சிறுநீர் தொற்று எளிதில் தீர்க்க இந்த ஜூஸ் குடிங்க!

முள்ளங்கியை பயன்படுத்துவதினால் என்னென்ன நன்மைகள் குறிப்பாக சிறுநீர் தொற்றினை கட்டுப்படுத்த முள்ளங்கி உதவிடுமா போன்ற தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மையான காய்கறி பட்டியலில் இருப்பது முள்ளங்கி. சிலருக்கு இதன் சுவை பிடிக்காது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது இதனை பச்சையாக கூட அப்படியே சாப்பிடலாம்.வெள்ளை மற்றும் ரோஸ் நிறத்திலான முள்ளங்கியை பார்த்திருப்போம் சில இடங்களில் கருப்பு நிற முள்ளங்கி கூட கிடைக்கிறது.

குறிப்பாக இவை வெயில் காலத்தில் அதிகம் கிடைத்திடும். வெயில் காலங்களில் முள்ளங்கி அதிகமாக வளரும் தன்மை கொண்டது. இவற்றில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படுகிற நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் காமலை :

மஞ்சள் காமலை :

முள்ளங்கி கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உடலில் இருக்கிற நச்சுக்களை எல்லாம் உடனே வெளியேற்றக்கூடியது. அதோடு நம் ரத்தத்தை சுத்தப்படுத்தி நம் உடலிலிருந்து டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. இதனால் இது மஞ்சள் காமலை நோய் பாதித்தவர்களுக்கு மிகவும் நல்லது.

மஞ்சள் காமலையினால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த உயிர் அணுக்கள் குறைவாக இருப்பவர்கள் முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர மிகவும் நல்லதாகும்.

சிறுநீர் தொற்று :

சிறுநீர் தொற்று :

சரியான முறையில் சுத்தமாக கழிவறையை பயன்படுத்துவதில்லை என்பதினால் சிலருக்கு சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். அதைவிட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சரியாக தண்ணீர் குடிக்காதவர்கள் ஆகியோருக்கு எளிதாகவே சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிடும்.

இதனை போக்க முள்ளங்கி பெரிதும் உதவிடுகிறது. சிறுநீர் வெளியேறும் போது எரிச்சல்,கடுமையான வலி, சிறுநீர் பிரியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு இது தீர்வாய் அமைந்திடும்.

எடை குறைப்பு :

எடை குறைப்பு :

உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்களது பெஸ்ட் சாய்ஸ் முள்ளங்கி தான். இதில் குறைவான கலோரியே இருக்கிறது. இதனை சாலெட்டாக தயாரித்து சாப்பிட்டால் வயிறு நிறைவான உணர்வு கிடைத்திடும். அதே சமயம் உங்களுக்கு கலோரியும் அதிகரிக்காது. அதோடு இதில் கார்போஹைட்ரேட் குறைவு, மற்றும் இதில் அதிகப்படியான தண்ணீர் சத்து நிறைந்திருக்கிறது.

இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு இதில் ஃபைபர் அதிகம் குறைவான க்ளைசிமிக் இண்டெக்ஸ் கொண்டது. இதனால் இது நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்திடும்.

இதயப் பிரச்சனைகள் :

இதயப் பிரச்சனைகள் :

முள்ளங்கியில் இருக்கிற மிக முக்கியமான நன்மைகளில் இதுவும் ஒன்று. இதயம் தொடர்பான பிரச்சனைகளை இது தீர்க்க பெரிதும் உதவிடுகிறது. இதில் அதிகப்படியான ஆன்தோசியானின்ஸ் இருக்கிறது. இது ஒரு வகை ஃப்ளேவனாய்டு. இது தான் முள்ளங்கிக்கு நிறத்தையும் அதிலிருந்து ஏரளமான சத்துக்களையும் கொடுக்கிறது.

இவை தான் இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்க உதவிடுகிறது.

புற்றுநோய் :

புற்றுநோய் :

இது நம் உடலில் உள்ள டாக்ஸின்களை எல்லாம் நீக்கிடுகிறது. அதைத் தவிர இதில் அதிகப்படியான விட்டமின் சி, ஆன்தோசியனின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை இருக்கிறது. இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதினால் வயிறு, குடல்,கிட்னி போன்ற உறுப்புகளில் உருவாகக்கூடிய புற்றுநோயை தவிர்க்கலாம்.

அதோடு இதில் இஸ்தியோசைனேட்ஸ் நிறையவே இருக்கிறது . இது இருப்பதன் மிகப்பெரிய ப்ளஸ் என்ன தெரியுமா மரபணு ரீதியாக உங்களுக்கு வரக்கூடிய பாதிப்பினை தவிர்க்கச் செய்திடும்.

சருமப் பிரச்சனைகள் :

சருமப் பிரச்சனைகள் :

விடிலிகோ அல்லது லியூகோடெர்மா எனப்படுகிற சருமப் பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாக அமைந்திடும். ஏனென்றால் இதில் கர்சினோஜெனிக் என்ற சத்து இருக்கிறது. இது இந்த பிரச்சனைக்கு மருந்தாக அமைந்திடும். முள்ளங்கியை அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.அவற்றை சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் ஏற்பட்டிருக்கிற இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைத்திடும்.

மலச் சிக்கல் :

மலச் சிக்கல் :

மலச்சிக்கல் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் முள்ளங்கியை சாப்பிட்டுவர உடனடி பலன் கிடைத்திடும். இதில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. இதனால் உணவினை சீராக செரிக்கச் செய்து கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவிடும். உடலில் பைல் என்ற தாது அதிகரிக்க முள்ளங்கி உதவிடுகிறது. உணவு செரிமானத்திற்கு மிகவும் அவசியமானதாக அந்த பைல் இருக்கிறது. இவை பிற உள்ளுருப்புகளுக்கும் நல்லது.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

முள்ளங்கியில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. இவை உங்களுடைய ரத்த நாளங்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவிடும். இதனால் ரத்த உறைவு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நாம் எளிதாக தப்பிக்கலாம்.

ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து முள்ளங்கியை உணவில் சேர்த்து வர உங்களுக்கு சிறந்த பலனை கொடுத்திடும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

முள்ளங்கியில் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவதினால் உடலில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது. அதைவிட இவை உணவிலிருந்து கிடைக்கக்கூடிய சர்க்கரையை கிரகத்திக் கொள்வதில் கட்டுப்பாடு காட்டுவதினால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்லது.

காய்ச்சல் :

காய்ச்சல் :

சீசன் மாறும் போது, வைரஸ் தாக்கும் போது அல்லது வேறு எதாவது நோயின் அறிகுறியாக காய்ச்சல் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரும். அதோடு இவை உடலின் டெம்ப்பரேச்சரை குறைக்கவும் இது உதவிடுகிறது.

காய்ச்சல் இருக்கும் போது முள்ளங்கியில் சாறு எடுத்து அதில் லேசாக சிறிதளவு உப்பு கலந்து குடித்திடுங்கள். இது நம் உடலில் தாக்கியிருக்கக்கூடிய வைரஸை அழித்திடும்.

ஹைட்ரேசன் :

ஹைட்ரேசன் :

எதுவாக இருந்தாலும் சரி உடலை தண்ணீர் சத்துடன் வைத்திருப்பது என்பது மிகவும் அவசியமாகும். முள்ளங்கியில் அதிகளவு தண்ணீரே நிரம்பியிருக்கிறது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே அவை அனைத்துவிதமான உடல் உறுப்புகளும் சீராக இயங்க உதவிடும்.

அதோடு உணவு எளிதாக செரிமானம் ஆவது, உணவிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் உரிய உறுப்புகளுக்கு போய் சேர்வது ஆகியவையும் போதியளவு தண்ணீர் சத்து இருந்தால் மட்டுமே முடியும்.

பூச்சிக்கடி :

பூச்சிக்கடி :

பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் சரும மாற்றமோ அல்லது அரிப்பு உட்பட எந்த அறிகுறி தெரிந்தாலும் அதனை போக்க முள்ளங்கி உதவிடும். முள்ளங்கியில் ஆண்ட்டி ப்யூரிடிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதால் உடனடி நிவாரணம் கிடைத்திடும். அதோடு முள்ளங்கி சாறுக்கு வலியை குறைக்கிற அலர்ஜியை போக்கும் தன்மை உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

பிற நோய் தாக்குதல்களிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்று சொன்னால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். முள்ளங்கியில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.

தினமும் ஒரு கப் முள்ளங்கி சாலெட் சாப்பிடுவதினால் உங்களுக்கு பதினைந்து சதவீத விட்டமின் சி சத்து கிடைத்திடும். தொடர்ந்து உங்கள் உடலுக்கு தேவையான அளவு விட்டமின் சி கிடைத்து வந்தால் அது நம் செல்களை எல்லாம் துரிதமாக செயல்பட வைக்கும்.

இவை நம்மைத்தாக்குகிற சாதரண வைரஸ் காய்ச்சலிலிருந்து புற்றுநோய் வரையிலும் தடுக்க உறுதுணையாய் இருக்கும்.

 கல்லீரல் :

கல்லீரல் :

முள்ளங்கி நம்முடைய கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கு மிகவும் நல்லதாகும். சில என்சைம்கள், அமிலங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யவும் சீரான அளவில் பராமரிக்கவும் முள்ளங்கி உதவிடுகிறது. இதனால் நோய்த்தொற்று அல்சர் போன்றவற்றிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

பொடுகு :

பொடுகு :

முள்ளங்கி பொடுகு பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகும். முள்ளங்கியை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மட்டுமின்றி முள்ளங்கியை சாறு எடுத்து அதனை தலைமுழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக முடியின் வேர்கால்களுக்கு படுமாறு லேயர் லேயராக பிரித்து தலையின் எல்லா பாகங்களுக்கும் படறுமாறு முள்ளங்கி சாறினை தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டவல் அல்லது ஹெட் கேப் கொண்டு தலையை கவர் செய்து கொள்ளுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாதரண தண்ணீரில் அலசி விடலாம். இவை முடியுதிர்வையும் தடுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, May 4, 2018, 14:40 [IST]
Desktop Bottom Promotion