For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்று உப்பசத்தை 2 வாரத்திலே குறைக்க இந்த இலைய சாப்பிட்டாலே போதும்...!

|

பொதுவாகவே நமக்கு இந்த காய்கறி, கீரை இத கண்டாவே எதோ ஒரு வித முக சுளிப்பு பலருக்கு ஏற்படும். பலர் பொதுவாக சாப்பிட கூடிய கீரைகளை கூட நாம் ஒதுக்கி வச்சிடுவோம். இதுல இந்த முள்ளங்கி இலை வேற..! ஆனால், இதுல இருக்குற ஆயுர்வேத தன்மைகளை தெரிஞ்சிக்கிட்டீங்கனா, இனி இத தூக்கி போடமாட்டீங்க.

வயிற்று உப்பசத்தை 2 வாரத்திலே குறைக்க முள்ளங்கி இலைய இப்படி சாப்பிடுங்க..!

உங்கள அதிக காலம் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வைத்து கொள்ள, இந்த முள்ளங்கி இலை பயன்படுதுனு தற்போதைய ஆராய்ச்சி சொல்லுதுங்க. சாதாரண இந்த இலைக்குள்ள அப்படி என்ன அற்புதம் இருக்குன்னு யோசிக்கிறவங்களுக்கே இந்த பதிவு. வாங்க, முள்ளங்கி இலைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்குற மர்மத்தை தெரிஞ்சிப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குப்பையில் உள்ள முத்துக்கள்..!

குப்பையில் உள்ள முத்துக்கள்..!

பெரும்பாலும் நாம் குப்பை என நினைத்து, தூக்கி போட கூடிய உணவு பொருட்களில் ஏராளமான பயன்கள் உள்ளது என ஆய்வுகளும் சொல்கிறது. சாதாரண உருளைக்கிழங்கு தோல் முதல் இந்த முள்ளங்கி இலை வரை இது சாத்தியம் ஆகியுள்ளது. எனவே குப்பையில் ஒரு பொருளை போடுவதற்கு முன் அதன் பலனை தெரிந்து கொள்ளுங்கள்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம்..!

ஊட்டச்சத்துக்கள் அதிகம்..!

முள்ளங்கி இலையில் பலவித ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றின் ஆரோக்கிய தன்மைக்கு காரணம் இதிலுள்ள இரும்புசத்து, கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களே. மேலும் இது உடலில் உள்ள குறைபாடுகள் பலவற்றை சரி செய்யவல்லது.

சிறுநீரக கற்களா..?

சிறுநீரக கற்களா..?

சிறுநீரக கற்களை கரைக்க கூடிய அற்புத மகிமை இந்த முள்ளங்கி இலைக்கு உள்ளதாம். இவை இயற்கையிலே அதிக நீர்ச்சத்தை கொண்ட உணவாகும். மேலும், சிறுநீரக பாதையில் உள்ள அடைப்புகளையும் இந்த முள்ளங்கி இலை சரி செய்து விடுமாம்.

வலுவான உடலுக்கு...

வலுவான உடலுக்கு...

எதற்கெடுத்தாலும் நோய்வாய்பட்டு கஷ்டப்படுபவர்கள் இன்று அதிகமாகி விட்டனர். இதற்கு முக்கிய காரணம் எதிர்ப்பு சக்தி குறைவு தான். நீங்கள் முள்ளங்கி இலையை உணவில் சேர்த்து கொளவ்தன் மூலமாக எளிதில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடுமாம். இதற்கு முழு காரணம் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான்.

MOST READ: உங்கள் காதலி (அ) மனைவி இதையெல்லாம் செய்வதால் நாளடைவில் மரணம் கூட நேரலாம்..!

பெரிய பிரச்சினைக்கு கூடவா..?

பெரிய பிரச்சினைக்கு கூடவா..?

ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரையின் அளவை குறைக்க இந்த முள்ளங்கி இலை பயன்படும் என ஆய்வுகள் சொல்கிறது. இந்த முள்ளங்கி இலை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக கிடைத்த வரப்பிரசாதமே. இதனை மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது நல்லது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு அருமையான மருந்தாக இந்த முள்ளங்கி இலை உள்ளது. இதனை 10 நாட்களுக்கு அரை கிளாஸ் முள்ளங்கி இலையை சாறு போல குடித்து வந்தால் இதன் வீரியம் உடல் முழுக்க பரவி, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக செயல்பாடும்.

அழுக்குகளை வெளியேற்ற...

அழுக்குகளை வெளியேற்ற...

முள்ளங்கி இலை ஒரு சிறந்த மூலிகை போல உங்கள் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகம் உள்ளதால் நச்சுக்களை எளிதாக வெளியேற்றி விடும்.

வயிற்று உப்பசம் குறைய

வயிற்று உப்பசம் குறைய

காரணமே இல்லாமல் உங்களின் வயிறு உப்பி போய் கிடக்கிறதா..? இதற்கு சிறந்த தீர்வை இந்த முள்ளங்கி இலை தருகின்றது. முள்ளங்கி சர்கரை தொடர்ந்து சிறிதளவு குடித்து வந்தாலோ அல்லது உணவாக சமைத்து சாப்பிட்டாலோ வயிற்று உப்பசம் குறைந்து விடும். அத்துடன் பசியின்மையையும் குணப்படுத்தி விடும்.

MOST READ: டாக்டர் கிட்ட போகறதுக்கு முன்னாடி உடலுறவு வைச்சிக்கணுமாம்..! ஏன்னு தெரியுமா..?

மூட்டுகள் வலிமை பெற

மூட்டுகள் வலிமை பெற

இப்போதெல்லாம் 25 வயதை தாண்டினாலே மூட்டுகள் வலிக்க தொடங்கி விடுகிறது. மூட்டு சார்ந்த பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டுவர இந்த முள்ளங்கி இலை சாறு போதும். இந்த சாற்றை மூட்டுகளில் தடவினால் வலிகள் பறந்து போய் விடும்.

மலச்சிக்கலா..?

மலச்சிக்கலா..?

மலம் கழிக்கும் போது ரொம்ப கஷ்டப்படுறீங்களா..? உங்களின் இந்த பிரச்சினைக்கு எளிமையான தீர்வை தருகின்றது இந்த முள்ளங்கி இலை. மேலும், மலம் கழிக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்கவும் செய்கிறது. இதனை பவ்டராக்கி சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டாலோ அல்லது அந்த இடங்களில் தடவினாலோ வீக்கம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits Of Eating Radish Leaves

Here are some health benefits of eating radish leaves.
Desktop Bottom Promotion