Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
ஆணுறுப்பில் ஏற்படக்கூடிய நோய்களும், தடுக்கும் முறைகளும்
ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களின் தாம்பத்தியத்தை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் வாழ்கையையே பாதிக்கிறது. இந்த பதிவில் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை
இயற்கையாகவே ஆண்கள் பெண்களை விட உடலளவில் பலமானவர்கள். எந்த வலியாக இருந்தாலும் அதனை ஆண்கள் கஷ்டப்பட்டாவது தாங்கிக்கொள்வார்கள். ஆனால் ஆண்களை நிலைகுலைய செய்யும் ஒரு குறைபாடு உண்டென்றால் அது பிறப்புறுப்பில் ஏற்படும் குறைபாடாகத்தான் இருக்கும்.

ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களின் தாம்பத்தியத்தை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் வாழ்கையையே பாதிக்கிறது. பிறப்புறுப்பில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணின் அன்றாட வாழ்க்கையிலிருந்து அவனின் மனநிலை வரை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த பதிவில் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ப்ரியாப்சிம்
ப்ரியாப்சிம் பாதிப்புள்ள ஆண்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும்போதெல்லாம் நீண்டநேரம் விறைப்பு குறையாமல் இருக்கும். குறைந்தது 4 மணி நேரம் விறைப்பு நிலையில் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படக்கூடிய நோயாகும்.

வகைகள்
இதில் இரண்டு வகை உள்ளது. குறைந்த ஓட்ட ப்ரியாப்சிம் மற்றும் உயர் ஓட்ட ப்ரியாப்சிம். குறைந்த ஓட்ட ப்ரியாப்சிம் என்பது ஆணுறுபின் விறைப்பு பகுதியில் பகுதியில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சிக்கலால் ஏற்படுவதாகும். இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் இதனை குணப்படுத்த இயலாது.உயர் ஓட்ட ப்ரியாப்சிம் என்பது மிகவும் அரிதான அதேசமயம் வலி குறைவான ஒன்று. இது ஆணுறுப்பை சுற்றி ஏதெனும் காயம் ஏற்பட்டால் உண்டாக்கக்கூடியது.

காரணங்கள்
ப்ரியாப்சிம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது சிக்கில் செல் அனிமியா. செல் அனிமியாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 42 சதவீதத்தினருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறாரக்ள். சில மருந்துகளை தவறாக உபயோகிப்பதும் இது ஏற்பட காரணமாக உள்ளது. மனஅழுத்தத்தை குறைக்க எடுத்துக்கொள்ளும் டிஸைரல், த்ரோசைன் போன்ற மாத்திரைகள் ப்ரியாப்சிம் ஏற்பட காரணமாக அமைகிறது. இவை மட்டுமின்றி முதுகெலும்பில் ஏற்படும் விபத்து, போதை மருந்து உபயோகித்தல், அதிகளவு கார்பன் மோனாக்சைடை சுவாசித்தல் போன்றவையும் ப்ரியாப்சிம் ஏற்பட காரணமாய் அமைகிறது.

சிகிச்சைகள்
ஐஸ்கட்டி உபயோகிப்பது வீக்கத்தை சிறிதளவு குறைக்கலாம். பின்னர் மருத்துவர் ஊசி மூலமாக ஆணுறுப்பில் தேங்கியுள்ள இரத்தத்தை வெளியேற்றுவது ஒரு சிகிச்சை முறை. குறைந்த ஓட்ட ப்ரியாப்சிம் நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை மூலம் கூட இதனை குணப்படுத்தலாம்.

பிமோஸிஸ்
பிமோஸிஸ் என்பது ஆணுறுப்பை சுற்றியுள்ள தோல் வெளியேற்றப்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாமல் இருப்பதாகும். இதற்கு தக்க நேரத்தில் சிகிச்சையளிக்கா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும். இது ஆண்களுக்கு சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

காரணங்கள்
திசுக்களில் ஏற்படும் பிரச்சினையே இதற்கான முக்கிய காரணமாகும். இது தொற்றுநோய்களால் கூட ஏற்படலாம். இதனால் ஆணுறுப்பை சுற்றியுள்ள சருமங்களின் நெகிழ்வுத்தன்மை குறையும். எனவே அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அதிக முயற்சி தேவைப்படும். ஆணுறைப்பை சுற்றியுள்ள தோலில் கடுமையாக நடந்து கொள்வதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவ்வாறு நடந்து கொள்ளும்போது அதனை சுற்றி வீக்கம் ஏற்படலாம்.

வயது
வயது அதிகமாகும் போது உங்கள் சருமத்தில் எப்படி சுருக்கங்கள் ஏற்படுகிறதோ அதேபோல ஆணுறுப்பை சுற்றியுள்ள தோல்களிலும் சுருக்கங்கள் ஏற்படும். எனவே அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினமாக இருக்கலாம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்.

அறிகுறிகள்
சிறுநீர் கழிக்கும்போது ஆணுறுப்பின் தோல் விரிவடையாமல் இருப்பதால் வலி ஏற்படும், சிலசமயம் இரத்தம் கூட வரலாம். உடலுறவில் ஈடுப்படும்போது அதிக வலி ஏற்படும். சிறுநீர்ப்பை காலியாக இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும். மேலும் ஆணுறுப்பை சுற்றி வெள்ளை நிறத்தில் ஒரு வட்டம் தோன்றும்.

சிகிச்சை முறைகள்
சில களிம்புகளை உபயோகப்படுத்தி ஆணுறுப்பில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை மருத்துவர் குறைப்பார். திரவங்கள் வெளியேற ஆணுறுப்பில் ஊசி மூலம் சிறிய துளைகள் இடப்படும். மேலும் இதற்காகவே உள்ள சில க்ரீம்களை தினமும் அடிக்கடி ஆணுறுப்பில் தடவி மசாஜ் செய்வது அங்குள்ள சதைகளை நெகிழ்வு அடைய செய்யும்.

ஆபத்துக்கள்
பிமோஸிஸ்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அது ஆணுறுப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. இல்லையெனில் ஆணுறுப்பில் வீக்கம், தொற்றுநொய் அபாயம், உடலுறவின் போது வலி என பல ஆபத்துக்கள் உள்ளது. இதை தடுப்பது மிகவும் சுலபமானது ஆணுறுப்பின் தலை பகுதியை சுத்தமாகவும் எப்பொழுதும் வறண்டு இருக்கும்படியும் வைத்துக்கொண்டாலலே போதும். அதேநேரம் பொறுமையாக கையாள வேண்டும்.



Click it and Unblock the Notifications
