சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம், உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்துமாம்...!

Subscribe to Boldsky

ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான கலாச்சாரங்களும், பண்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது அவர்களின் முன்னோர்கள் வழியாக கடைபிடிக்கபட்டு வருகிறது. உணவு பழக்கம் முதல் உடை அணியும் முறை வரை... இப்படி எல்லாமே ஒவ்வொரு நாட்டிலும் தனி சிறப்பு பெற்றிருக்கும். அந்த வகையில் மருத்துவத்திலும் இதே தனித்துவம் தான். இந்தியர்கள் எப்படி ஆயர்வேதம், சித்தா மருத்துவம், நாட்டு மருத்துவம் போன்றவற்றை கடைபிடிக்கிறார்களோ,

This Chinese therapy with ice can relieve all your pains

அதே போன்று மற்ற நாட்டினரும் பல்வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்லுனு ஒரு மருத்துவம்..!

சில்லுனு ஒரு மருத்துவம்..!

இதை போன்ற ஒரு மருத்துவ முறையை இதுவரை நாம் எங்கும் கேட்டிருக்க மாட்டோம். ஆமாங்க, இது முற்றிலும் வினோதமான மருத்துவ முறையாக உலக அளவில் கருதப்படுகிறது. இவை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் குணப்படுத்தி விடுமாம்.

சீன மருத்துவம்...

சீன மருத்துவம்...

இந்த புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தின் பெயர் "Feng Fu" என்று சீனர்கள் அழைப்பார்களாம். இது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். இதற்கென்று பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும்.

கழுத்து வலிகளுக்கு

கழுத்து வலிகளுக்கு

மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துவதால், கழுத்தின் தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய, ஒரு ஜிப்லாக்(ஜிப் கொண்ட பாலிதீன் பை) பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பி கொண்டு கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் நன்கு ஒத்தடம் கொடுத்து வரவும். இவ்வாறு வெறும் வயிற்றில் 20 நிமிடம் செய்து வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும். மேலும், இதனை தூங்குவதறகு முன்பும் செய்யலாம்.

தைராய்டு பிரச்சினை

தைராய்டு பிரச்சினை

இன்று அதிக படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது. இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும் கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும், சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.

MOST READ: சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும், வீட்டிலுள்ள 10 ஆயர்வேத மருந்துகள்..!

மாதவிடாய் வலிகளுக்கு

மாதவிடாய் வலிகளுக்கு

பெண்களுக்கு மாதவிடாயின் போது மிக மோசமான வலி ஏற்படும். இதனையும் இந்த சீனர்களின் Feng Fu மருத்துவம் சரி செய்து விடுமாம். வெறும் ஐஸ்கட்டிகளை நிரம்பிய ஜிப்லாக் பையை மட்டும் வலி உள்ள இடத்தில வைத்து எடுத்தால் நலம் பெறலாம்.

மூட்டு வலிகளுக்கு

மூட்டு வலிகளுக்கு

வயதாகமலே வரும் நோய்களில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். இந்த மூட்டு வலிகளை சரி செய்ய Feng Fu புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.

தலைவலியை விரட்ட

தலைவலியை விரட்ட

இந்த சீனர்களின் மருத்துவம் தலைவலியை குணப்படுத்த பெரிதும் உதவும். குறிப்பாக இவை மற்ற மருத்துவங்களை காட்டிலும் அருமையான தீர்வை நமக்கு தரும். இந்த Feng Fu முறையை பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.

தூக்கமின்மைக்கு

தூக்கமின்மைக்கு

தூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு ஒரு எளிய வழி முறை இருக்கிறது. Feng Fu புள்ளி என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம். மேலும், மனம் நிம்மதியும் அடையுமாம்.

MOST READ: நீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?

அடிக்கடி சளி பிடிக்குதா..?

அடிக்கடி சளி பிடிக்குதா..?

பலருக்கு அடிக்கடி ஜலதோஷம் அல்லது சளி பிடித்து கொள்ளும். சீனர்களின் இந்த வைத்திய முறை அடிக்கடி சளி பிடித்து கொள்வோருக்கு தீர்வை தருகிறதாம். அத்துடன் இவை மூக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குணப்படுத்துமாம்.

தொடை தடிப்புகளுக்கு

தொடை தடிப்புகளுக்கு

பொதுவாக இந்த பிரச்சினை பெண்களுக்கே அதிகம் ஏற்படும். அதாவது, தொடைகளில் அதிக அளவில் கொழுப்புகள் சேர்வதால் தடிப்பாக அல்லது சதைகள் சேர்வது போல ஏற்படும். இதனையும் Feng Fu முறை குணப்படுத்தும். மெல்ல மெல்ல இந்த தடிப்பை இது குறைக்க கூடும்.

மன அழுத்தத்தை போக்க

மன அழுத்தத்தை போக்க

இந்த Feng Fu என்ற அற்புத சீனர்களின் முறையை நீங்கள் பின்பற்றி வந்தால், மன அழுத்தத்தால் அவதிப்படுவோருக்கு நல்ல தீர்வை இவை தரும். அத்துடன் மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்து கொள்ளும்.

எப்போது Feng Fu முறையை செய்யலாம்..?

எப்போது Feng Fu முறையை செய்யலாம்..?

இந்த Feng Fu முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். மேலும், ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.

இது உடலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    This Chinese therapy with ice can relieve all your pains

    Here we explain how you can use an ice cube to perform Chinese therapy on the Feng Fu. This has multiple benefits, which are enumerated.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more