ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நட்ஸ் குறித்த பல செய்திகளை கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களைப் பற்றியெல்லாம் கடந்து வந்திருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் இருக்கிறது. இதைத் தவிர பல்வேறு நியூட்ரிசியன்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதை எளிதான ஸ்நாக்ஸாக கூட நம்மால் எடுத்துக் கொள்ள முடிகிறது. அதாவது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கிற ஒரு பொருள் நம் கண் முன்னால் இருக்கிறது அதனை எப்படிச் சாப்பிட வேண்டும்? ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் வரை சாப்பிடலாம்? தினமும் பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா குறையுமா?? இப்படி பல கேள்விகள் நம் முன்னால் விடை தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

சிலர் பாதாம் அப்படியே சாப்பிடலாம் என்றும்.... இன்னும் சிலரோ பாதாம் முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலை பாதாம் தோலை நீக்கி விட்டுத் தான் சாப்பிட வேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. அப்படியானால் வெறும் பாதாமை சாப்பிடுவது பலன் தராதா? பாதாம் எப்படிச் சாப்பிட்டால் நல்லது இப்படி பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை விடையளிக்கப் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பின் விளைவுகள் :

பின் விளைவுகள் :

என்ன தான் அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அதுவும் நஞ்சாகிறது தானே அது போலத் தான் இதுவும். பாதாம் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது அதீத நன்மை அளிக்கக்கூடியது என்று என்னன்வோ தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும் அதன் அளவு குறித்தும் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படுகிற பின் விளைவுகளைப் பற்றியும் நாம் அதிகம் கவலைக் கொள்கிறோம்.

முதலில் அதிகமாக பாதாம் சாப்பிட்டால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்று பார்க்கலாம்.

வயிற்றுக் கோளாறுகள் :

வயிற்றுக் கோளாறுகள் :

அதிகப்படியான பாதாம் நாம் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானம் அடைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதோடு பிற உணவுகளையும் செரிமானம் ஆவதை தடுக்கும் . இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படக்கூடும்.

நார்ச்சத்து அதிகமிருக்கக்கூடிய எந்த பொருளை நீங்கள் உணவாக எடுத்துக் கொண்டாலும் அது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்கு அதிகப்படியான தண்ணீர் தேவை. பாதாமை செரிக்க வைக்க தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்லி வழக்கத்தினை விட அதிகளவு தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் சோடியம் அளவு குறையும். இதனால் மேலும் சில உபாதைகள் சருமப் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம்.

மக்னீசியம் :

மக்னீசியம் :

நீங்கள் அன்றைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய உணவிலும் மக்னீசியம் இருக்கிறது. இதைத் தவிர வழக்கம் போல அளவுக்கு அதிகமாக பாதாம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொன்னால் நம் உடலில் கூடுதலான மக்னீசியம் சேர்ந்திடும். ஏனெனில் பாதாமில் மக்னீசியம் இருக்கிறது.

இது ரத்த அழுத்தம் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு நாளைக்கு உங்களுக்கு 1.3முதல் 2.3 மில்லிகிராம் வரையிலான மக்னீசியம் போதுமானது.

விட்டமின் இ :

விட்டமின் இ :

ஒரு நாளில் நமக்கு 15மில்லி கிராம் வரையிலான விட்டமின் இ போதுமானது. பாதாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் விட்டமின் இ நம் உடலில் 1000 மில்லி கிராம் வரையிலும் அதிகரித்து விடும்.

இதனால் வயிற்றுப் போக்கு, தலைவலி,உடற்சோர்வு ஆகியவை ஏற்படும்.

உடல் எடை :

உடல் எடை :

பாதாம் அதிகளவு சாப்பிடுவதால் ஏற்படுகிற பின்விளைவுகளில் மிகவும் முக்கியமானது இது தான். ஆம், அளவு தெரியாமல் அதிகளவு பாதாம் எடுத்துக் கொள்வதால் அது நம் உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

பாதாமில் கொழுப்பு இருக்கிறது. ஏற்கனவே கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது கூடவே பாதாமும் என்றால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும்.

பாதாம் சாப்பிடுவதால் கிட்டத்தட்ட 2000 கலோரிகள் வரை கூடுதலாக நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு.

டாக்சின் :

டாக்சின் :

பாதாமில் அதிகளவு ஹைட்ரோசியானிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது நம் உடலில் அதிகளவு சேர்ந்திடும் இதனால் நரம்பு பிரச்சனை, மூச்சுப் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும். சிலருக்கு இது அலர்ஜியையும் ஏற்படுத்துவதுண்டு.

பாக்டீரியா :

பாக்டீரியா :

உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு பாதாம் துணை நிற்கும். இதனாலேயே பல நாடுகளில் பாதாம் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்திருக்கிறார்கள்.

இதனால் தான் பாதாம் ஊற வைத்து சாப்பிடும் பழக்கமும் வந்திருக்கிறது.

எவ்வளவு பாதாம் :

எவ்வளவு பாதாம் :

ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம். இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.

பாதாம் ஊற வைத்தோ வறுத்தோ சாப்பிடாமல் அப்படியே சாப்பிடுவதாக இருந்தால் இந்த அளவு பொருந்தும்.

நேரம் :

நேரம் :

பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடக்கூடாது.

ஊற வைத்த பாதாம் :

ஊற வைத்த பாதாம் :

பலருக்கும் இருக்கிற கேள்வி இது தான். பாதாமை அப்படியே சாப்பிடலாமா அல்லது ஊற வைத்து அதன் தோலை நீக்கி தான் சாப்பிட வேண்டுமா என்பது தான்.

இது சுவையை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இதனை தேர்ந்தெடுப்பதில் நம்முடைய ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. பாதம் தோலில் அதிகப்படியான டேனின் இருக்கும்.அதாவது பாதாமிற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல.... அவ்வளவு எளிதாக பாதாமில் இருக்கக்கூடிய சத்துக்களை வெளிவிடாது. அதனால் தான் அதன் தோலை நீக்கி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Many Badham Did You Eat In a Day

How Many Badham Did You Eat In a Day
Story first published: Saturday, April 7, 2018, 15:07 [IST]