For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓடி விளையாடு பாப்பா என பாரதி சொன்னதற்கு காரணம் தெரியனுமா...? இதை படியுங்கள்

பச்சை குதிரை, மேடு பள்ளம்,நொண்டி, லகோரி, கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் இப்படி நம்மளுடைய விளையாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகும். நாம் அன்று விளையாடிய ஒவ்வொரு விளையா

|

சின்ன வயசு நினைவுகள் எல்லாமே மிகவும் அழகானவை. அதிலும் விளையாட்டு சார்ந்த அனைத்தையும் நம்மால் மறக்கவே முடியாது. தினமும் காலை முதல் மாலை வரை எல்லா நேரமும் நமக்கு மகிழ்ச்சிகரமான பொழுதாகவே கடந்து சென்றன. "அது ஒரு அழகிய நிலா காலம்" என்று மனதுக்குள் பாட்டு சத்தம் இன்றும் கேட்டு கொண்டே இருக்கும். பச்சை குதிரை, மேடு பள்ளம்,நொண்டி, லகோரி, கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் இப்படி நம்மளுடைய விளையாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

traditional indoor games of tamil nadu

நாம் அன்று விளையாடிய ஒவ்வொரு விளையாட்டிற்கு பின்னும் ஒரு பெரிய அறிவியலும், உளவியல் சார்ந்த ஆரோக்கியமான பல விஷயங்களும் இருக்கின்றன. இன்றும் கூட அதற்கான வாழ்வியல் அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்ளாமலையே பல வருடங்களை கடந்து வந்துவிட்டோம். ஒவ்வொரு விளையாட்டிற்கு பின் இருக்கும் வாழ்வியல் பிணைப்பை இந்த பதிவில் அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல்லாங்குழி :-

பல்லாங்குழி :-

கணக்கு என்றவுடனே பயந்து செல்லும் இந்த காலத்து குழந்தைகள் போல அப்போதுலாம் இல்லை. எவ்ளோ பெரிய கணக்கையும் அசால்ட்டாக செய்துவிடும் அளவிற்கு அந்த காலத்து குழந்தைகளிடம் நிறைய திறன் இருந்தது. இதற்கு ஒரு முக்கிய சான்று "பல்லாங்குழி". இந்த விளையாட்டு புத்தி கூர்மையை அதிகரித்து கணக்குகளை மிக விரைவிலேயே முடித்து விடும் திறனை வளர செய்யும்.

பச்சை குதிரை :-

பச்சை குதிரை :-

பச்சை குதிரைக்கும் வாழ்க்கைக்கும் மிக முக்கிய பிணைப்பு உள்ளது. இந்த விளையாட்டில் தோற்ற ஒருவரை குனிய வைத்து, மற்றவர்கள் அவரை தாண்ட வேண்டும். இதில் பல நிலைகள் உள்ளது. இந்த விளையாட்டை வாழ்க்கையுடன் நாம் ஒப்பிட்டு பார்த்தால், நாம் தினந்தினமும் சந்திக்க நேரும் வெற்றி மற்றும் தோல்விகளை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதை உணரலாம். இந்த விளையாட்டு குழந்தை பருவத்திலேயே நம் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை கையாள கற்று கொடுக்கிறது. மேலும் இது உடல் ஆரோக்கியத்தை சீராக்கி, சுறுசுறுப்பாக இருக்கவும் செய்யும்.

7 கற்கள் :-

7 கற்கள் :-

இது மிகவும் சுவாரசியமான ஒரு விளையாட்டு. இன்றைய குழந்தைகள் ஸ்மார்ட் போன்களில் தங்கள் முழு நேரத்தையும் வீணடித்து விடுகின்றனர். அத்துடன் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளால் அவதியும் படுகின்றனர். இதனை சரி செய்கிறது இந்த விளையாட்டு. ஓடி ஆடி விளையாடுவதால் இது உடலுக்கு நல்ல வலிமையை தரும். மேலும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் நன்கு உதவும்.

தட்டாங்கள் :-

தட்டாங்கள் :-

இந்த விளையாட்டை பெண் குழந்தைகளே அதிகம் விளையாடுவார்கள். 1 கல்லை கொண்டு மற்ற 6 கற்களையும் பிடிக்க வேண்டும். இதில் அடுத்த அடுத்த நிலைகளும் உண்டு. இந்த விளையாட்டு அதிக கவனத்தையும், சீரான மன பக்குவத்தையும் தர உதவும். இந்த விளையாட்டு குழந்தை நலனுக்கு அதிகம் பயன்படும்.

பட்டம் விடுதல் :-

பட்டம் விடுதல் :-

வானத்தில் பார்க்க வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசைகளாக இன்றளவும் மனதில் இருக்கும் ஒன்று. இந்த ஆசையை சிறு வயதிலே பட்டம் விடும் விளையாட்டு நிறைவேற்றியது. இது நம் வாழ்வில் நாம் அடையக்கூடிய உயரத்தை குறிக்கும். மேலும் இது வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு சமாளித்து முன்னேறி வர வேண்டும் என்பதையும் கற்று கொடுக்கும்.

கோலி :-

கோலி :-

அனைத்து குழந்தைகளும் சிறு வயத்தில் தங்களுக்கென ஒரு ஸ்பெஷல் கோலி குண்டை எப்போதும் கையில் வைத்து கொண்டே இருப்பார்கள். இந்த விளையாட்டில் ஒரு கோலியை வைத்து மற்ற கோலியை குறி பார்த்து அடிக்க வேண்டும். கண்களின் கூர்மையையும், புத்தி கூர்மையையும் இது அதிகரிக்கும்.

தாயம் :-

தாயம் :-

முக்கியமான ஆர்வமுள்ள விளையாட்டு இது. குழந்தைகள் தங்கள் நாள் முழுவதும் கூட இந்த விளையாட்டை விளையாடி கொண்டே இருப்பார்கள். இது கிட்டத்தட்ட அதிர்ஷ்டத்தை கொண்டே நிர்ணயிக்க படுகிறது. இருப்பினும் வெற்றி தோல்வி வாழ்க்கையில் சமமே என்பதை நன்கு உணர்த்தி செல்கிறது.

கில்லி :-

கில்லி :-

கிரிக்கெட்டின் அடிப்படையே நம்ம கில்லி தாங்க. கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு உடலுக்கு நலனை தருகிறதோ அதே போன்றுதான் இந்த கில்லியும். ஓடி ஆடி விளையாடுவதால் கால், கைகளுக்கு அதிக பலத்தை தரும். மேலும் குறிப்பார்த்து அடிப்பதால் புத்தி கூர்மையை அதிகரிக்க செய்யும்.

நிலா கும்பல் :-

நிலா கும்பல் :-

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒற்றுமையை கற்று கொடுக்கிறது இந்த விளையாட்டு. ஒரு மனிதன் தன் வாழ்வில் எவ்வாறு ஒற்றுமையாக இருந்து எல்லா காரியங்களையும் சாதிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அத்துடன் இந்த விளையாட்டில், ஒளித்து வைத்திருக்கும் பொருட்களை கண்டு பிடிக்கும் பட்சத்தில் நம் வாழ்வில் சில சமயங்களில் நாம் மகிழ்ச்சியின்மையால் இருக்கும் நிலையில் அவற்றை கண்டறிய உதவும்.

இந்த விளையாட்டுகளை நீங்கள் சிறு வயதில் விளையாடி இருந்தால் இதன் நன்மைகளை உணர்த்து உங்கள் குழந்தைகளுக்கும் கற்பியுங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits behind tamil nadu traditional games

What’s common between the terms Pagade, Nondi, Pallanguzhi, koli, 7 stones. Here's a clue - they are an integral part of Tamil culture and have been around for centuries.
Desktop Bottom Promotion