For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்டை ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் என்பது உண்மையா?

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த பட்டைத்தூள் எப்படி பயன்படுகிறது. மேலும் அதனை எடுத்துக் கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது குறித்து.

|

இன்றைக்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அன்றாட உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இள வயதில் இருப்பவர்களுக்கு கூட சர்க்கரை நோய் உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் ஸ்ட்ரஸ் காரணமாக இருபத்தைந்து வயது இளைஞனுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது.

சர்க்கரை அதிகமான உணவுப் பொருட்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடுகிற பிற பொருட்களால் நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பல வைத்திய முறைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவற்றில் சிலவற்றை நாம் முயற்சித்துக் கூட பார்த்திருப்போம். அவற்றில் ஒன்று தான் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க பட்டையை பயன்படுத்துவது.

பட்டையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,அப்படி பயன்படுத்துவதால் உண்மையிலேயே சர்க்கரை குறைகிறதா என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை :

பட்டை :

பட்டையை பொருத்தவரையில் அது ஒரு மசாலாப்பொருள் என்று தான் பெரும்பாலும் நினைத்துக் கொண்டிருப்போம். உண்மையில் அது ஒரு இனிப்பும் காரத்தன்மையும் கலந்த ஒரு பொருள். கரீபியன்,தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாகவே இந்த பட்டை மரம் வளர்ந்திருக்கிறது.

மரத்திலிருந்து உரித்து எடுக்கப்படும் பட்டையை மக்கள் பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள். அதில் ஏராளமான சத்துக்கள் இருக்கலாம் அவர்கள் மருத்துவத்திற்கும் உணவிற்கும் பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் இந்த பட்டை சர்க்கரை நோய்க்கு உதவுமா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

ஆய்வுகள் :

ஆய்வுகள் :

சர்க்கரை நோய் குறித்தும், சர்க்கரை நோயின் தீர்வுகள் குறித்தும் ஏராளமான ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதில் பட்டை தொடர்பாக வந்ததில் மிகவும் கவனிக்கத்தக்கது என்று சொன்னால் கடந்த 2003 ஆம் ஆண்டு டயாப்பட்டீஸ் கேர் என்ற ஒரு சர்க்கரை நோய் குறித்து பல ஆயவுக்கட்டுரைகளை வெளியிடும் பத்திரிக்கையில் இரு ஆய்வுக்கட்டுரை வெளியானது.

அதில், டைப் 2 வகை சர்க்கரை நோய் இருப்பவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் இலவங்கப்பட்டை துணை புரிகிறது என்றார்கள்.

இன்ஸுலின் :

இன்ஸுலின் :

இதே போல 2000 ஆம் ஆண்டு விவசாயப் பொருட்கள் தொடர்பான ஆய்வில் தினமும் ஒரு கிராம் அளவு பட்டைத் தூள் சாப்பிடுவதால் நம் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது என்றார்கள். இதைத் தவிர தொடர்ந்து பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

குளுக்கோஸ் :

குளுக்கோஸ் :

நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஒரு பொருள் தான் குளுக்கோஸ். இவை தான் நம் செல்களின் ஆரோக்கியத்திற்கு காரணம். அதை விட நம்முடைய சுறுசுறுப்புக்கும், சோர்வுக்கும் இதுவே பொறுப்பு. ரத்தத்தில் இருக்கிற குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் செல்களுக்கு செல்லாமல் ரத்தத்திலேயே சேர்ந்திடும்.

எப்படி உதவுகிறது :

எப்படி உதவுகிறது :

பட்டையில் சில முக்கியமான கெமிக்கல்கள் இருக்கின்றன. இவை இன்ஸுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. அதோடு ரத்தத்தில் இருக்கிற குலுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவிடும். இதனால் ரத்தத்தில் இருக்கிற குலுக்கோஸ் அளவு குறையும்.

சர்கரை நோயை தவிர்க்க அல்லது கட்டுக்கள் வைத்திருக்க இப்படித்தான் உதவுகிறது.

கவனம் :

கவனம் :

சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும் என்பதற்காக பட்டையை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. பட்டையை அதிகமாக சாப்பிடும் போது குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் போது பட்டையில் இருக்கிற கோமரின் என்ற சத்து நம் உடலில் சேர்கிறது. இது அதிகப்படியாக சேரும் பட்சத்தில் கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எப்படி பயன்படுத்தலாம் :

எப்படி பயன்படுத்தலாம் :

சர்க்கரை நோய் வகைகளில் தற்போது புதிதாக ஐந்து வகைகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஆரம்பித்திலிருந்து சொல்லக்கூடியது மூன்று வகைகள் டைப்1 ,டைப் 2 மற்றும் கெஸ்டேஸ்னல் டயாப்பட்டீஸ். இவர்கள் பட்டையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவான தகவல்கள்.

சர்க்கரைக்கு பதிலாக :

சர்க்கரைக்கு பதிலாக :

பட்டைத்தூள் இப்போது கடைகளில் கிடைக்கிறது. அவற்றை நாம் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதிலிருக்கும் இனிப்பு சத்து சுவையை கூட்டுவதுடன் வாசத்தையும் அதிகரிக்கும். வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக இந்த பட்டைத்தூளை நீங்கள் பயன்படுத்தலாம்.

காலை உணவு மிகவும் அத்தியாவசியமானதாக பார்க்கப்படுகிறது. காலையில் சாப்பிடுகிற உணவுகளில் பட்டைத்தூள் சேர்த்து சாப்பிடலாம். அதிகமட்சமாக ஒரு டீஸ்ப்பூன் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

டீ :

டீ :

இந்த பட்டைத்தூளில் டீ தயாரித்துக் குடிக்கலாம். ஒரு கப் தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு பட்டைத்தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் ஆறியதும் அந்த தண்ணீரில் தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் அதில் நீங்கள் கொதிக்க வைத்து ஆற வைத்த பாலையும் சேர்த்துக் கொள்லலாம்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

பட்டையை நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் பட்டையில் இருக்கிற சத்துக்கள் அடங்கிய மாத்திரைகள் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். அந்த மாத்திரை சாப்பிடுவதற்கு முன்னால் மருத்துவர்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது. சிலருக்கு இந்த மாத்திரைகள் ஒவ்வாமையை கூட ஏற்படுத்திடும்.

எவ்வளவு சாப்பிடலாம் :

எவ்வளவு சாப்பிடலாம் :

இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று சொன்னதும் மூன்று வேலை உணவிலும் சேர்த்துக் கொள்வது, ஒரு நாளில் நினைத்த போதெல்லாம் மாத்திரைகளை விழுங்குவது ஆகியவற்றை செய்யக்கூடாது. இது பிற உபாதைகளை தான் ஏற்படுத்தும்.

உங்களுடைய குளுக்கோஸ் லெவலுக்கு ஏற்ப நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று மாத்திரை எடுக்கலாம். நீங்கள் பட்டைத்தூள் உணவில் சேர்க்கப்போகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கிராம் அளவு பட்டைத்தூள் போதுமானது.

பின் விளைவுகள் :

பின் விளைவுகள் :

இந்த பட்டைத்தூளை நீங்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். இது நம் உடலில் டாக்ஸினை அதிகப்படுத்தும். இதனால் உணவு செரிப்பதில் துவங்கி இதுயத்துடிப்பு வரையிலும் பிரச்சனைகள் மேலோங்கும். இதயப்பிரச்சனையும் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Cinnamon Help for Diabetes

How Cinnamon Help for Diabetes
Story first published: Friday, April 20, 2018, 13:14 [IST]
Desktop Bottom Promotion