For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..! ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..!

மிகவும் சிறிய பூச்சிகளினால் கூட பல வித ஆபத்துகளை மனித இனத்திற்கு உருவாக்க முடியும். பல்லாயிர வருட கணக்கில் பூச்சிகளினால் ஏற்பட்ட நோய்கள் அதி பயங்கரமானது. அந்த வகையில் கொசுக்கள் மட்டும் விதிவிலக்கல்ல..

|

பெருகி வரும் மக்கள் தொகையில் ஏராளமான மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கேற்றாற் போல பல வகையான நோய்களும் வரிசை கட்டி வந்தகொண்டு வருகின்றது. விலங்குகளினால் பரவும் நோய்கள், மனிதர்களினால் பரவும் நோய்கள், பார்வைகளினால் பரவும் நோய்கள்... இந்த வரிசையில் சற்றே ஆபத்தானது பூச்சுகளினால் பரவும் நோய்கள்தான்.

mosquitoes

இத்துணுண்டு பூச்சி அப்படி என்னதான் நோயை பரப்பிட முடியும்னு நினைக்குறிங்களா..? உண்மைதாங்க, மிகவும் சிறிய பூச்சிகளினால் கூட பல வித ஆபத்துகளை மனித இனத்திற்கு உருவாக்க முடியும். பல்லாயிர வருட கணக்கில் பூச்சிகளினால் ஏற்பட்ட நோய்கள் அதி பயங்கரமானது. அந்த வகையில் கொசுக்கள் மட்டும் விதிவிலக்கல்ல..! கொசுக்கள் எத்தகைய கொடியது என்பதை இந்த பதிவை முழுமையாக படித்து முடித்த பிறகு நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அதுவும் இறந்த கொசுக்கள் கூட இவ்வளவு ஆபத்தானதா...! என்ற முக்கிய விவரத்தையும் நம்மால் உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழம்பெரும் பூச்சி இனம்..!

பழம்பெரும் பூச்சி இனம்..!

சுமார் 400 மில்லியன் வருடத்திற்கு முன்பு பூச்சிகள் நம் பூமியில் தோன்றியது. மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே இந்த பூச்சிகளின் இனம் தோன்றி விட்டது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். பூச்சிகளில் பல வகை உண்டு. மனித இனத்திற்கு நன்மை தர கூடிய சில வகை பூச்சிகளும் இதே பூமியில் தான் இருக்கிறது. தேனீ, வண்ணத்துப்பூச்சி, பட்டுப்பூச்சி போன்றவை மனிதனுக்கு அதிகம் உதவுகின்றன. இருப்பினும் நன்மை தர கூடிய பூச்சிகளை காட்டிலும் நமக்கு தீமை தர கூடிய பூச்சிகளே அதிகம் என்கின்றனர்.

நம்ம வீட்டின் பூச்சி இனம்..!

நம்ம வீட்டின் பூச்சி இனம்..!

தலைப்பு சற்றே வித்தியாசமானதுதான். பூச்சிகளில் மனிதனுக்கு இன்றைய காலங்களில் அதிக நோய்களை ஏற்படுத்துவது இந்த கொசுக்கள் இனம்தான். "நம்ம வீட்டின் பூச்சி இனம்" என்று நான் குறிப்பிட காரணம் மனிதர்களின் அஜாக்கிரதையான சூழலில்தான் இந்த கொசுக்கள் அதிகம் வளர தொடங்குகிறது. குறிப்பாக தேங்கிய தொட்டிகள், திறந்த பாத்திரங்கள், ஈரமான துணிகள் போன்றவைகளை கூறலாம்.

சுமார் 3550 கொசு வகைகளாம்..!

சுமார் 3550 கொசு வகைகளாம்..!

நமது பூமியில் கொசுக்களின் வகைகள் மட்டும் 3550 என்று பூச்சி வல்லுநர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆனால் அவை அனைத்துமே நம் வீட்டில் வந்து நம்மை கடிப்பது இல்லை. ஒரு சில வகைகள் மட்டுமே நம்முடனே அழையா விருந்தாளி போல வாழ்ந்து கொண்டிருகின்றன. முன்பெல்லாம் கொசுக்களின் வாழ்நாள் வெறும் 20 நாட்களே. ஆனால் தற்போது அவை அதி பயங்கரமான சக்திகள் பெற்று 40 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன.

டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியின் அதிர்ச்சி தகவல்..!

டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியின் அதிர்ச்சி தகவல்..!

பூச்சிகளை பற்றிய ஆராய்ச்சியில் டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் சுமார் 4000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பூச்சிகளினால் 39% அளவிற்கு ஏரோ அலர்ஜன்ஸ் (aeroallergens) ஏற்படுகிறது என கண்டறிந்தனர். அதாவது, பூச்சிகள் இறந்த பிறகும் அவற்றின் எச்சில், சிதறிய பாகங்கள், முடிகள், கழிவுகள் போன்றவை காற்றில் அல்லது நீரில் கலந்து விடுகின்றன. இதை சுவாசித்தாலோ, இந்த நீரை குடித்தாலோ அவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா, அலர்ஜி, சுவாச கோளாறுகள் போன்றவை ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொசுக்கள் மட்டுமா..?

கொசுக்கள் மட்டுமா..?

இது கொசு போன்ற பூச்சிகளுக்கு மட்டும் கிடையாது. கரப்பான் பூச்சிகள், ஈக்கள் என வீட்டில் வாழ்கின்ற ஒரு சில வகையான பூச்சுகளினால் நிகழ்கின்றன. இதனால் அவைகள் இறந்த பின்னும் காற்றையும் நீரையும் ஆபத்தான வகையில் மாற்றிவிடுகின்றன. குறிப்பாக இதில் முதல் இரண்டு இடத்தில இருப்பவை கரப்பான் பூச்சுகள்(49%) மற்றும் கொசுக்கள்(31%) தான். இவை இரண்டும் இறந்தும் மனிதர்களுக்கு பல வகையில் துன்பம் தருகின்றன.

இறந்தும் உயிரை குடிக்கும்..!

இறந்தும் உயிரை குடிக்கும்..!

பொதுவாக இவை உயிருடன் இருக்கும் போது டெங்கு, சிக்கன்குனியா, பல வகையான உயிரை கொல்லும் நோய்களை தந்து விட்டுதான் போகும். ஆனால் அதே அளவில் இறந்தும் நோய்களை உருவாக்கி விட்டு செல்கின்றன. குறிப்பாக ஆஸ்துமா அலர்ஜி மற்றும் பல உடல் உபாதைகளினால் 2 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34% பேர் 20 வயது முதல் 29 வரை உள்ள இளம் வயதினர் என்பது அதிர்ச்சிகரமானது.

செய்ய வேண்டியவை...

செய்ய வேண்டியவை...

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதை வருமுன் காக்க பல வழி முறைகள் எப்போதும் இருக்கும். ஆனால் நாம்தான் அவற்றை பின்பற்ற மாட்டோம். இனி இதுபோல செய்வதை முதலில் தவிர்ப்போம். இந்த பூச்சிகள் இறந்தும் உங்களை பாதிக்க கூடாதென்றால், இவற்றையெல்லாம் செய்யுங்கள்.

- எப்போதும் பாத்திரங்களை முடி வைக்க வேண்டும்.

- திறந்த வெளியில் விற்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

- மழை காலங்களிலே கொசுக்களின் அட்டகாசம் அதிகரிக்கும். எனவே அந்த சமயங்களில் மிகவும் கவனத்துடன் செயல் பட வேண்டும்.

- நீர் வீட்டின் அருகில் நீர் தேங்கி இருந்தால் கட்டாயம் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

சுத்தம்... சுகாதாரம்...!

சுத்தம்... சுகாதாரம்...!

நம்மில் பலர் இந்த வார்த்தைகளை மறந்து பல வருடங்கள் ஆகும் என்றே எண்ணுகிறேன். காலம் போகும் போக்கில் நம் சுகாதாரமான சில முக்கிய விஷயங்களை மறந்து விடுகின்றோம். ஆனால் இந்த போக்கு பல்வேறு வகையில் உங்களுக்கு தீமைகளை ஏற்படுத்தும். முடிந்த வரையில் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வோம். எங்கேனும் குப்பைகள் கிடந்தால் அவற்றை குப்பை தொட்டியில் போடுங்கள். நாம் செய்யும் சிறு சிறு நல்ல பழக்கங்கள் நம் அடுத்த தலைமுறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும். நாமும் வாழ்வோம்... பிறரையும் வாழ விடுவோம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mosquito you killed can bug you even when it’s dead

If mosquitoes bite a man and spread illnesses such as dengue, asthma spreads allergic problems after death.
Desktop Bottom Promotion