For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாட்டால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவு ஏற்படும் போது அது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு ஏற்பட பல காரணங்கள் உள்ளது.

|

ஆண்கள் பலரும் அச்சப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆண்மைக்குறைவுதான். தனக்கு ஆண்மைக்குறைவு உள்ளதோ என்று சந்தேகப்படாத ஆண்களின் எண்ணிக்கை மிகமிக சொற்பமே. இந்த சூழ்நிலையில் ஆண்மைக்குறைவு என்பது பாலியல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதுதான்.

side effects of low testosterone

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவு ஏற்படும் போது அது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாட்டால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் செயல் திறன் குறைவு

பாலியல் செயல் திறன் குறைவு

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது அது முதலில் ஆண்களின் தாம்பத்ய வாழ்க்கையைத்தான் பாதிக்கும். இதுதான் ஆண்கள் படுக்கையறையில் சிறப்பாக செயல்பட எரிபொருள் போன்றதாகும். அதில் குறைபாடு ஏற்படும் பொழுது அது ஆண்களின் பாலியல் விருப்பத்தை முற்றிலும் தடை செய்கிறது. குறைந்த டெஸ்டோஸ்டிரோன் இருபவர்களுக்கு பாலியலில் ஆர்வம் மிகக்குறைவாக இருக்கும்.

விறைப்புத்தன்மை

விறைப்புத்தன்மை

ஆண்களின் விறைப்புத்தன்மை என்பது அவர்கள் உடலில் சுரக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு என்னும் மூலப்பொருளால் ஏற்படுவதாகும். ஆனால் இந்த ஹார்மோன் சுரக்க டெஸ்டோஸ்டிரோன் அவசியமாகும். இதன் அளவு குறையும்போது ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சினை ஏற்படலாம். ஒருவேளை விறைப்பு ஏற்பட்டாலும் அதனால் உங்களால் முழுமையான தாம்பத்யத்தை பெற இயலாது.

நீர்ம சத்து குறைவு

நீர்ம சத்து குறைவு

ஆண்களின் உயிரணுக்கள் தரமாக இருக்க உடலின் மூன்று பாகங்கள் சரியாக செய்லபட வேண்டும். அவை புரோஸ்டேட், செமினல் வெசைல்ஸ் மற்றும் டெஸ்டிகல்ஸ். இந்த மூன்று உறுப்புகளுக்கும் சீரான அளவு டெஸ்டோஸ்டிரோன் சென்றால்தான் ஆண்களின் உயிரணுக்கள் போதுமான தரத்துடன் இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும்போது ஆண்களின் உயிரணுக்களின் தரம் தானாக குறையும்.

உணர்ச்சி குறைதல்

உணர்ச்சி குறைதல்

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக உள்ள ஆண்கள் பிறப்புறுப்பில் உணர்ச்சிகள் குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் முழுமையாக உணர்ச்சியை இழந்துவிடுவதில்லை ஆனால் பொதுவாக ஆண்களுக்கு பிறப்புறுப்பை தீண்டும்போது ஏற்படும் திடீர் உணர்ச்சிகள் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ள ஆண்களிடம் காணப்படாது. இது ஆண்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தலாம்.

MOST READ: எகிப்தியர்கள் முதல் அமெரிக்க பிரசிடெண்ட் வரை, தாடிக்குள் ஒளிந்திருக்கும் பல சுவாரசிய உண்மைகள் இதோ..!

சோர்வு

சோர்வு

நாள் முழுவதும் வேலை செய்து வந்தபின் உடல் சோர்வடைவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ள ஆண்கள் நாள் முழுவதும் சோர்வாகத்தான் காணப்படுவார்கள். தான் ஏன் சோர்வாக இருக்கிறோம் என்றே பல ஆண்களுக்கு தெரிவதில்லை. அதற்கு பல காரணங்களை அவர்களே நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு உண்மையான காரணம் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் தான்.

ஆற்றல் இழப்பு

ஆற்றல் இழப்பு

கடுமையான சோர்வின் காரணமாக குறைந்தளவு டெஸ்டோஸ்டிரோன் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஆற்றல் இன்றியே இருப்பார்கள். டெஸ்டோஸ்டிரோன் குறையும்போது ஆண்கள் உற்சாகமின்றி அனைத்து வேலைகளிலும் மந்தமாகவே காணப்படுவார்கள். மேலும் ஒரு வேலையை முடிக்க மற்றவர்களை விட அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

மனநிலை

மனநிலை

டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனஆரோக்கியத்தையும் பாதிக்கும். குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உள்ளவர்களின் மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது. பெரும்பாலும் மனசோர்வுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட பைபோலார் நோயால் பாதிக்கப்பட்டவர்களை போல நடந்த்துக்கொள்வார்கள்.

எரிச்சலூட்டும் தன்மை

எரிச்சலூட்டும் தன்மை

குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உள்ள ஆண்கள் எரிச்சலூட்டும்படி நடந்து கொள்வார்கள். இது பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் சாதாரணமாக இருப்பதாகவே கூறுவார்கள்.ஆனால் சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்கள் படும் துயரம் தெரியும்.

MOST READ: பொது இடங்களில் கூச்ச, நாச்சமின்றி மக்கள் செய்த செயல்கள்... - புகைப்படத் தொகுப்பு!

தசைகள் வலுவின்மை

தசைகள் வலுவின்மை

அவர்கள் பலவீனமாகி விட்டார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்கள் முன்னர் இருந்ததை விட டெஸ்டோஸ்டிரோன் குறைவு ஏற்பட்டபின் வலுவில்லாததாக உணருவீர்கள். சில ஆண்கள் கை, கால் மற்றும் கமார்பு பகுதியில் தசைகள் சுருங்குவதை நன்றாகவே உணருவார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் எடை தூக்கி தசைகளை வலுவாக்க எண்ணினால் இயலாமையை உணருவார்கள்.

அதிக உடல் கொழுப்பு

அதிக உடல் கொழுப்பு

குறைந்த டெஸ்டோஸ்டிரோன் தசைகளை பலவீனமடைய செய்வதோடு உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது. சில ஆண்களுக்கு வயிற்றில் கொழுப்பு அதிகரிக்கும் , சில ஆண்களுக்கு கைனோகாஸ்மாஸியா ஏற்படும். அதாவது ஆண்களின் மார்பகங்களின் அளவு மட்டும் பெரிதாகும்.

சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள்

இதனை சரி செய்ய " ஸ்கின் ஜெல் " என்னும் சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முழுமையான பயனை தராவிட்டாலும் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதன் மூலம் பாலியல் செயல்திறன் அதிகரித்தல், எலும்புகளின் வலிமை அதிகரித்தல் போன்ற பலன்கள் கிடைக்கும், ஆனால் இந்த சிகிச்சை முறையால் நியாபக மராத்தி, மாரடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

MOST READ: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர் யார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health health care health tips
English summary

side effects of low testosterone

A man with low testosterone will face a higher risk of several serious conditions including diabetes, osteoporosis, and cardiovascular disease.
Story first published: Friday, September 21, 2018, 13:03 [IST]
Desktop Bottom Promotion