For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோசமான வாய் ஆரோக்கியத்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

வாய்வழியாக செல்லும் பாக்டீரியாக்கள் எளிதில் இரத்தத்தில் கலந்து பல்வேறு ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கக்கூடும். இதனால் உடலுறுப்புகளுக்குள் பல்வேறு இடங்களில் வீக்கங்கள் ஏற்படலாம்.

|

வாய் ஆரோக்கியம் என்பது அதன் ஆரோக்கியம் மட்டுமல்ல அது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் குறிப்பதாகும். ஏனெனில் வாய்மூலமாகத்தான் அனைத்து பொருட்களும் உடலுக்குள் செல்கிறது. மோசமான வாய் ஆரோக்கியம் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

health issues caused by bad oral health

வாய்வழியாக செல்லும் பாக்டீரியாக்கள் எளிதில் இரத்தத்தில் கலந்து பல்வேறு ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கக்கூடும். இதனால் உடலுறுப்புகளுக்குள் பல்வேறு இடங்களில் வீக்கங்கள் ஏற்படலாம். வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதுதான் உங்களுடைய ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாகும்.மோசமான வாய் ஆரோக்கியத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்

இதய நோய்

வாய் ஆரோக்கியம் சிறப்பாக இல்லாதது கண்டிப்பாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். பாக்டீரியா தொற்றுகளால் ஈறுகளில் வீக்கங்கள் ஏற்பட்டால் அது பெரிடோன்ட்டல் என்னும் நோயை உருவாக்கும். இந்த பாக்டீரியாக்கள் இரத்தத்தில் கலக்கும்போது அவை தமனிகளை கடினமாக்க கூடிய ஆபத்து உள்ளது. இது ஆர்த்தோஸ்லெக்ரோசிஸ் என்னும் ஆபத்தான நோயாகும். இது இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இதய அடைப்பை உண்டாக்கும். தமனிகள் மற்றும் இரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

டிமென்ஷியா

டிமென்ஷியா

சுதாரமில்லாத வாய் ஆரோக்கியம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஈறுகளின் வீக்கங்களில் இருந்து வெளிப்படும் பாக்டீரியாக்கள் மூளை செல்களை பாதிக்க கூடியது. இதன் நியாபக மறதி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த பாக்டீரியாக்கள் இரத்தம் ஓட்டம் மற்றும் நரம்புகளில் தாக்குதல் நடத்தும் போது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.

சுவாச நோய்கள்

சுவாச நோய்கள்

வாய் ஆரோக்கியம் சரியில்லாத போது அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பற்கள் மற்றும் வீங்கிய ஈறுகள் மூலம் வெளியிடப்படும் பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலுக்கு செல்கிறது. இந்த பாக்டீரியாக்கள் நுரையீரல் செல்லும்போது சுவாச தொற்றுநோய்கள், நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, சிஓபிடி போன்ற நோய்களை உண்டாக்குகிறது.

MOST READ: எமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

வாய் ஆரோக்கியம் சர்க்கரை நோயை நேரடியாக உருவாக்கவிட்டாலும் வீக்கமடைந்த ஈறுகள் மூலம் ஏற்படும் பெரிடோன்ட்டல் நோய் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதை தடுக்கிறது. வீக்கமடைந்த ஈறுகள் சர்க்கரை நோயை அதிகரிக்ககூடும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும்.

கர்ப்பகால பிரச்சினைகள்

கர்ப்பகால பிரச்சினைகள்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பற்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமான ஒன்று. கர்ப்பகாலத்தில் பெண்களுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களின் ஈறுகளை எளிதில் பாதிப்படைய செய்யும். கர்ப்பகாலத்தில் அம்மாவின் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் குழந்தையையும் பாதிக்கும். வாய் ஆரோக்கியம் பாதிக்கப்டும்போது குழந்தைகள் முன்கூட்டியே பிறக்க அல்லது குறைவான எடையில் பிறக்க வாய்ப்புள்ளது. ஈறுகளின் மோசமான ஆரோக்கியம் தாய் மற்றும் குழந்தை இருவர் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கருவுறுதல் பிரச்சினை

கருவுறுதல் பிரச்சினை

மோசமான வாய் ஆரோக்கியத்திற்கும் பெண்கள் கருவுறாமல் போவதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. சுகாதாரமில்லாத ஈறுகள் உடலில் பல ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கும், இதனால் பெண்களால் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிக்க இயலாது. சீரான பற்கள் ஆரோக்கியம் இருக்கும் பெண்களை விட மோசமான பற்கள் ஆரோக்கியம் இருக்கும் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விறைப்பு பிரச்சினை

விறைப்பு பிரச்சினை

வாய் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்காதது ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான பெரிடோன்ட்டல் நோயானது விறைப்பு பிரச்சினையுடன் தொடர்புடையது. சிபிடி என்பது ஈறுகள் பற்களை விட்டு வெளியேறும்போது அது அதிகளவு பாக்டீரியாக்களை வெளியிடும் பைகளை உருவாக்குகிறது, இதனால் இது எலும்புகளை சுற்றி பரவுகிறது. ஈறுகளில் இருந்து வெளிபடும் இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலக்கும்போது அது வீக்கத்தை ஏற்படுத்தும். இது பிறப்புறுப்புக்கு செல்லும் இரத்தத்தை தடுக்கிறது. பிறப்புறுப்புக்கு இரத்தம் செல்லாதபோது தானாக விறைப்பு பிரச்சினை ஏற்படும்.

MOST READ: ஆஃபீஸில் சுய இன்பம் காண #Masturbation ப்ரேக் எடுத்து வந்த பெண்மணி!

புற்றுநோய்

புற்றுநோய்

உண்மையில், மோசமான வாய் ஆரோக்கியம் மற்றும் புகையிலை பயன்பாடுகள் வாய் மற்றும் தொண்டை புற்றுநோயை உண்டாக்கும். ஆனால் மற்ற புற்றுநோய்களுக்கும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது. வாய் சுகாதாரம் இல்லாதவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய், இரத்த புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய்

சிறுநீரக கோளாறுகள் சிறுநீரகம், இதயம், எலும்புகள் மற்றும் இரத்த அழுத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் பெரிடோன்ட்டல் தொற்றுநோய் சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஈறுகளில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும் இதனால் மேலும் பல தொற்றுநோய்கள் ஏற்படும். வாய் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாதுகாக்கும் முறைகள்

பாதுகாக்கும் முறைகள்

வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு சில வழிகள் உள்ளது. தினமும் இரண்டு முறை பற்களை விளக்குவது, பற்களை உலர்வாக வைத்திருப்பது, புகைபிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை மெல்லுவது, சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது, சீரான உணவுமுறையை பின்பற்றுவது போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

MOST READ: காலையில எழும்போது இந்த அறிகுறிகள்லாம் இருந்தா உங்களுக்கு குடலிறக்கம் இருக்குனு அர்த்தம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health issues caused by bad oral health

Oral health is about so much more than just the health of the mouth, teeth, and gums. Poor oral health can have negative consequences for the entire body.
Desktop Bottom Promotion