Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..
சில சின்ன சின்ன வகை செடிகளின் பயன்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், இதில் தான் ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் தொப்பை குறைப்பு வரை, பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது இந்த டீ. இந்த டீயை குடித்து வருவதால் ஏரளமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இதனை மூலிகை டீயாகவும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த டீயை இந்த பதிவில் கூறுவது போன்று தயாரித்து குடித்தால் உடலில் எந்த வித நோய்களும் உண்டாகாமல் அதிக ஆயுளுடன் நீங்கள் வாழலாம். அப்படி என்னதான் இந்த எலுமிச்சை புல்லில் உள்ளது என்கிற கேள்விக்கான விடை இதோ..!

உலக பிரசித்தி பெற்ற டீ..!
பொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் ஒருவிதமான டீ மிக பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இந்த எலுமிச்சை புல் டீ ஆசிய நாடுகள் மற்றும் தாய்லாந்தில் ரொம்ப பிரபலமானது. இதை குடிப்பதால் தான் அங்குள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

ஆயுர்வேத மூலிகை..!
இந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.

நோய்களை துரத்தும் புல்..!
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு
இந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஒல்லியாக மாற...
பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.

காலையிலே இந்த பிரச்சினையா..?
தினமும் காலையில் யாருக்கெல்லாம் இந்த மலச்சிக்கல் பிரச்சினை உள்ளதோ, அவர்களுக்கு வரப்பிரசாமாக உள்ளது எலுமிச்சை புல். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். சீனர்கள் இந்த டீயை அவர்களின் மருத்துவ பயன்பாட்டிற்கு பெரிதும் உபயோகித்தனர்.

நச்சுக்களை வெளியேற்ற
நமது உடலில் உள்ள அழுக்குகள் தான் நோயாக உருவாகிறது. இந்த அழுக்குகளை வெளியேற்றிவிட்டால் எந்தவித நோய்களும் உங்களை தாக்காது. இந்த எலுமிச்சை புல் டீயை குடித்து வந்தால் உடலில் சேரக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி விடும். அத்துடன் சிறுநீரக பாதையையும் சுத்தமாக வைத்து கொள்ளும்.

முடி கொட்டுதா..?
என்ன செய்தாலும் இந்த முடி கொட்டும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைக்க முடியலையே என்கிறவர்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. இந்த எலுமிச்சை டீ குடித்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிரும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைத்து விடலாம். இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி தான்.

மாதவிடாய் வலி...
பெண்களுக்கு ஏற்பட கூடிய பயங்கரமான வலியான இந்த மாதவிடாய் வலியை எளிதாக குணப்படுத்த கூடிய தன்மை இதற்கு உள்ளது. அத்துடன் உடலுக்கு அதிக வலிமையையும் இது தரக்கூடியது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளுமாம்.

எவ்வாறு தயாரிப்பது..?
இந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இதனை வடிகட்டி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
