For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் ஹார்மோன் குறைபாடு எத்தகைய பாதிப்பை தாம்பத்திய வாழ்வில் ஏற்படுத்தும்னு தெரியுமா...?

|

இன்று பெரும்பாலான ஆண்கள் பல்வேறு வித கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். ஆண்களின் முழு உடல் நலத்தையும் கேடு விளைவிக்க கூடிய சூழல் பல இங்கு உள்ளன. குறிப்பாக உடலில் ஏராளமான குறைபாடுகள் பருவம் அடைந்த முதலே ஆண்களுக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Male Hypogonadism - Causes, Symptoms And Treatment

ஆனால், பல ஆண்கள் இதனை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். இதுதான் பின் நாளில் இல்லற வாழ்வில் பிரச்சினைகளை தருகிறது. இந்த பதிவில் ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலை குறைக்க கூடிய காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களின் தனி பிரச்சினை..!

ஆண்களின் தனி பிரச்சினை..!

பெண்களுக்கு எவ்வாறு ஒரு சிலதாம்பத்தியம் சார்ந்த பிரச்சினைகள் உடலில் ஏற்படுகிறது, அதே போன்று ஆண்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கிறது. அவை பல்வேறு வகையாக கூறலாம். விந்து குறைபாடு, மலட்டு தன்மை, விறைப்பு தன்மை, முன்கூட்டியே விந்தணு வெளியேற்றம், இல்லற வாழ்வில் நாட்டமின்மை... இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன.

முதன்மையான பிரச்சினை இதுவே..!

முதன்மையான பிரச்சினை இதுவே..!

பல பிரச்சினைகளில் முதன்மையான ஒன்றாக கருதப்படுவது இந்த ஹார்மோன் பிரச்சினைதான். ஒரு ஆணுக்கு இல்லற வாழ்வில் கோளாறுகளை தருவது இந்த ஹர்மோன்தான். ஆண்கள் பருவம் அடையும் முன்போ அல்லது அதற்கு பின்போ ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டால் தாம்பத்திய வாழ்வு இனிமை தராது.

டெஸ்டோஸ்டெரோன் எப்படி பட்டது..?

டெஸ்டோஸ்டெரோன் எப்படி பட்டது..?

ஒரு ஆணின் இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாக தேவைப்படுவது இந்த ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் தான். ஒருவரின் உடலில் இது குறைவாக சுரந்தால் விந்தணு தட்டுப்பாடு, விரைப்பு தன்மை, மலட்டு தன்மை போன்றவை ஏற்படும். இந்த வகை குறைப்பாட்டை "ஹைபோகைனடிசம்" என்பர்.

இனப்பெருக்க ஆற்றலை குறைக்கும் காரணங்கள்...

இனப்பெருக்க ஆற்றலை குறைக்கும் காரணங்கள்...

பொதுவாக இல்லற வாழ்வை சீர்கேடடைய செய்வது இந்த ஹார்மோன் குறைபாடுதான். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இவையே...

- விந்தணு பாதிக்கப்படுவது

-பரம்பரை ரீதியான கோளாறுகள்

- பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி அல்லது குறைபாடு ஏற்படுதல்

- அதிக அளவில் கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது ஓபியேட் வலிநிவாரணி மருந்துகளை எடுத்து கொள்ளுதல்

- விபத்து அல்லது கதிர்வீச்சின் மூலம் விந்தணுக்கள் பாதிக்கப்பட்டிருத்தல்

MOST READ: முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதை தடுக்கும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்..!

முதன்மையான அறிகுறிகள்...

முதன்மையான அறிகுறிகள்...

- ஆணுறுப்புகள் முழுமையாக வளராமல் இருத்தல்

- உடலில் வளரும் முடி கொட்டுதல்

- பருவம் அடையும் போது குரல் வளையம் வளராமல் இருத்தல்

- மார்பகங்கள் பெரிதாக ஆகுதல்

- விறைப்பு தன்மை

- இல்லற வாழ்வில் நாட்டம் இன்மை

- விந்தணுக்களின் உற்பத்தி குறைதல்

இரண்டாம் பட்ச அறிகுறிகள்...

இரண்டாம் பட்ச அறிகுறிகள்...

ஆண்களுக்கான இந்த இனப்பெருக்க பிரச்சினைக்கு ஒரு சில இரண்டாம் பட்ச அறிகுறிகள் இருக்கிறது.

- எலும்பு தேய்மானம் அடைதல்

- அதிக படியான சோர்வு

- விந்தணுகளின் உற்பத்தி முற்றிலுமாக தடை படுதல்

- ஆண்குறி வளர்ச்சி குறைதல்

- தசைகள் தளர்ந்திருத்தல்

- மன குழப்பம்

குணப்படுத்தும் இயற்கை வழிகள்...

குணப்படுத்தும் இயற்கை வழிகள்...

பெரும்பாலான ஆண்கள் இது போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. பல ஆண்களுக்கு இது போன்ற ஆற்றல் குறைபாடு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, தூக்கமின்மையே. இரவு, நேரம் கடந்து தூங்குபவருக்கு டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு முற்றிலுமாக குறையும். எனவே, 7 மணி நேர தூக்கம் மிக அவசியமானது.

ஜின்க் வகை உணவுகள்

ஜின்க் வகை உணவுகள்

உண்ணும் உணவும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஆண்களுக்கு ஜின்க் அதிகம் நிறைந்த உணவுகள் அதிகம் உடலுக்கு தேவையானது. குறிப்பாக இறைச்சி, பீன்ஸ், நண்டு, முழு தானியங்கள், கொட்டை வகைகள் போன்றவை உணவில் மிகுதியாக சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 11 mg அளவு ஜின்க் கொண்ட உணவுகளை ஆண்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

MOST READ: இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளும், பக்க விளைவுகளும் பற்றி தெரியுமா..?

இனிப்பு தரும் ஆப்பு..!

இனிப்பு தரும் ஆப்பு..!

ஆண்கள் பெரும்பாலும் இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இது பல்வேறு கோளாறுகளை உடலில் ஏற்படுத்தும். க்ளுகோஸ் அளவு உடலில் அதிகரித்தால் டெஸ்டோஸ்டெரோனின் அளவு குறைய தொடங்கும். எனவே இது தாம்பத்திய வாழ்வை திருப்தி அடைய செய்யாது.

குறைபாட்டை கண்டறிவது எப்படி..?

குறைபாட்டை கண்டறிவது எப்படி..?

இது போன்ற ஹார்மோன் குறைபாட்டை கண்டறிய ஒரு சில முக்கிய பரிசோதனைகள் இருக்கிறது. மருத்துவரிடம் சென்றால் உடலில் சுரக்கும் முக்கிய ஹார்மோனின் அளவு பரிசோதிப்பார்கள். இதனை TRT என்பர். குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகிய இரு ஹார்மோன்களின் அளவு எவ்வளவு உள்ளது என பார்ப்பார்கள்.

எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும்..?

எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும்..?

இந்த சிகிச்சையின் மூலம் ஆண்களின் இனபெருக்க கோளாறுகளை தீர்க்க முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

- தசைக்குள் ஊசி மூலம் சிகிச்சை தருதல்

- சருமத்தில் ஜெல் அல்லது சொல்யூஷன் தடவுதல்

- சருமத்தில் பேட்ச் போடுதல்

- மாத்திரைகள் மூலம் சரி செய்தல்

- சருமத்திற்கு அடியில் சிறிய பெல்லட்டுகள் பொருத்தப்படுதல்

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Male Hypogonadism - Causes, Symptoms And Treatment

Hypogonadism can affect many organ functions and it can have a negative impact on quality of life.
Desktop Bottom Promotion