியமான முறையில் அந்த எடைக்குறைப்பு நிகழும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒட்டுமொத்த செயல்பாடும் மேம்படும் போது உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணரமுடியும். உடற்பயற்சியின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அதிகரிக்கும். இரண்டாவதாக உடல் செயல்பாட்டில் நச்சதன்மைக்கு எதிராகச் செயல்பட்டு ஆரோக்கியமற்ற கொழுப்புகளை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

தோல் புத்துணர்ச்சி

தோல் புத்துணர்ச்சி

சொறி மற்றும் சிரங்குக்கு கொம்புச்சா டீ சிறந்த தீர்வாக அமையும். இது தோலை உள்ளூர சுத்தப்படுத்தும். முகப்பரு மற்றும் பரு பிரச்னையை தீர்க்கும். இந்த டீ இளமை தோற்றம் கொண்ட தோலை ஏற்படுத்தி உள்ஒளியை ஏற்படுத்தும். தோல் பிரச்னைகள் பின்னர் வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தும். இதையும் கொம்புச்சா டீ கவனித்துக் கொள்ளும். தோலை எப்போதும் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும். இப்போ புரியுதா? ஏன் சீனாக்காரன் இவ்ளோ பளபளப்பா, சுறுசுறுப்பா இருக்கான்னு...

எனர்ஜி பூஸ்டர்

எனர்ஜி பூஸ்டர்

இன்றைய இளைய சமுதாயத்தினர் மத்தியில் டீ, காபி, சோடா மற்றும் எனர்ஜி பானங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இவை எல்லாம் ஆற்றலை அதிகப்படுத்தும். எனினும் கொம்புச்சா டீ இயற்கையான முறையிலும், பாதுகாப்பாகவும் உடலுக்கு ஏற்ற அளவு ஆற்றலை அதிகப்படுத்தும். இது உடல் செயல்பாட்டை ஆற்றல் மிகுந்ததாக வைத்திருக்கும். அதோடு எந்த நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மாதவிலக்கு

மாதவிலக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு பொதுவாக இந்த பாதிப்பு ஏற்படுத்தும். கொம்புச்சா டீ மாதவிலக்கு பிரச்னைகளை தீர்ப்பதோடு, நோய் அறிகுறியில் இருந்து காக்கும் ஆற்றல் கொண்டது. இந்த டீயை தொடர் ந்து குடிப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் உடனடியாக குறையும். குறிப்பாக, இந்த கொம்புச்சா டீயை பெண்கள் தினமும் குடித்து வந்தால், முறையற்ற மாதவிலக்கு, தீராத வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், இடுப்பு வலி ஆகிய எல்லா பிரச்னைகளும் தீரும். அந்த சமயங்களில் அதற்கடுத்தடுத்த மாதங்களில் ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள்

இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.அதேபோல், இது புளிக்கவைக்கப்படும் பானம் என்பதால் நொதிகள் நிறைந்தது. கொம்புச்சா டீயில் அதிகளவில் வைட்டமின் பி சத்து உள்ளது. கரிம அமிலம், அமினோ அமிலம், சுறுசுறுப்பான நொதிகள், ஆக்ஸிடன்களுக்கு எதிரான திறன் உள்ளது. பியூட்டரிக் அமிலம் போன்ற கரிம அமிலம், அசிட்டிக் ஆசிட், ஆக்ஸலிக் ஆசிட், லேக்டிக் ஆசிட், குளுக்கோனிக் ஆசிட் ஆகியவை இருப்பதால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

செரிமானம்

செரிமானம்

கொம்புச்சா டீ வயிற்றின் உணவு செறிமானத்துக்கு சிறந்த முறையில் வேலை செய்யும். கேஸ்ட்ரிக் சாறு போன்றவற்றை வெளியேற்றி வயிறு எளிமையாக வேலை செய்ய உதவும். இதில் உள்ள சார்பு உயிரியல் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்றவை குடல் வழியாக ஊடுறுவி வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள், புழுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை தடுக்கும்.

கொம்புச்சா டீ எளிதில் கிடைக்க கூடியதாகும். இதன் நன்மைகள் குறித்து மேலே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் அவ்வளவாக ருசி இல்லாமல் இருப்பது போல் தோன்றலாம். குடிக்க குடிக்க இதன் சுவை பிடிக்க ஆரம்பித்துவிடும். ஒரு காலத்தில் கிரீன் டீயையும் நாம் அப்படித்தானே சொல்லிக் கொண்டிருந்தோம். அதன்பின் அதனுடைய அருமையை உணர்ந்ததுபோல், அதைவிட பல மடங்கு ஆரோக்கியம் மிக்க இந்த கொம்புச்சா டீயை நாம் மிஸ் பண்ணலாமா?... பழகிய பின்னர் இந்த ஆரோக்கிமான டீயை எந்த நேரத்திலும் அனுபவித்துக் குடிக்க நேரிடும். நோய்த்தாக்குதல் குறித்து எவ்வித கவலையும் இன்றி இதை குடிக்கலாம். ஒரே இரவில் இதனால் மாற்றம் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து கொம்புச்சா குடிப்பது அவசியம். அப்போது தான் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணரமுடியும்.

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

தற்போது டிபார்மெண்ட் ஸ்டோர்களில் கொம்புச்சா ஸ்கூபி பேஸ்ட் வடிவில் கிடைக்கும். அதை வாங்கிக்கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்

குளைரைடு, புளோரைடு இல்லாத தண்ணீர்

சர்க்கரை

டீ பேக்

வினிகர் அல்லது ஸ்டாட்டர்டு டீ

முதலில் ஒரு கிளாஸ் ஜாரில் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும். அதன்பின் டீ பேக்கை போட்டு 15 நிமிடங்கள் வரை மூழ்க விடுங்கள். பின் 8 டீ பேக்கை வெளியே எடுத்துவிட்டு, வினிகர் மற்றும் ஸ்கூப்பை சேருங்கள். பின் குளிரவைத்து 7 முதல் 30 நாட்கள் வரை நொதிக்க விட வேண்டும். அதன்பின் அதை எடுத்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஒரு ஸ்பூன் அந்த கொம்புச்சா பேஸ்ட்டை ஒரு கப் வெந்நீரில் கலந்து சர்கு்கரை தேவையான அளவு சேர்த்து குடிக்கலாம். சூடாக குடிக்க பிடிக்காதவர்கள் ஃபிரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம். வேறு ஃபிளுவர் வேண்டுமென்றால் சிட்ரஸ் பழங்களைப் பிழிந்து, ஸ்மூத்தி போலவும் குடிக்கலாம். எப்படி குடித்தால் என்ன?.. குடித்து ஆரோக்கியமாக இருந்தால் சரிதானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Amazing Health Benefits Of Kombucha Tea

The ancient drink ‘Kombucha’ has been prepared since centuries. It originated in China during the reign of the Tsin dynasty.
Desktop Bottom Promotion