Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
மகிழ்ச்சியாய் வாழ தேவையான ஹார்மோன்களை இயற்கையாக அதிகரிக்கும் வழிகள்
உங்கள் உடலில் மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரப்பு சீராக இருக்க வேண்டும். இயற்கை முறையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைப்பதே நிரந்தரமானது ஆரோக்கியமானதும் கூட.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்வது உங்கள் மனதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்குறீர்களா என்ற கேள்விக்கு உங்கள் மூளையால்தான் சரியான பதிலை கூற முடியும். ஏனெனில் உங்கள் மூளை வெளியிடும் ஹார்மோனை வைத்தே உங்களுடைய மகிழ்ச்சியானது கணக்கிடப்படுகிறது.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி உங்கள் கைகளில்தான் உள்ளது. உங்கள் உடலில் மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரப்பு சீராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் உண்மையான சந்தோசத்தை உணரமுடியும். அதற்கு பல மருந்துகள் உள்ளது, ஆனால் அவை தாற்காலிகமானவை. இயற்கை முறையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைப்பதே நிரந்தரமானது ஆரோக்கியமானதும் கூட.

நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்
நம்பிக்கைதான் ஆக்ஸிடாஸின் ஹார்மோன் சுரப்பை தூண்டுவதாகும். உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் இருக்கும்போது நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணருவீர்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடாது மசாஜ், திரைப்படம் மூலம் நீங்கள் மகிழ்ச்சியான ஹார்மோனை சுரக்க வைக்க எண்ணினால் அது எதுவும் பலன் தராது. எனவே நண்பர்களை தேடி செல்லுங்கள்.

கட்டிப்புடி வைத்தியம்
உலகநாயகன் கமலஹாசன் சொன்னது பொய்யில்லை. ஒருவரை நீங்கள் கட்டிப்பிடிக்கும்போது உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கிறது. அதற்காக யாரை வேண்டுமென்றாலும் கட்டிபிடிக்கலாம் என்று அர்த்தமல்ல.உங்களுக்கு பிடித்த நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை கட்டிப்பிடிக்க வேண்டும். 30 வினாடிகள் அவ்வாறு கட்டிப்பிடிக்கும் போது உங்கள் உடலில் ஆக்சிடாஸின் ஹார்மோன் சுரப்பதுடன் அனைத்து நியூரான்களும் சுறுசுறுப்பாகின்றன.

இசை
அனைவருக்குமே பிடித்த பாடல், பிடித்த இசை என்று ஒன்று இருக்கும். ஆய்வுகளின் படி உங்களுக்கு பிடித்த இசையை கேட்கும்போது உங்கள் மூளையில் டோபமைன் என்னும் சந்தோச ஹார்மோன் சுரக்கிறது. எனவே தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு மகிழுங்கள்.

அரோமா தெரபி
உடலில் ஏற்படும் வலியை குறைக்க எண்டோர்பின் என்னும் ஹார்மோன் அவசியம். வெண்ணிலா அல்லது லெவெண்டேர் வாசனைகள் இந்த எண்டோர்பினின் சுரப்பை அதிகரிக்கக்கூடும். எனவே இந்த நறுமணத்தில் உள்ள சோப்பு, க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தவும்.

சிரிப்பு
சிரிப்பும் எண்டோர்பினின் சுரப்பை அதிகரிக்க கூடிய ஒன்றாகும். நகைச்சுவையான படம் பார்ப்பது, நகைச்சுவையான புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் விளையாடுவது என உங்களை மனது விட்டு சத்தமாக சிரிக்க வைக்கும் எதனை வேண்டுமென்றாலும் செய்யுங்கள்.

காரமான உணவு
காரமான உணவு என்பது எப்பொழுதும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். இதில் சுவை மட்டுமின்றி ஆரோக்கியமும் அதிகம் உள்ளது. காரமான உணவுகளும் எண்டோர்பின் மற்றும் ஆக்சிடாலின் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கிறது.

உடலுறவு
காதல் ஹார்மோன் என்றால் அது ஆக்சிடாஸின் தான். இது உங்கள் மூளை வெளியிடும் ஒரு குதூகலமான ஹார்மோன் ஆகும். ஆண், பெண் இருவருமே உச்சக்கட்டம் அடையும்போது இந்த ஹார்மோன் அதிகளவு சுரக்கிறது. இதனால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும். சுருக்கமாக சொல்வதென்றால் எவ்வளவு அதிக உடலுறவு கொள்கிறீர்களோ அவ்வளவு ஆரோக்கியத்தை பெறுவீர்கள்.

உணவுமுறை
மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் இருக்கும் அமினோ அமிலமான தைரோசின் டோபாவை தயாரிக்க உதவுகிறது. இதுதான் பின்னர் டோபமைனாக மாற்றப்படுகிறது. தைரோசின் அதிகம் உள்ள உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது கீரை, முட்டை மற்றும் கடலை வகைகளில் அதிகம் உள்ளது.

சூரிய ஒளி
சூரிய ஒளி செரோடினின் சுரப்பிற்கு அவசியமாகும். எலும்புகளின் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மனசோர்வை நீக்க என அனைத்திற்கும் வைட்டமின்டி அவசியம். செரோடினின் மற்றும் வைட்டமின் டி இரண்டுமே சூரிய ஒளியில் உள்ளது. எனவே முடிந்தளவு காலை மற்றும் மாலை வேலையில் சூரிய ஒளி மேலே விழும்படி இருங்கள்.

உடற்பயிற்சி
மகிழ்ச்சிக்கான அனைத்து ஹார்மோன்களும் கிடைக்க செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று உடற்பயிச்சியாகும். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் உங்களுக்கு டோபமைன், ஈஸ்ட்ரோஜென் மற்றும் செரோடினின் என அனைத்து ஹார்மோன்களும் கிடைக்கிறது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.



Click it and Unblock the Notifications