For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வயது என்னவென்று சொல்லுங்கள்..? உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என நாங்கள் சொல்கிறோம்.

|

பொதுவாக ஒவ்வொருவரின் உடல்நிலை பல வகையாக வேறுபட்டிருக்கும். ஒருவருக்கு குளுமையான உடலாக இருக்க கூடும், ஒருவருக்கு வெப்பமான உடலாக இருக்கும், வேறு சிலருக்கு வெயில் லேசாகப்பட்டாலே உடலில் கொப்புளம் போன்று வர தொடங்கும். இப்படி பல வகையான தன்மை கொண்ட உடல்கள் இங்குள்ளன.

உங்கள் வயது என்னவென்று சொல்லுங்கள்..? உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என நாங்கள் சொல்கிறோம்..

உடலில் மாற்றங்கள் பொதுவாகவே வயதை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. வயதின் மாற்றங்களை பொருத்து, உடலில் பல வகையான நோய்கள் ஆக்கிரமிக்க கூடும். இந்த பதிவில் உங்கள் வயதின் படி, உங்கள் உடல் எப்படி செயல்படுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரியாத புதிர்..!

புரியாத புதிர்..!

மனித உடலானது பல வகையான புதிர்களை தனக்குள் அடைத்து வைத்துள்ளது. இன்றைய அறிவியல் நமது உடலை பற்றிய ஒவ்வொரு முடிச்சிகளையும் அவிழ்த்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் நாம் சாப்பிட கூடிய உணவையும், சுற்றுபுறத்தையும் வைத்தே உடலில் பல மாற்றங்கள் நடக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வயதுக்கேற்ற மாற்றங்கள்..!

வயதுக்கேற்ற மாற்றங்கள்..!

பொதுவாக ஒவ்வொருவரின் வயதுக்கேற்றவாறு தான் அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கும். அதாவது, உடலில் இயற்பியல் மாற்றங்கள், ஹார்மோனல் மாற்றங்கள், உயிரி- வேதியியல் மாற்றங்கள், உளவியல் மாற்றங்கள் என பல வகையான மாற்றங்கள் ஒவ்வொரு நொடியும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

10 வயது வரை...

10 வயது வரை...

இந்த வயதுக்குள் தான் நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் சீரான முறையில் செயலாற்ற தொடங்கும். பெரும்பாலும் பெற்றோரின் மரபணுக்களை சார்ந்தே ஒரு சில செயல்களை நாம் செய்ய தொடங்குவோம். சிறுவயதில் ஊட்டசத்து குறைபாடு இருந்தால் அவை நாளாக நாளாக பல வித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும்.

20 வயது வரை

20 வயது வரை

மிகவும் துடிப்பான வயதாக இந்த காலகட்டத்தை கூறுகின்றனர். இந்த வயதில் உடலின் மெட்டபாலிசம் அதி வேகமாக இருக்குமாம். இந்த வயதில் தான் நீங்கள் அதிகம் சாப்பிடவும், அதிகமாக உழைக்கவும் முடியும். தசைகளின் வளர்ச்சியும்ம், ஹார்மோன்களின் உற்பத்தியும் இந்த வயதில் தான் அதிகமாக இருக்கும். இந்த வயது வரை எப்படி வேண்டுமானாலும் ஓடி ஆடி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

MOST READ: 64 வயதிலும் கமல்ஹாசன் இவ்வளவு துடிப்பாக இருக்கறதுக்கு காரணம், கேரளம் தானாம்..!

30 நெருக்கும் போது..!

30 நெருக்கும் போது..!

பொதுவாகவே வயது கூட கூட நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் அதன் செயல்திறனை இழக்க நேரிடும். அதே போன்று தான் நீங்கள் 30 வயதை நெருக்கும் போது உங்களின் உடல் முன்பை விட எல்லா செயல்களையும் மெதுவாக செய்யும். இந்த வயதில் பெரும்பாலும் உடலின் வளர்ச்சி நின்று விடும். எனவே, அதிக உடற்பயிற்சிகள் இந்த வயதில் தேவைப்படும்.

40 வயதா...?

40 வயதா...?

நீங்கள் 40 வயதை நெருங்கிய உடன் முன்பை விட ஹார்மோன்களின் செயல்திறன் குறைந்திருக்க கூடும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பலவித மாற்றங்கள் இந்த வயதில் தொடங்கும். ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். மேலும், தசைகளின் நிறையும் குறைய தொடங்கும்.

பாதி(50) செஞ்சுரியா..?

பாதி(50) செஞ்சுரியா..?

இந்த வயதில் ஒரு சிலருக்கு உடல் எடை கூட தொடங்கும். தசைகளின் நிறை குறைந்ததால், இந்த வயதில் கொழுப்பின் மூலம் அதை சரி ஈடுகட்டி விடும். எனவே, முன்பை விட இந்த வயதில் குறைந்த கலோரிகள் தேவைப்படும். ஆதாலால், அதிகம் கொழுப்பு கொண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

60 வயதை நெருக்கும் போது..!

60 வயதை நெருக்கும் போது..!

வயது 60 ஆகும்போது பலருக்கு உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். மேலும், சிலருக்கு வயதின் முதிர்ச்சியால் சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, இதய நோய்கள் வந்திருக்கும். இவர்கள் கட்டாயம் சீரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மேலும், சின்ன சின்ன உடற்பயிற்சிகளை இவர்கள் செய்வது சிறந்தது.

MOST READ: இந்த மாதம் மோசமான நோய்கள் வர கூடிய ராசிக்காரர் நீங்கள் தானா..? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

60க்கு பிறகு..?

60க்கு பிறகு..?

இப்பொது இருப்பவர்களின் சராசரியான வயது 60 முதல் 70 ஆக மாறி உள்ளது. முன்பெல்லாம் நம் முன்னோர்களை 100 வயதுக்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்த வரலாறுகளெல்லாம் உள்ளது. 60 வயதுக்கு மேல் இன்றைய காலக்கட்டத்தில் உடலின் மெட்டபாலிசம் முழுவதுமாக பாதிக்கப்பட கூடும் என்றே ஆராய்ச்சிகள் சொல்கிறது.

நேரம் எப்படி..?

நேரம் எப்படி..?

பொதுவாக 30 வயதுடையவர்கள் தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இவர்கள் தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வதை காட்டிலும், மாலை நேரத்தில் இயற்கையோடு சேர்ந்து பயணித்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அல்லது காலை மற்றும் மாலையில் பூங்காவிற்கு சென்று நடைபயிற்சி செய்தாலும் இவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Your Metabolism Works Depends On Your Age

This is the article about, how your metabolism works depends on your age.
Desktop Bottom Promotion