Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 17 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்
ஹெக்டர் ஹெர்னாட்ஷ் என்பவருக்கு 47 வயது. ஒரு ஐடி நிறுவனத்தில் பில்லிங் அட்மினிஸ்டேட்டராக வேலை செய்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு திடீரென உடல் எடை கட்டுக்கடங்காமல் அதிகமாகிக் கொண்டே போனது. குறிப்பாக உடலின் மற்ற இடங்கள் எல்லாம் சாதாரணமாகவும் அவருடைய வயிறு மட்டும் முன்னோக்கிப் பெருத்துக் கொண்டே போனது.
இதை அவர் அசௌகரியமாக உணர்ந்ததோடு, இது ஏதோ தொப்பை போலவும் இல்லாமல், வேறு பிரச்சினை போல இருப்பதாகத் தெரிகிறது என்று சந்தேகப்பட்டார்.

உடல்பருமன்
மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்க நினைத்து, மருத்துவரைச் சந்தித்தபோது, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு முன்பாக, வயிறு பெரிதாக பெரிதாக, ஹெக்டர் ஹெர்னாட்ஷின் நண்பர்களும் சுற்றியுள்ளவர்களும் நீ முதலில் குடிப்பதை நிறுத்து. நிறைய குடித்ததால் உடல்பருமனும் தொப்பையும் வந்துவிட்டது என்று தான் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவரோ எப்போதும் சிரித்துக் கொண்டே நான் பீர் குடிப்பதில்லை. அதனால் இந்த தொப்பைக்கும் சரக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பட்ட அவதி
கொஞ்சம் கொஞசமாக தன்னுடைய நிலையில் ஏற்படும் பெரும் மாற்றத்தை கவனிக்க ஆரம்பித்து,அதனுடைய சீரியஸ்னஸ் இவருக்குப் புரிய ஆரம்பித்தது. ஏனென்றால் இவருடைய உடல் எடையானது கிட்டதட்ட 149 கிலோ வரை சென்று விட்டது. மிகக் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் வயிறு குறையவே இல்லை. அதனால் மிகவும் மனம் வருந்தினார். வெளியில் செல்வதற்கே மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனால் இவருடைய கைகளெல்லாம் சிறியதாகவே இருந்திருக்கின்றன. இவருடைய வீட்டில் உள்ளவர்களும்இவரை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, இவர் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார்.

மருத்துவ பரிசோதனை
இவருடைய வயிறை தொடடுப் பார்த்துவிட்டு, எவ்வளவு நாளாக இப்படி இருக்கிறது என்று மருத்துவர் கேட்டுவிட்டு,சில பரிசோதனைகளை செய்ய சொல்லியிருக்கிறார். சோதனைகளின் முடிவில், இவருக்கு வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதிலும் இந்த கேன்சர் செல்கள் கொழுப்புடன் சேர்ந்து அதிகமாகப் பரவி வளரத் தொடங்கிவிட்டது.
MOST READ: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?

அறுவை சிகிச்சை
அமெரிக்காவில் இருந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவர் வரவழைக்கப்பட்டு, 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில், 20 முதல் 30 பவுண்ட் அளவுக்கு அதிகபட்டமாக கேன்சர் கட்டி திசுக்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அறுவை சிகிச்சையில் அவர்கள் வெளியே எடுத்த கொழுப்பு கேன்சர் திசுவின் எடை எவ்வளவு தெரியுமா? 77 பவுண்ட். அதாவது கிட்டதட்ட 38 கிலோ.
இந்த கட்டி அகற்றப்பட்ட பின், ஹெக்டர் ஹெர்னாட்ஷ் ஆரோக்கியமக, எந்த வலியும் இல்லாமல் இருக்கிறார்.

லிப்போசர்கோமஸ் சிகிச்சை
இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் பெயர் லிப்போசர்கோமஸ் என்பதாகும். சர்கோமஸ் என்பது ஒருவகையான புற்றுநோய் செல் தான். இந்த செல் நம்முடைய வயிற்றில் உள்ள கொழுப்புப்பகுதி, நரம்பு, உள்ளுறுப்புகள், திசுக்கள் ஆகியவற்றில் வளரக்கூடியது. இது மிக அரிதான ஒரு நோய். ஒட்டுமொத்த கேன்சர் பாதிக்கப்பட்டவர்களில் இந்த நோய்க்கு ஆட்பட்டவர்கள் மிகக் குறைவானவர் தான் என்றும், அமெரிக்க புற்றுநோய் கழகம், கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்வர்களில் 5000 பேர் சரியான நேரத்தில் கவனிக்கப்படாததால் இறந்ததாகவும், அதேசமயம் சரியான சிகிச்சை மேற்கொண்டதால் 13000 பேர் காப்பாற்றப்பட்தாகவும் தகவல் தெரிவிக்கிறது.
MOST READ: உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

எச்சரிக்கை
இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்முடைய உடலில் அசௌகரியமான மாற்றங்கள் தென்பட்டாலும், திடீரென காரணமின்றி எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் வந்தால், நீங்களாகவே ஏதும் இல்லை என்று முடிவுக்கு வராமல், சரியான நேரத்தில் சென்று பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்வது நல்ல.