For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்

ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு நோயாகும். ஹெர்னியா பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் குடல் சம்பந்தமான ஒரு நோயாகும்.

|

ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு நோயாகும். ஹெர்னியா பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் குடல் சம்பந்தமான ஒரு நோயாகும். குடலிறக்கம் என்பது குடலில் ஏற்படும் ஒருவித பலவீனமாகும். இந்த நோய்க்கான அறிகுறிகள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

hernia: causes, symptoms and treatment

ஹெர்னியா எப்பொழுதும் அடிவயிற்றில்தான் ஏற்படும் ஆனால் சிலசமயம் தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் கூட ஏற்படும். இது பிறக்கும் போதே கூட ஏற்பட வாய்ப்புள்ளது. பின்னாளில் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் உடலை மிகவும் பலவீனமடைய செய்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இன்ஜினால் குடலிறக்கம்

இன்ஜினால் குடலிறக்கம்

பெரும்பாலும் ஆண்களை தாக்கும் ஹெர்னியாவில் 70 சதவீதம் இன்ஜினால் ஹெர்னியாவாகத்தான் இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் குடல் குடல் உடலின் பலவீனமான பகுதிக்கு தள்ளப்பட்டு அடிவயிறை கிழிக்க வாய்ப்புள்ளது.

இன்ஸிஸ்னல் குடலிறக்கம்

இன்ஸிஸ்னல் குடலிறக்கம்

நீங்கள் அடிவயிற்று அறுவைசிகிச்சை செய்திருந்தால் உங்கள் குடல் அடிவயிற்று தையல் அல்லது பலவீனமான இடத்தில் இறங்கிவிடும். இது இன்ஸிஸ்னல் ஹெர்னியா ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஹயட்டால் குடலிறக்கம்

ஹயட்டால் குடலிறக்கம்

மார்பிலிருந்து அடிவயிற்ற்றை நோக்கி செல்லும் ஒரு உணவுக்குழாயின் பெயர் ஹயட்டஸ். உங்கள் வயிற்றின் ஒரு பகுதி ஹயட்டஸ் வழியாக வெளியே தள்ளினாள் அது ஹயட்டால் ஹெர்னியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

 பெமோரல் ஹெர்னியா

பெமோரல் ஹெர்னியா

குடல் திசுக்கள் தொடைச்சிறையின் சுவற்றை நோக்கி தள்ளப்படுவது பெமோரல் ஹெர்னியா எனப்படுகிறது. இது எடை அதிகமான பெண்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகமாக ஏற்படுகிறது.

MOST READ: உங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்த நோக்கம் என்னவென்று தெரியுமா? இத பாருங்க தெரியும்...

காரணங்கள்

காரணங்கள்

ஹெர்னியா என்பது பலவீனமான தசைகள் மற்றும் இணைப்பு திசுக்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு திசுக்களில் முறிவு ஏற்படுவதால் உண்டாகிறது. வயது, தொடர்ச்சியான இருமல் மற்றும் அறுவைசிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகள் போன்றவை தசைகளை பலவீனமாக்குகிறது. உங்கள் உடலை வலுவிழக்க செய்யும் காரணிகள் அதிக எடையை தூக்குவது, வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்றில் அதிக நீர் சேருதல் போன்றவை ஆகும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

குடலிறக்கம் ஏற்பட்டதற்கான முதல் அறிகுறி பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டிகள் ஏற்படுவதுதான். மற்ற அறிகுறிகள் பதிக்கப்பட்ட இடத்தில் வலி மற்றும் அசௌகரியங்கள் சோர்வு மற்றும் அடிவயிற்றில் பலவீனமாக உணர்வது போன்றவையாகும். மேலும் மார்பு பகுதியில் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையும் குடலிறக்கத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

அபாயங்கள்

அபாயங்கள்

எடை அதிகரிப்பு, தொடர்ச்சியான மலச்சிக்கல், இருமல் மற்றும் புகைபிடித்தல் போன்றவை குடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சிஸ்டிக் பைப்ரோசிஸ் கூட குடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

 சிகிச்சைகள்

சிகிச்சைகள்

பொதுவாக குடலிறக்கத்திற்கு அறுவைசிகிச்சைதான் முதல் தீர்வாகும், ஆனால் ஹயட்டால் ஹெர்னியாவானது அனாடசிட்ஸ், H2 ப்ளாக்கர்ஸ் போன்ற மருந்துகள் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை குறைத்து இதனை குணப்படுத்தக்கூடும். அறுவைசிகிசிச்சை செய்யும் முன் உங்கள் குடலிறக்கத்தின் அளவு, அறிகுறிகள், உங்கள் ஆரோக்கியம் போன்றவற்றை பொறுத்தே எந்தவிதமான அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்பது முடிவுசெய்யப்படும்.

MOST READ: உனக்கு எப்படிடா அந்த பொண்ணு செட் ஆச்சுன்னு வாயப் பொளந்தவான் தான் அதிகம்... - My Story #317

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

hernia: causes, symptoms and treatment

Hernia is a condition that occurs mostly in men and it happens when an organ or a fatty tissue pushes through a weak spot in a surrounding muscle or connective tissue.
Story first published: Friday, October 12, 2018, 17:37 [IST]
Desktop Bottom Promotion