Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்குமாம் -
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா?
பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது
பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த இடத்தில வெளிப்படுகிறது என்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் மாறுபடும்.

உதாரணத்திற்கு ஆண்கள் சுயஇன்பம் காணும்போது வெளிப்படும் உயிரணுக்கள் வெளியேறிய உடனே இறந்து விடும். உயிரணுக்கள் பெண்களின் உடலுக்குள் சென்றாலும் கூட அவற்றின் ஆயுட்காலம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று. இந்த பதிவில் உயிரணுக்களை பெண்கள் உடலில் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்பமடைய எத்தனை உயிரணு தேவை?
ஒரு பெண் கர்ப்பமடைய ஒரே ஒறு உயிரணு போதும். கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளியே வரும்போது அதில் எத்தனை உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டையை சென்று அடைகிறதோ அதனை பொறுத்தே கர்ப்பமும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இருக்கும். ஒவ்வொரு முறையும் உயிரணுக்கள் வெளியேறும்போது அதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் உயிரணுக்கள் வெளியேறுகிறது. இந்த கோடிக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஆரோக்கியமான ஒன்றோ அல்லது இரண்டு உயிரணுக்கள்தான் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக பாலோப்பியன் குழாயை கடந்து பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருவாக உருவாகிறது.

உயிரணுக்களின் தரத்தை அதிகரிப்பது எப்படி?
இந்த பழக்கவழக்கங்கள் உங்கள் உடலை மட்டுமின்றி உங்கள் உயிரணுக்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. புகைப்பழக்கத்தை தவிர்த்தல் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது உங்களுடைய உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க கூடும். மேலும் அளவாக மது அருந்துவது, சத்தான உணவுகளை சாப்பிட்டு எடையை சீராக பராமரிப்பது, இறுக்கமான உடைகளை அணியாமல் இருப்பது போன்றவை உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்கும்.

எப்படிப்பட்ட உயிரணுக்கள் கர்ப்பத்தை உண்டாக்கும்?
ஒவ்வொரு முறை ஆண்கள் உயிரணுக்களை வெளியேற்றும்போதும் 2 முதல் 6 மிலி உயிரணுக்கள் வெளியேறும். அதற்கு குறைவாக உயிரணுக்கள் வெளியேறினால் அவற்றால் பெண்ணை கர்ப்பமாக்க இயலாது. அதேபோல உயிரணுக்களின் அடர்த்தியும் முக்கியமான ஒன்று. உயிரணுக்கள் வெளியேறியவுடன் திடமாக இருந்தாலும் 10 முதல் 15 நிமிடத்திற்குள் நீர்த்து போகவேண்டும். இல்லையெனில் அவற்றால் கருமுட்டைகளை அடைய இயலாது.

பெண்கள் உடலில் உயிரணுக்களின் ஆயுட்காலம்
உயிரணுக்கள் பெண்ணுறுப்புக்குள் சென்ற பிறகு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வாய் உயிருடன் இருக்கும். பல அணுக்கள் ஆரம்ப நிலையிலேயே இறந்துவிடும். மீதமுள்ள உயிரணுக்களில் ஒன்றே கர்ப்பம் உண்டாக்கும் ஆற்றல் உடையதாக உள்ளது.

கருமுட்டை உற்பத்தியின்போது 3-5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்
இது கருப்பைக்குள் போதுமான அளவு வெப்பமும், திரவமும் உள்ளபோது நடக்க கூடியது. சொல்லப்போனால் கர்ப்பப்பை திரவம் கருமுட்டை உற்பத்தியாவதற்கான அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில் உயிரணுக்கள் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

வெளிப்புறங்களில் உயிரணுக்களின் ஆயுட்கலாம்
வெளிப்புறம் என்று வரும்போது உயிரணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவுதான். மனித உடலில் உள்ள வெப்பநிலை இல்லாத இடங்களில் உயிரணுக்களால் நீண்ட நேரம் உயிருடன் இருக்க இயலாது. அவை வெளியே வந்தவுடனேயே இறந்துவிடும். இல்லையெனில் சூழ்நிலை மற்றும் இடத்தை பொறுத்து சில நிமிடங்கள் உயிருடன் இருக்கும்.

எப்படி உயிரணுவின் ஆயுளை அதிகரிப்பது?
பெண்களின் உடலில் உயிரணுக்களின் ஆயுளை அதிகரிப்பது என்பது இயலாது என்று. அதற்கு பதிலாக ஆண்கள் தங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க முயலலாம். ஆரோக்கியமான உயிரணுவிற்கு ஆயுள் அதிகம். உயிரணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்வருவனற்றை முயற்சி செய்து பார்க்கவும்.

அஸ்வகந்தா
இயற்கை மூலிகையான அஸ்வகந்தா உயிரணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது. ஆய்வுகளின் படி இது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது உயிரணுவின் உற்பத்தி மட்டுமின்றி அவற்றின் தரமும் உயர்வதை காண்பீர்கள்.

லேப்டாப்
லேப்டாப்பை உங்கள் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிருங்கள். அதிலும் வைபை இயக்கத்தில் உள்ள லேப்டாப் உங்கள் மடியில் இருக்கும்போது அதிக ரேடியோ அலைகளால் உங்கள் உயிரணுக்கள் வெகுவாக பாதிக்கப்படும். அதேபோல உங்கள் செல்போனையும் பேண்ட் பக்கத்திற்குள் வைப்பதை தவிருங்கள்.

குளிர்ந்த நீர் குளியல்
உயிரணுக்களை பொறுத்த வரையில் சூடான நீரை காட்டிலும், குளிர்ந்த நீர் குளியல் அதிக நன்மையை வழங்கக்கூடியது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை வழங்குவது மட்டுமின்றி உங்களுடைய உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications