For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

|

நமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் ஃபிரிட்ஜூம் அடங்கும். நாம் வெட்டிய காய்கறி மீந்தால் கூட அதனை ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த முறை பயன்படுத்தி கொள்வோம். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் ஃபிரிட்ஜில் தான் வைக்கின்றோம். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன.

முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

உதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். இதில் மிக முக்கியமான இடத்தில் வரக்கூடிய ஒன்றும் உள்ளது. அதுதான் முட்டை. முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? கூடாதா..? என்பதை பற்றி நாம் அறியாமலே ஃபிரிட்ஜில் வைத்து கொள்கிறோம். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரியா..? தவறா..? என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை எப்படி..?

முட்டை எப்படி..?

கோழியில் இருந்து முட்டை வந்ததா..? இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா..? என்ற விவாதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலா..? கூடாதா..? என்ற முக்கிய கேள்விக்கு விடை தெரியாமலே முழித்திருப்போம். என்ன இருந்தாலும் முட்டையை காதலிப்போரே இங்கு அதிகம்.

ஃபிரிட்ஜில் முட்டையா..?

ஃபிரிட்ஜில் முட்டையா..?

ஃபிரிட்ஜில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் முக்கால் வாசியை இதனுள் திணித்து விடுவோம். இந்த வரிசையில் முட்டையும் அடங்கும். முட்டையை ஏன் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என சொல்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சால்மோனெல்லா (Salmonella) என்கிற பாக்டீரியா தான்.

சால்மோனெல்லா யார்..?

சால்மோனெல்லா யார்..?

இந்த சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழ கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும். இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்கிறதாம்.

ஃபிரிட்ஜில் முட்டையா..?

ஃபிரிட்ஜில் முட்டையா..?

முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் அந்த பாக்டீரியாவை அப்படியே தான் இருக்க போகிறது. முட்டையை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்கும். நாம் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான்.

MOST READ: இந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்..! இல்லைனா அவ்வளவுதான்..!

அமெரிக்கர்களின் முறை...

அமெரிக்கர்களின் முறை...

அமெரிக்கர்கள் இந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து தான் பராமரிப்பார்களாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் முட்டை கெட்டு போகாமல் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் பாக்டீரியா அதனுள் செல்லாமல் இருக்குமே தவிர இறந்து விடாது.

ஐரோப்பர்களின் முறை...

ஐரோப்பர்களின் முறை...

அமெரிக்கர்கள் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை போன்று ஐரோப்பர்கள் வைப்பத்திலை. இவர்கள் வெளியே முட்டையை வைத்து பயன்படுத்துகின்றனர். இவர்கள் முட்டையை பெறும் முன் பல வகையில் தூய்மையாக வைத்து கொள்ள செய்கின்றனர்.

அப்போ என்னதான் செய்யணும்..?

அப்போ என்னதான் செய்யணும்..?

ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் முட்டை நீண்ட நாட்கள் கெடமல் இருக்குமே தவிர அதில் உள்ள பாக்டீரியா சாகாது. எனவே, முட்டையை உள்ளே வைத்தாலும் வெளியே வைத்தாலும் அதில் உள்ள பாக்டீரியா தான் முக்கிய பங்காக விளங்குகிறது.

சால்மோனெல்லா தான் காரணம்..!

சால்மோனெல்லா தான் காரணம்..!

முட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் முட்டையை நாம் வேக வைத்தோ, பொறித்தோ சாப்பிடும் போது அந்த சூட்டில் சல்மோனேல்லா பாக்டீரியா இறந்து விடும்.

MOST READ: உங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா..? அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..

நாட்கள் கணக்கு...

நாட்கள் கணக்கு...

ஃபிரிட்ஜில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்கும். இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்கள் கெடாமல் இருக்கும். இது குளிர் காலத்திற்கான கணக்காகும். இது கோடை காலத்தில் சற்றே மாறுபடும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should eggs be stored the fridge?

Refrigerating eggs is good for our health or not..?
Story first published: Thursday, October 18, 2018, 16:53 [IST]
Desktop Bottom Promotion