Latest Updates
-
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும்
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
Navratri 2026 Dreams Meanings In Tamil: நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களுக்கும் சிறப்பு பூஜைகளை செய்து வழிபடும் மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். இந்த ஆண்டின் நவராத்திரி அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் பத்தாம் நாளான அக்டோபர் 20 ஆம் தேதி விஜய தசமியுடன் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் துர்கா தேவியை வழிபடுவது வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதாக ஒரு நம்பிக்கை.

இக்காலகட்டத்தில் ஒருவரது கனவில் துர்கா தேவியை காண்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பொதுவாக தூங்கும் போது கனவு வருவது சாதாரணமான ஒன்று. அதுவும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு வரும். அதில் பெரும்பாலான கனவு ஆழ்மனதில் உள்ள ஆசையாகவோ அல்லது ஆழ்மனதை தாக்கிய ஒரு விஷயத்தாலோ வரலாம். சில சமயங்களில் நம் வாழ்வில் நடக்கப் போவதை உணர்த்தும் வகையிலும் கனவுகள் வரலாம். அந்த வகையில் துர்கா தேவியை மனதார வழிபட்டுக் கொண்டிருக்கும் நவராத்திரி காலத்தில் ஒருவரது கனவில் துர்கா தேவி வந்தால், அதன் பின் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அந்த கனவுகள் குறித்து காண்போம்.
1. துர்கா தேவியின் சிலை அல்லது படத்தை காண்பது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நவராத்திரி காலத்தில் கனவில் துர்கா தேவியின் சிலையையோ அல்லது படத்தையோ கண்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இதன் பொருள் வாழ்வில் உள்ள பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைத்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது என்பதாகும்.
2. துர்கா தேவியின் ஆசியை பெறுவது
நவராத்திரி காலத்தில் உங்களின் கனவில் துர்கா தேவி ஆசீர்வதிப்பது போன்று வந்தால், அந்த கனவு மிகவும் சிறப்பான மற்றும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அதுவும் இந்த கனவின் பொருள், கனவில் கண்டதைப் போன்று நீங்கள் துர்கையின் பரிபூர்ண ஆசியைப் பெற்றுள்ளீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் விரைவில் நீங்கும் என்பதாகும்.
3. சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ள துர்கையை காண்பது
நவராத்திரி காலகட்டத்தில் ஒருவர் தங்களின் கனவில் சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ள துர்கையை காண்பது மிகவும் நல்லதாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இந்த கனவின் பொருள் என்றால், அது துர்கா தேவியின் ஆசியால் நீங்கள் தொழில் வாழ்க்கையில் பெறப்போகும் வெற்றியைக் குறிக்கிறது.
4. கோபமான துர்கா தேவியை காண்பது
நவராத்திரி காலத்தில் ஒருவர் கனவில் துர்கா தேவி கோபமாக இருப்பதைக் கண்டால், அது ஒரு எச்சரிக்கையின் அறிகுறி. ஏனெனில் ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவில் துர்கையின் கோபமான வடிவத்தை கண்டால், அது துர்கையை நீங்கள் வழிபடுவதில் உள்ள குறையை குறிக்கிறது. எனவே காலையில் எழுந்ததும் உடனே குளித்துவிட்டு துர்கா தேவியை மனதார வழிபாடு செய்யுங்கள்.
5. சிவப்பு நிற ஆடையில் துர்கையை காண்பது
நவராத்திரி காலகட்டத்தில் கனவில் துர்கா தேவி சிவப்பு நிற ஆடையில் காண்பது என்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இப்படியான கனவு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது என்பதைக் குறிக்கிறது. முக்கியமாக திருமணமாகாதவர்கள் இந்த கனவை கண்டால், அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
