பசும்பால், எருமைப் பால் தெரியும்? ஆலமர, அரசமர பால் தெரியுமா? இதோ அதன் நன்மைகள்!

Posted By: Sadhishkumar T
Subscribe to Boldsky

இயற்கையாகவே மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தரும் மூலிகைகளில் மரங்களுக்கென  தனியிடம் எப்போதும் உண்டு. அதிலும், பட்டைகளில் பால் வடியும் மரங்களை, சிறந்த பலன் தரும் அதிசய மரங்கள் என்பார்கள்.

அவற்றில் நால்பா மரம் எனும் ஆலமரம், அரசமரம், அத்திமரம், இத்திமரம் போன்றவை குறிப்பிட்டு சொல்லுப்படும் மரங்களாகும். காயகற்ப மூலிகையான வேப்பமரத்தின் பாலும், நற்பலன்கள் மிக்கதாகும்.

இந்த மரங்கள், மனிதரின் உடல் வியாதிகளைப் போக்கி, ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

tree milk health tamil

ஆலமரம், விழுதுகளுடன் ஓங்கி உயர்ந்து வளரும் தன்மை கொண்டது, இவற்றின் மரப்பட்டைகள் சித்த மருத்துவத்தில் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வாகும். இந்தப் பட்டைகளைக் கீறும்போது, அதிலிருந்து பால் வடியும். இந்தப் பால் பல்வேறு உடல் நலக் கோளாறுகளைத் தீர்க்கும் குணடுடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலமரப்பால்!

ஆலமரப்பால்!

ஆலமரம், மனிதனுக்கு உடல்நல பாதிப்பைத் தரும் முக்குற்றங்களில், வாதம்,

பித்தம் ஆகிய இரண்டின் பாதிப்புகளையும் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சி

தரும். ஆண் மற்றும் பெண் இருவரின் அந்தரங்க உறுப்புகளில் உண்டாகும்

வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது.

அடிபட்ட காயத்துக்கு ஆலமரத்தின் பாலை, அடிபட்ட காயங்களில் தடவி வர, சீழ்

வைக்கும் நிலையில் உள்ள காயங்கள்கூட விரைவில் ஆறி, தழும்பு விட்டுவிடும்.

பித்த வெடிப்பு நீங்க!

பித்த வெடிப்பு நீங்க!

சிலருக்கு, உடலில் ஏற்படும் வாத பாதிப்பு எனப்படும் பித்தக் கோளாறால், கால்

பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு, அவற்றில் சிறு கல்லோ மணலோ புகுந்து, வேதனை

அளிக்கும். இந்த பாதிப்பை சரிசெய்ய, தினமும் இரவுவேளைகளில், கால்களை நன்கு

அலசி, சுத்தம் செய்துவிட்டு, கால் வெடிப்புகளில், ஆலமரப்பாலை ஊற்றி தடவி

வர, சில நாட்களில், கால் பித்தவெடிப்பு மறைந்துவிடும்.

மூட்டுவலி,வீக்கம் குறைய!

மூட்டுவலி,வீக்கம் குறைய!

உடலில் வாயுத்தொல்லை அதிகரிப்பதால், கைகால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு,

நடப்பதில், அமர்வதில் பெரும் சிரமம் ஏற்படும். ஆலமரப்பாலை, மூட்டுகளில்

தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவர, வீக்கம் கரைந்துவிடும்.

தொடைகளின் இடுக்கில் வரும் நெரிகட்டிய வீக்கங்களுக்கும் தடவலாம்.

அரச மரப்பால்!

அரச மரப்பால்!

பித்தம், கபம் எனும் சூட்டையும், கெட்ட நீரையும் சரியாக்கும் தன்மைமிக்க

அரச மரப்பால், காயம், இரத்தம் சார்ந்த பாதிப்புகளை குணமாக்க வல்லது.

உடலில் ஏற்படும் காயங்களை ஆற்ற, அரச மரப்பாலை, காயங்களின் மேல் இட்டுவர,

சில நாட்களில், காயங்கள் ஆறிவிடும்.

சிலருக்கு உடலில் அடிபட்டதாலோ, உடல் உறுப்புகளின் பாதிப்பினாலோ, உடலில்

வீக்கங்கள் உண்டாகும், அரச மரப்பாலை, வீக்கங்களின் மேல் இட்டு தினமும்

தடவிவர, வலி குறைந்து, வீக்கங்கள் விரைவில் வற்றிவிடும்.

சிலருக்கு மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படும், இதை நிறுத்த, அரச மரப்பாலை,

மூக்கின் மேல் தடவி வர, விரைவில் நலமாகும்.

அத்திப்பால்!

அத்திப்பால்!

அத்திப்பால், உடல் சூடு மற்றும் உடலில் உள்ள கெட்டநீரைப் போக்கி, இரத்தத்தை

தூய்மை செய்து, உடல் பாதிப்புகளைச் சரிசெய்யக்கூடியது. உடல் எரிச்சலைப்

போக்கி, மூலத்தை குணமாக்கும்.

உடலில் இரத்தம் பாதிக்கும்போது, அதன் அறிகுறிகளாக, கட்டிகள் அல்லது

வீக்கங்கள் உடலில் தோன்றும், இந்த பாதிப்புகளைப் போக்க, அத்திமரத்தின்

கிளைகளை அல்லது மரத்தின் தண்டுப்பகுதியை சிறு கத்தியால் கீற, கெட்டியான

பால் வெளியேறும், இந்தப்பாலை, உடலில் உள்ள கட்டி அல்லது வீக்கத்தில் தடவி

வர, அவை விரைவில் குணமாகி விடும். வலியும் நீங்கிவிடும்.

இந்தப்பாலை, காயங்களின் மேல் தடவி வர, அவை விரைவில் ஆறிவிடும்.

இத்திப்பால்!

இத்திப்பால்!

உடல் சூடு மற்றும் கப பாதிப்புகளை தணித்து, உடலுக்கு குளிர்ச்சி தரும்,

உடல் சோர்வு, கிறக்கம், பெண்களின் அந்தரங்க உறுப்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும்.

உடலில் இரத்தம் கெடுவதால் ஏற்படும் வீக்கங்களுக்கு, இத்திப்பாலைத் தடவிவர,

விரைவில் வீக்கம் வடிந்துவிடும்.

இரத்த நச்சுக்களால், சருமத்தில் ஏற்படும் அரிப்பு போன்றவை குணமாக, அரிப்பு

உள்ள இடங்களில் பாலைத் தடவி, இத்திப் பட்டை நீரில் அலசிவரலாம்.

எருக்கம்பால்!

எருக்கம்பால்!

தொன்மையான எருக்கு, இறை வழிபாட்டில், மந்திர தந்திர மூலிகைகளில்

முக்கியத்துவம் பெற்ற எருக்கம் செடியில் கிடைக்கும் பால், வாத பாதிப்புகளைத் தடுக்கும்.

விஷ வண்டுகள், குழவி போன்றவை கொட்டிய இடங்களில், எருக்கம்பாலைத் தடவி வர,

விஷம் முறிந்து, வலி நீங்கிவிடும்.

எருக்கம்பாலை சிறிது நாட்டு நல்லெண்ணையில் சேர்த்து கலக்கி, அதில் ஓரிரு

துளிகள் மூக்கில் விட, தும்மல்கள் ஏற்பட்டு, தலையில் உள்ள நீரெல்லாம்

வெளியேறி, தலைபாரம், தலைவலி தீரும். முகத்தை குளிர்ந்த நீரால் அலச, தும்மல் நின்றுவிடும்.

உடல் வீக்கம் கட்டிகளுக்கு, எருக்கம்பாலைத் தடவிவர, விரைவில் குணமாகும்.

எருக்கம்பாலை, ஈறு வீக்கம், சொத்தைப்பல்லில் வைத்துவர, வலிகள் நீங்கிவிடும்.

காயகற்ப மூலிகை, கணை எருமை விருட்ச பால்!

காயகற்ப மூலிகை, கணை எருமை விருட்ச பால்!

முறையான உணவுக்கட்டுப்பாடு, விரதத்துடன் காயகற்ப மூலிகைகளை சாப்பிட, உடல்

வளமாகி, மனதில் உற்சாகத்துடன், நற்சிந்தனையுடன் நெடுநாள் ஆரோக்கியத்துடன்

வாழலாம் என்பார்கள் சித்தர்கள்.

அத்தகைய காயகற்ப மூலிகைகளில் ஒன்று, கணை எருமை விருட்சம் எனும் மரத்தின் பாலாகும்.

அந்த மரம், பொதுவாக எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. அவை அடர்ந்த

வனங்களில், யாருமறியா இடங்களில் வளர்பவை. மனிதர் நடமாட்டம் தொலைவில்

கேட்டாலே, எருமை போல கணைப்பவை என்பதால், இந்த மரத்தை கணை எருமை விருட்சம்

என்று குறிப்பிட்டார்கள், சித்தர்கள்.

இந்த மரத்தின் தண்டுப்பகுதியில் பால் தோன்றி, அதன்பின் வற்றி முருங்கைப்

பிசின் போல ஆகிவிடும், இந்தப்பாலையோ பிசினையோ முறைப்படி சாப்பிட, உடல்

இறுகி, இளமையாகிவிடும்.

மனிதர்களுக்குக் கிடைக்காத, இந்த காயகற்பத்தை, கானகத்தில் உள்ள பறவைகள்,

விலங்குகள் விருப்பம் போல சாப்பிட்டு, காயகற்பம் உண்ட உற்சாகத்தில், உடலில்

இளமை வேகம் கொப்புளிக்க, இயற்கையை அழியாமல் காக்கின்றன.

இத்தகைய அரிய காயகற்ப மூலிகைப்பாலை நாம், சாப்பிட முடியவில்லையே, என்ற

வருத்தமா? கவலை வேண்டாம். நமக்கும் இருக்கிறது, ஒரு அரிய மூலிகைப்பால். அதை

நாம் முறையாக சாப்பிட, உடல் இளமையாகி, ஆரோக்கியமாக நெடுநாள் வாழலாம்.

எளிமையான மூலிகைப்பால்!

எளிமையான மூலிகைப்பால்!

தோல் சீவிய இஞ்சியை நசுக்கி, அத்துடன் பூண்டை தோல் நீக்கி நசுக்கி,

மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, ஒரு டம்ளர் நீரில் நன்கு காய்ச்சி, அந்த

மூலிகை நீரை காய்ச்சிய பாலில் கலந்து, சிறிது மஞ்சள்தூள் இட்டு,

பனங்கற்கண்டு சேர்த்து, காலைவேளைகளில், பருகிவர, உடலில் புத்துணர்வு

உண்டாகி, மனமும், முகமும் பொலிவாகும், இரத்த அசுத்தம் நீங்கி, உள்

உறுப்புகளின் செயல்கள் சீராகி, உடல் வலுவாகும்.

பருவு மாற்றங்களால் ஏற்படும் சளி, இருமல், ஜுரம் போன்றவை நெருங்காது,

உடலில் வாதம், பித்தம் சரியாகி, மூட்டுவலி பாதிப்புகள் அகன்றுவிடும்.

அத்துடன் உடலில் உள்ள கெட்டகொழுப்பு கரைந்து, தொப்பை வயிறு, ஒட்டிய வயிறு

போல, மாறிவிடும். பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளை குணமாக்கி, கட்டி

போன்ற கோளாறுகளைக் கரைத்து, அவர்களின் உடல்நலம் காக்கும்.

இந்த எளிய, மூலிகைப்பாலை, தினமும் அல்லது வாரமிருமுறை பருகிவரலாம்.

ஆயினும், குடல்புண், வாய்ப்புண் உள்ளவர்கள், இந்த மூலிகைப்பாலைப் பருகக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Tree Milk

Health Benefits of Tree Milk